2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவித்த டிரையம்ப்

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 21 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி உள்ளாடை தெரிவுகளை வழங்கி வரும் டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனம் அண்மையில் கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற வருடாந்த விற்பனை மாநாட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவித்து வெகுமதிகளை வழங்கியிருந்தது. ICC கிரிக்கெட் உலக கிண்ணம் 2015 போட்டியின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்விற்கிணையாக இந்த ஆண்டு மாநாடு கிரிக்கெட் கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் டிரையம்ப் நிறுவனத்தின் நேரடி விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனை பங்காளர்கள், விநியோகஸ்தர்கள், முக்கிய கணக்குப் பங்காளர்கள் மற்றும் முக்கிய பங்கு உரிமையாளர்கள் ஆகியோரின் சிறப்பான சாதனைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. உள்நாட்டு சந்தையில் புதிய வரையறைகள் மற்றும் தங்கள் இலக்குகளையும் எய்துவதற்கு இரவு பகல் பாராது கடுமையாக உழைத்த டிரையம்பின் சிறந்த செயற்பாட்டாளர்களின் முயற்சிகளை கௌரவிக்கும் நிகழ்வாக இம் மாநாடு விளங்குகிறது. 

இந் நிறுவனம் பாரம்பரியமாக புதுமையான உற்பத்திகளை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. பெண்களின் உடலமைப்பு தொடர்பில் ஆழமான அறிவு மற்றும் புரிந்துணர்வை கொண்டுள்ள டிரையம்ப் போட்டிகளுக்கமைய தொழிற்துறை தரங்களை அமைத்து வருகிறது. டிரையம்ப் நிறுவனம் தற்போது உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்கள் குறித்தே அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. டிரையம்ப்பின் வெற்றியில் அதன் பங்காளர்கள் குழுமம் முக்கிய பங்கினை வகிக்கிறது. அவர்களுடைய ஆதரவின்றி, டிரையம்ப் நிறுவனத்தினால் நிச்சயமாக உள்நாட்டு சந்தையில் இத்தகைய ஸ்தானத்தை அடைந்திருக்க முடியாது. கடந்த 2014 ஆம் ஆண்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய சிறந்த செயற்பாட்டாளர்கள் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். டிரையம்ப் நிறுவனத்தின் எதிர்கால இலக்குகள் மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் பங்குதாரர்களை ஊக்குவிப்பது போன்றவற்றை கலந்துரையாடுவதற்கான முக்கிய மாநாடாக இது விளங்குகிறது.

கிரிக்கெட் கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற நிகழ்வினை டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்காவின் தலைமை செயற்பாட்டு அதிகாரி அமல் பெர்னாண்டோ அவர்கள் 2015 ஆம் ஆண்டிற்கான டிரையம்ப்பின் குறிக்கோளினை பகிர்ந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். 

'கடந்தாண்டுகளில் எமது உள்நாட்டு விற்பனை பங்குதாரர்களின் அதியுயர் சாதனைகள் குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது நிறுவனத்தின் வளர்ச்சியில் எமது பங்காளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களது தனிப்பட்ட அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் நிலைபேறுதன்மை ஆகியன வர்த்தக குறியீட்டினை இலங்கையில் மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எமது வர்த்தகத்தின் முதுகெலும்பாக விளங்கும் எமது விற்பனை குழுவினரை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். எமது விற்பனை குழுவினர் எமது பங்குதாரர்களுடன் இணைந்து தமது சிறப்பான செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பர் எனவும், 2015 மற்றுமொரு அற்புத ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கிறோம்' என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி அமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

'2014ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக டிரையம்பிற்கு அமைந்திருந்ததுடன், ஆசியா முழுவதும் 2ஆவது மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக டிரையம்ப் அமைந்துள்ளது. டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் இலங்கை குழுவினர் மற்றும் எமது வணிக பங்காளர்களின் அர்ப்பணிப்பானது பாராட்டு மற்றும் அங்கீகாரத்தை பெற வழிகோலியுள்ளது' என இந்தியா மற்றும் இலங்கைக்கான பொது முகாமையாளர் சலிந்த்ர பெர்னாண்டோ தெரிவித்தார்.

'நாம் கடந்தாண்டில் பல தடைகளை சந்தித்திருந்த போதிலும் 2014 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்திருந்து. கடந்த 2014இல் எமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ளவும், உங்கள் பெறுமதியான பங்களிப்பின்றி இந்த வெற்றி சாத்தியமில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்' என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் விற்பனை தலைவர் சஜீவ திலகரத்ன தெரிவித்தார்.

Key Account Partner 01 பிரிவில் Nolimit நிறுவனம் தங்க விருதை வென்றது. அதேபோன்று, வெள்ளி விருதை Glitz நிறுவனமும், Cool Planet நிறுவனம் வெண்கல விருதினையும் வென்றெடுத்தது. Key Account Partner 2 பிரிவில் தங்க விருதை CIB நிறுவனமும், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை முறையே ASB Fashion மற்றும் Thiyangara ஆகியன வென்றிருந்தன. Key Account Partner 3 பிரிவில் பெஷன் பக் நிறுவனம் தங்க விருதினையும், Beverley Street மற்றும் Romafore ஆகியன முறையே வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை தனதாக்கிக் கொண்டிருந்தன.

இந் நிகழ்வில் வருடத்திற்கான மிகச்சிறந்த விநியோகஸ்தர் நிலையத்திற்கான தங்க விருது நளினி சந்திரமோகன் வென்றார். அதே பிரிவில், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை முறையே எம்.ஜே.பெரேரா மற்றும் ருக்லாந்தி தலகுணே ஆகியோர் வென்றெடுத்தனர். உயர் வருமானத்தை பதிவு செய்த வியாபார நிலையங்களுக்கான தங்க விருதுகளை தீபா நக்தால் மற்றும் எம்.ஜே.பெரேரா ஆகியோர் வென்றிருந்தனர்.

மேலும் வருடத்திற்கான சிறந்த நேரடி விற்பனை ஆலோசகருக்கான தங்க விருதை அனுஷா தமயந்தி வென்றெடுத்தார். வருடத்திற்கான சிறந்த விற்பனை ஆலோசகர் விருது சலிந்தி நடராஜா வென்றார். வட மாகாணத்திற்கான ஆண்டின் சிறந்த விநியோகிப்பாளருக்கான விருது Sriyani Dress Pointமும், தென் மாகாணத்திற்கான ஆண்டின் சிறந்த விநியோகிப்பாளருக்கான விருதை Thilakawardana Textiles ஆகியன வென்றெடுத்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X