2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஹார்பிக் உயர்தர கழிவறை தூய்மையாக்கல் தீர்வுகள் அறிமுகம்

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 21 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதல் தர கழிவறை தூய்மையாக்கல் தயாரிப்பு நாமமான ஹார்பிக், தனது புதிய உயர் தர தீர்வுகளான ஹார்பிக் டோடல் பவுடர் மற்றும் ஹார்பிக் அல்ட்ரா பவர் போன்றன ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தால் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கழிவறை தூய்மையாக்கலில் பொதுவாக காணப்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இந்த இரு தெரிவுகளும் ஹார்பிக் தெரிவுகளில் இணைந்து வலுச்சேர்த்துள்ளன. 

புத்தம்புதிய ஹார்பிக் அல்ட்ரா பவர் என்பது ஹார்பிக்கின் வலிமையான திரவ தயாரிப்பாகும். கழிவறையில் காணப்படும் கிருமிகள் மற்றும் கறைகளுக்கு எதிராக போராடக்கூடிய சிறந்த சேர்மானமாக இது அமைந்துள்ளது. இதன் மூலமாக துர்நாற்றங்கள் அகற்றப்படுவதுடன், நீர்நிலைகளின் கீழ் பகுதிகளிலும் தூய்மையாக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் அடங்கியுள்ள விசேட சேர்மானத்தின் காரணமாக, நீருடன் தொடுகையை ஏற்படுத்தியதும் நிறத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது. கடுமையான கறைகளை அகற்றுவதுடன், 99.9 சத வீதமான கிருமிகளையும் கொல்கின்றது. இதில் காணப்படும் உயர்தர தூய்மையாக்கல் செயற்பாட்டின் மூலமாக கடுமையான கறைகள் இலகுவாக அகற்றப்படுகிறது.

புதிய ஹார்பிக் டோடல் பவுடர் என்பது, குளியலறை நிபுணத்துவம் வாய்ந்த தயாரிப்பாக அமைந்துள்ளது. பல் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலமைந்த, குளியலறையில் காணப்படும் கடுமையான கறைகள் மற்றும் அபாயகரமான கிருமிகளை இலகுவாக அகற்றும் ஆற்றல் படைத்த தூய்மையாக்கல் பவுடர் வகையாகும். இதில் காணப்படும் நீல நிற பதார்த்தங்களின் மூலம் மறைந்திருக்கும் கிருமிகளை அகற்றுவதற்கு அவசியமான அதிகளவு நுரையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதற்கு, குளியலறை நிலப்பகுதியிலும், பேசின்கள் மற்றும் டைல்கள் மற்றும் ஹார்பிக் டோடல் பவுடரை தூவி நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். நன்றாக பிரஷ் செய்து, தூய்மையான நீரை கொண்டு கழுவுவதன் மூலம் பளபளப்பான குளியலறையை பெற்றுக் கொள்ளலாம்.

'ஹார்பிக் பவுடர் என்பது, தயாரிப்பின் வினைத்திறன் மூலமாக, நுகர்வோரின் தன்னிறைவை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்' என சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளரான ருச்சிரா மனி கருத்து தெரிவித்தார். 

    'கழிவறை தூய்மையாக்கலில் ஹார்பிக் என்பது காலாகாலமாக உயர்தரத்தை பேணி தன்னை தன்னை அர்ப்பணித்துள்ளது. டோடல் பவுடர் மற்றும் அல்ட்ரா பவர் ஆகியவற்றின் அறிமுகங்களுடன், கழிவறை தூய்மையாக்கலில் நிபுணத்துவம் பெற்ற நாமமாக உயர்ந்துள்ளது. SLIM நீல்சன் மக்கள் விருதுகளுக்கமைவாக வீட்டின் பராமரிப்பு நாமமாக தெரிவு செய்யப்பட்டதை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது' என ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி சயிட் தன்சிம் ரெஸ்வான் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கழிவறை தூய்மையை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஹார்பிக் செயலாற்றி வருகிறது. கழிவறை தூய்மையாக்கலுக்கு புகழ்பெற்ற நாமமான ஹார்பிக், 'சனீபாரக்ஷக சேவாவ' எனும் தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் மூலமாக இலங்கையை பாதுகாப்பான மற்றும் தூய்மையான நாடாக கட்டியெழுப்பும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது. பாரியளவிலான சமய வைபவங்களின் போது நடமாடும் கழிவறை வசதிகள் ஹார்பிக் மூலமாக ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. ஆறு அங்கத்தவர்களை கொண்ட ஹார்பிக் நீல அணி, வீடுகளுக்கு விஜயம் செய்து, கழிவறை தூய்மைக்காக ஹார்பிக் பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன| என ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் வணிக பணிப்பாளர் சின்கிளெயார் குரூஸ் தெரிவித்தார்.

ஹார்பிக் தயாரிப்புகளின் தற்போதைய தெரிவுகள் உலகத் தரம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன இதில் ஹார்பிக் திரவ தயாரிப்புகள் மற்றும் பவுடர் வகைகயில் தயாரிப்புகள் காணப்படுகின்றன. ஹார்பிக் ஃப்லஷ்மெடிக் மற்றும் ஹார்பிக் ஹைஜின் போன்றன ஒவ்வொரு ஃப்லஷின் போதும் அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரு தயாரிப்புகளும் தற்போதைய தெரிவுகளுக்கு மேலும் பெறுமதி சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதுடன், நுகர்வோருக்கு தெரிவு செய்து கொள்வதற்கு மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாக அமைந்துள்ளது.

ஹார்பிக்கின் இந்த இரு புதிய தயாரிப்புகளையும் நாடு முழுவதிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X