2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

12ஆவது வருடத்தில் HSBC கொழும்பு பேஷன் வீக் 2015

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது வெற்றிகரமான 12ஆவது வருடத்தில் HSBC கொழும்பு பேஷன் வீக் (HSBC Colombo Fashion Week (CFW)) ஆனது 2015ஆம் ஆண்டின் Spring/Summer பருவகாலத்தை (SS15) புதுப்பிக்கின்றது. இந்த பருவகாலம் இலங்கை வடிவமைப்பார்கள் தங்கள் தொகுப்பினை கட்டமைத்து, இலங்கையிலும் இணையத்திலும் தமது வர்த்தக இருப்பினை உருவாக்கிக்கொள்வதன் ஊடாக சர்வதேச சந்தைகளில் அவர்களையும் உள்ளெடுத்து ஊக்குவித்தலை நோக்காக கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கொழும்பு பேஷன் வீக் ஆனது இலங்கையின் நவநாகரீக ஆடைத் தொழிற்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் வினைத்திறன் மிகு முயற்சிகளுடனேயே களமிறங்குகின்றது. இந்த வருடத்தில் கொழும்பு பேஷன் வீக் இன் முதன்மை இலக்காக பேஷன் வடிவமைப்பாளர்களின் பெயரைக் கட்டமைத்து, பேஷன் சந்தையில் அவர்களுக்கு தனியிடம் அளித்தலை நோக்காகக்கொண்டு செயற்படும் அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த PR முகவர் நிறுவனமான Omen PR உடன் உத்தியோகபூர்வ பங்குடமை ஒன்றில் இணைதல் விளங்குகின்றது. மேலதிகமாக கொழும்பு பேஷன் வீக் ஆனது இந்த வருடம் சரியான தருணத்தில் கொழும்பு பேஷன் வீக்கின் தலைவர் அஜய் வி.சிங் அவர்களை ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகரை தலைமையகமாக கொண்டு இயங்கும் கொமன்வெல்த் பேஷன் கவுன்சிலின் (Commonwealth Fashion Council, London, United Kingdom) ஸ்தாபக கவுன்சில் அங்கத்தவராக்கியுள்ளதன் (founding council member) மூலம் தன்னை மேலும் வலுவாக்கிக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் கொழும்பு பேஷன் வீக் கருப்பொருள் ஒன்றினை கருவாகக் கொண்டு தசாப்தங்களாக நவநாகரீகத்துறையில் தான்னம் செலுத்திய போக்கு அல்லது கருத்தாக்கம் (trend or concept) ஒன்றினை கொண்டாடுகின்றது. இந்த பருவகாலத்தில் கொழும்பு பேஷன் வீக்கின் அனைத்து நிகழ்வுகளிலும் மைய கண்கவர் கருப்பொருளாக ரை-டை (tie-dye) எனப்படும் கருப்பொருள் விற்பனைப்பொருட்களாகவும், இணைய தளங்களில் காட்சிப்பொருளாகவும் விளங்கும். ஹில்டன் நீச்சல்குளப்பகுதியானது இதற்கான கருப்பொருள் சார்ந்த பேஷன் கிராமமாக உருவாக்கப்படவுள்ளதுடன் கொழும்பு பேஷன் வீக்கின் அனைத்து நடவடிக்கைகளினதும் ஆற்றல்மிகு மத்திய நிலையமாகவும் திகழும்.

'எமது திட்டங்களின் படி 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகள் வர்த்தக முனைப்புகளை மேலும் தீவிரப்படுத்துவதிலும் இலங்கை வடிவமைப்பாளர்களை அமெரிக்கா, ஆசிய மற்றும் கொமன்வெல்த் நாடுகளின் புதிய சந்தைகளில் ஊக்குவிப்பதனையும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்தலை இலக்காய் கொண்டுள்ளோம். இலங்கை வடிவமைப்பாளர்கள் தங்கள் வடிவமைப்புகளை எவ்வாறு ஸ்திரத்தன்மையுடன் பேணுதல் என்பதையும், அவ்வாறு இல்லாவிடின், அவர்களின் படைப்புகள் வெறுமனே பொழுதுபோக்கு என்ற வகையில் வீணாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கடவுளின் அருளால், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு இந்த விடயத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்மாலியன்ற ஆதரவினை அளிப்போம்' என கொழும்பு பேஷன் வீக்கின் தலைவர் அஜய் வி.சிங் அவர்கள் குறிப்பிட்டார்.

2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் கொழும்பு பேஷன் வீக் ஆனது இலங்கை நவநாகரீக தொழிற்துறையின் பின்புலமாக விளங்குவதுடன், இலங்கை நவநாகரீக வடிவமைப்பாளர்கள் எதிர்கொள்ளும் தடைகளை தகர்த்து அவர்களுக்கு சிறந்த வெளிப்பாட்டினை அளித்தலை தமது முதன்மை விடயமாக கொண்டுள்ளது. கொழும்பு பேஷன் வீக், தம்மையொத்த சிந்தனை கொண்ட சக அனுசரணையாளர்களின் பங்களிப்பினைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. HSBC, Hilton கொழும்பு, லேன்ட் ரோவர், Wineworld, கொழும்பு ஜூவலறி ஸ்டோர்ஸ், யூனிலீவர், TATA ஹவுசிங், கொட்டன் கலெக்ஷன், ஹமீடியா, ரமணி பெர்ணாண்டோ சலூன்ஸ், லியோபேர்ணற்ஸ், Quintessentially ஆகிய அனுசரணையாளர்கள் கொழும்பு பேஷன் வீக்கின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகள் மீது நம்பிக்கை வைத்து தோள்கொடுக்கின்றனர்.

இந்த பருவகாலத்தில், கொழும்பு பேஷன் வீக் புகழ்பெற்ற பல உள்நாட்டு மற்றும் சர்வதேச வடிவமைப்பாளர்களின் புதிய தொகுப்புகளை 2015 மார்ச் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறும் பிரதான நிகழ்வுகளின் runway இல் காட்சிப்படுத்தும். சர்வதேச ரீதியில் இடம்பெற்ற பல்வேறு மதிப்பு மிக்க பேஷன் வாரங்களில் தமது படைப்புகளை அரங்கேற்றிப் புகழ்பெற்ற ஏழு சர்வதேச வடிவமைப்பாளர்களுக்கு இம்முறை இடம்பெறும் Spring/Summer 2015 பருவகால நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பேஷன் வீக்கின் வடிவமைப்பாளர் தெரிவுக்குழுவினால் அனாமதேயமாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வு நடவடிக்கைகள் மூலம் கவனமாக ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது உள்நாட்டு வடிவமைப்பாளர்களும் தமது புதிய ஆடைத்தொகுப்புகளை இந்த பருவகால கண்காட்சியில் காட்சிப்படுத்துவர். உள்நாட்டு வடிவமைப்பாளர்களை தேர்ந்தெடுத்த குழுவில் ஆசியாவின் மிக அனுபவமிக்க வடிவமைப்பாளர்களான பிபி ரசல், ரிஸ்வான் பேய்க், பிரசாத் பிட்டப்பா மற்றும் யோலன்ட் அளுவிஹார ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இவர்கள் யாவரும் உள்நாட்டு வடிவமைப்பாளர்களுக்கு ஒருங்கிணைந்த பின்னூட்டங்களை அளித்ததுடன், தமது தொகுப்புகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி பெட்ரிக் கலாக்ஹர் (Patrick Gallagher) அவர்கள் குறிப்பிடுகையில் 12 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் தமது முதல் பேஷன் கண்காட்சி நிகழ்வினை கொழும்பு பேஷன் வீக் நடத்தியது முதல், இந்த நிகழ்ச்சியானது வடிவமைப்பாளர்கள் மற்றும் மொடல்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் ஈர்ப்பு சக்தியாகவும், தென்னாசியாவில் பேஷன் தொழிற்துறையின் மையமாகவும், சர்வதேச ரீதியல் வர்த்தக சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வாய்ப்பினை அளிக்கும் ஒரு களமாகவும் திகழ்கின்றது. இந்த நிகழ்வின் வளர்ச்சி மற்றும் நவநாகரீக தொழிற்துறையின் வளர்ச்சி ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து, இந்த நிகழ்வின் பங்காளராக விளங்குகின்றமை பெருமையையும் மகிழ்ச்சியையும் எமக்கு அளிக்கின்றது. தலைமை அனுசரணையாளர்களாக திகழும் நாம், எமது வாடிக்கையாளர்களும் சர்வதேச தரத்துடன் கண்கவர் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடைத்தொகுப்புகளை எம்மைப்போலவே, எம்முடன் இணைந்து விரும்புவார்கள் என நம்புகின்றோம்' என்றார்

The Design Trunk நிகழ்வானது உள்நாட்டு வடிவமைப்பாளர்களுக்கு தனித்துவமிக்க வர்த்தகப்படுத்தல் வாய்ப்பினை அளிக்கின்றது. உள்நாட்டு வடிவமைப்பாளர்கள் தமது புதிய தொகுப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் கொழும்பு பேஷன் வீக்கின் அழைப்பாளர்களுக்கும் விற்பனை செய்ய முடியும். இது கொழும்பு பேஷன் வீக்கிற்கு முக்கிய வணிக ரீதியான பார்வையினை அளிப்பதுடன், தமக்கென விற்பனை வாய்ப்புகள் இன்றிய வடிவமைப்பாளர்ளுக்கு, வாடிக்கையாளர்களுடன் நேரடியாக விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய அனுகூலத்தினையும் அளிக்கும். இந்த தொகுப்புகளில் இருந்து தெரிவுசெய்யப்படும் வடிவமைப்புகள், கொழும்பு பேஷன் வீக்கினால் நடாத்தப்படும் இணையத்தளத்தில் www.cfwcurates.com உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் வகையில் காட்சிப்படுத்தப்படும். The Design Trunk Show ஆனது 2015 மார்ச் 10ம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த நிகழ்வானது கட்டடக்கலைஞர் மாணவர்களுக்கிடையில் வருடாவருடம் நடைபெறும் கட்டட வடிவமைப்பு போட்டி நிகழ்வான Pop-Up Store வடிவமைப்பு போட்டியில் வெற்றியீட்டியவர்களால் உருவாக்கப்பட்ட இடத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் கொழும்புக்கு வருகை தரும் சர்வதேச பேஷன் தொழிற்துறை நிபுணர்களால் தொடர் பயிற்சிப்பட்டறைகளும் நடாத்தப்படும். இதன்போது இந்த சர்வதேச பேஷன் நிபுணர்கள் பேஷன் பிராண்டிங், பொதுமக்கள் தொடர்பாடல், நாகரீகம் ஆகிய விடயங்களில் தாம் பெற்றுள்ள அறிவாற்றல் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொள்வர்.

தொடர்ச்சியாக இலங்கையின் இளம் பேஷன் தொழிற்துறை திறமையாளர்களை வளர்த்துவரும் கொழும்பு பேஷன் வீக், இந்த வருடமும் 2015 மார்ச் 11ஆம் திகதி இடம்பெறும் ‘BrightSpark’ நிகழ்வின் ஊடாக கொழும்பு பேஷன் வீக் SS15 நிகழ்வில் இளம் வடிவமைப்பாளர்களும் பங்கேற்கும் அரிய வாய்ப்பினை வழங்குகின்றது. இவ்வாண்டு தீவிர பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல் நடைமுறைகள் மூலம், கருத்துருவாக்க முறைமையுடன் தொகுப்புகளை உருவாக்குவதில் பயிற்சிகள் பெற்ற 10 இளம் வடிவமைப்பாளர்கள் fashion week runway இல் தமது தொகுப்புகளை காட்சிப்படுத்துவர். மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் ‘BrightSpark’ வடிவமைப்பாளர் யார் என்பது நிகழ்ச்சியின் போது வெளிப்படுத்தப்படும். இவர் தனது வடிவமைப்புகள் மற்றும் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தேவையான நிதியினை அளிக்கும் பெருமைமிகு பேஷன் டிசைன் நிதியத்தினை பெற்றுக்கொள்வார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பு பேஷன் வீக் அழைப்பாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இந்த வருடமும் ‘Fashion+Food’ தொடர் முன்னெடுக்கப்படுகின்றது. பன்முக தொகுப்புகளை கொண்ட tapas, bento boxes, வாழ்க்கைப்பாணியினால் தூண்டப்பட்ட பானங்கள் ஆகியன Fashion Cafe மற்றும் Fashion Bar இல் அளிக்கப்படும். தமது 12ஆவது தொகுப்பில் கொழும்பு பேஷன் வீக் ஆனது, தம் ஆறு முதன்மை விருந்தக பங்காளர்களுடன் இணைந்து கொழும்பின் பன்முக சமையல் வகைகளின் ஊடாக சிறப்பான உணவருந்தல் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கும். 2015 மார்ச் 8ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை கொழும்பு பேஷன் வீக் உடன் பங்குடமையில் இணைந்துகொண்ட விருந்தகங்கள் தனித்துவமிக்க பேஷன் கருத்தாக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள மெனுவினை மதிய மற்றும் இரவு உணவுக்காக வழங்குவர். தெரிவுசெய்யப்பட்ட அழைப்பாளர்கள் குழுவினர் ஊடாடக்கூடிய seven-course மெனுவினைFashion Cafe இல் VIP dining அனுபவத்துடன் பெற்று ருசிபார்க்கும் வாய்ப்பும் அளிக்கப்படும்.

HSBC கொழும்பு பேஷன் வீக் தமது ஒரு வாரகால நீண்ட நிகழ்வுகளை 2-15 மார்ச் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நடைபெறும் இரண்டு கண்கவர் கருத்துருவாக்க after-parties உடன் நிறைவுசெய்யும். பேஷன் இனை வாழ்க்கைப்பாணியுடன் இணைத்து புதிய பரிமாணத்தை அளிக்கும் நோக்குடன் கொழும்பு பேஷன் வீக் ஆனது TNL Radio உடன் ‘Music Designed’ற்காக இணைகின்றது. இந்த பங்குடமை மூலம் இசைத்திறமைகள் வெளிக்கொணரப்படுவதுடன், DJகள் மற்றும் இசைக்கலைஞர்கள் நவநாகரீகத்துக்கு ஏற்ற விதத்தில் இசையினை எவ்வாறு உருவாக்கி பயன்படுத்தலாம் என்பது குறித்து வழிகாட்டப்படும். இந்த வருடமும் அனுபவசாலி ஒருவரால், கொழும்பு பேஷன் வீக் நிகழ்வுகள் மற்றும் runway showsகள் குறித்து எழுதும் வகையில் பயிற்றுவிக்கப்பட்ட fashion bloggerகள் கலந்துகொள்வதுடன், அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த நிகழ்வுகள் குறித்து பரப்புரை செய்து நிகழ்வு குறித்த வெளிப்பாட்டினை மேற்கொள்வர்.

ஆசியாவில் இடம்பெறும் நான்கு பிரதான பேஷன் கண்காட்சி நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் கொழும்பு பேஷன் வீக், பத்து வருடங்களுக்கும் மேலாக செயற்படுகின்றது. கடந்த 12 வருடங்களாக கொழும்பு பேஷன் வீக், உள்நாட்டு வடிவமைப்பாளளர்கள் மத்தியில் வளர்ச்சி மற்றும் ஊக்கத்திற்கான உத்வேகம் ஆகியவற்றை அளித்ததன் ஊடாக உள்நாட்டு நவநாகரீக தொழிற்துறைக்கு பாரிய பங்களிப்பினை அளித்துள்ளது. கொழும்பு பேஷன் வீக் குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.colombofashionweek.com தளத்துக்கு அல்லது www.facebook.com/colombofashionweek என்ற உத்தியோகபூர்வ Facebook பக்கத்துக்கு செல்லுங்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X