Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதல் தர பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபிள்கள் வர்த்தக நாமமான களனி கேபிள்ஸ் பி.எல்.சி, விற்பனைத்துறையில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஊழியர்களுக்கு பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகளை வழங்கி கௌரவித்திருந்தது.
கம்பனியின் பிரதான விருதுகள் வழங்கும் வைபவம் தொடர்ச்சியான நான்காவது வருடமாக வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றியிருந்ததுடன், களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் உதவி விற்பனை முகாமையாளர் சுரங்க பத்திரணவுக்கு பிரதான விருதை வழங்கியிருந்தார்.
சுரங்க பத்திரண தமக்குரிய விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். இவருக்கு பணப் பரிசுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணமும் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. இவர் கடந்த ஆண்டு கம்பனியின் இலக்கு பெறுமதியை விட 27 சதவீதம் அதிகளவு தொகையை கம்பனிக்கு வருமானமாக பெற்றுக் கொடுத்திருந்தார். 276 மில்லியன் ரூபாய் இவரின் மூலம் கடந்த ஆண்டில் வருமானமாக திரட்டப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால கருத்து தெரிவிக்கையில், 'எந்தவொரு கம்பனியினதும் உறுதியாக அதன் ஊழியர்கள் குழு அமைந்திருக்கும்.
எனவே, வெற்றிகரமாக இயங்கும் நிறுவனமொன்றின் பொறுப்பு என்பது, அதன் ஊழியர்களின் திறமைகளை கௌரவிப்பதாகும். இதன் மூலம் நிறுவனத்தின் நிலையாண்மையை உறுதி செய்து கொள்ள முடியும். களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தில் விற்பனை பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்தவருக்கு பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டின் வெற்றியாளராக சுரங்க பத்திரண தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் தனது இலக்குகளை வெற்றிகரமாக கடந்திருந்ததுடன், மிகப்பெரிய விற்பனை தொகையையும் பதிவு செய்திருந்தார். கம்பனியின் சார்பாக இவரின் சாதனையை நான் பாராட்டுகிறேன்' என்றார்.
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 44 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் 2008ஆம் ஆண்டில் 'சுப்பர் பிரான்ட்ஸ்' தரத்தை கம்பனி எய்தியிருந்தது. SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது.
களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கலின் போது, பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக களனி கேபிள்ஸ் பிஎல்சி 2013 ஆம் ஆண்டில் தங்க விருதையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025