2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் குவைத் எயாவைஸின் கிளை திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 05 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ். பாக்கியநாதன்

கிழக்கு மாகாண மக்களின் நலன்கருதி குவைத் எயாவைஸின் முதலாது கிளை அலுவலகம் மௌலானா ரவல்ஸ் அன்ட் றுவல்ஸின் அனுசரணையுடன் மட்டக்களப்பு நகரில் புதன்கிழமை (04) திறந்து வைக்கப்பட்டது.

திறப்புவிழாவையடுத்து ஈஸ்ட் லகுன் ஹோட்டலில் எயாவைஸ் நிறுவனத்தின் ஊடகவியாலாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இதன் மூலம் கிழக்குவாழ் மக்களின் விமான போக்குவரத்து பயணச் சீட்டுப் பதிவுகள், உறுதிப்படுத்தல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள், ஹஜ் மற்றும் உம்றா வணக்க வழிபாட்டுக்கான விமானப் பயணங்கள், தொழில்ரீதியான அனைத்து விமானப் பயணங்களுக்குமான உதவிகளையும் கொழும்பிற்கு செல்லாமல் இங்கு பெற்றுக்கொள்ள குவைத் எயாவைஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

குவைத் எயாவைஸானது 1954ஆம் ஆண்டு தமது விமான சேவையை தொடங்கிய ஒரு வரலாற்றுமிக்க நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1972ஆம் ஆண்டு இலங்லையில் தனது சேவையை ஆரம்பித்தது. இன்றுவரை நன்மதிப்பையும், சிறந்த விமான சேவையையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது என குவைத் எயாவைஸ் நிறுவனத்தின் வதிவிட முகாமையாளர் சுரேஸ் றூபசிங்க தெரிவித்தார்.

இத்திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக குவைத் எயாவைஸ் நிறுவனத்தின் வதிவிட முகாமையாளர் சுரேஸ் றூபசிங்க, மௌலானா ரவல்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் செய்யது நாஸிர் மௌலானர், நிருவாகப் பணிப்பாளர் செய்யது ஹாமீட் மௌலானா, டெல்மேஜ் எயாசேர்விஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரவி டி சில்வா மற்றும் பொது முகாமையாளர் நிரஞ்சன் அத்தபத்து உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X