2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

COOP LIGHT CFL bulb அறிமுகம்

A.P.Mathan   / 2015 மார்ச் 05 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

Prime Colour Tex கம்பனி மற்றும் COOPFED (இலங்கை நுகர்வோர் கூட்டாண்மை சங்கங்களின் சம்மேளனம் லிமிடெட்) ஆகியன இணைந்து COOPLIGHT CFL bulb வகையை அறிமுகம் செய்துள்ளன. உற்பத்தியாளர்களின் தரவுகளுக்கமைவாக, COOPLIGHT CFL bulb என்பது கொரிய நாட்டின் தொழில்நுட்பத்துக்கமைவாக 80 சத வீதம் வரை வலுவை சேமிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய CFL bulb குமிழ் என்பது COOPFED இன் வலுச் சேமிப்பு திட்டத்துக்கு அமைவாக அதன் 25ஆவது வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு;ள்ளது.

இந்த அறிமுகத்தை குறிக்கும் வகையில் COOPFED இன் தலைவர் திரு. ருவன் பண்டார தென்னகோன் மற்றும் Prime Colour Tex இன் முகாமைத்துவ பணிப்பாளர் எச். ஏஸ். ஷின் ஆகியோரிடையே COOPFED தலைமையகத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது. 

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக 315 சங்கங்கள் மற்றும் COOPFED இன் 3250 இணைக்கப்பெற்ற பின்தங்கிய வங்கிகளின் 700,000 வரையிலான அங்கத்தவர்களுக்கு COOPLIGHT CFL bulb களை சாதாரண CFL குமிழ்களை விட குறைந்த விலையில் கொள்வனவு செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், COOPFED இன் அங்கத்தவர்கள் மற்றும் அதன் இணைந்த பின்தங்கிய வங்கிகளைச் சேர்ந்தவர்களுக்கு இலகு தவணை கொடுப்பனவு முறையில் இந்த தயாரிப்பை கொள்வனவு செய்ய முடியும். 

இந்த நிவாரண திட்டத்துக்கமைவாக, ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த COOPLIGHT CFL bulbs, Watts 14, 14 (spiral), Watts 18 மற்றும் 18 (spiral) ஆகியன வீட்டுப் பாவனைகளுக்கு சிறந்த தெரிவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  

COOPLIGHT CFL bulb வகைகள் நிபுணத்துவம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்களின் மூலமாக கொரிய நாட்டு தொழில்நுட்பத்துக்கமைவாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் தரத்தை உறுதி செய்து '5 star' தர சான்று இலங்கை நிலையாண்மை வலு அதிகார சபையின் மூலம் வழங்கப்படுகிறது. 

COOPFED இன் தலைவர் திரு. ருவன் பண்டார தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், 'COOPLIGHT CFL bulbs இவ்வாறான சகாய விலையிலும், இலகு தவணை கொடுப்பனவு முறையிலும் வழங்குவதன் மூலமாக COODFED இன் அங்கத்துவத்தை பெற்றிருக்கும் நாட்டின் சுமார் 700,000 பேர் வரை அனுகூலங்களை பெற்றுக் கொளள் முடியும். இவர்களுக்கு வலுச்சிக்கனத்தை வழங்கி, அவர்களின் நிதி முகாமைத்துவத்தை பேணிக்கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும். பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், CFL bulb களை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை கொண்டிருப்பதில்லை. எமது இந்த திட்டத்தின் ஊடாக இந்த பிரிவை சேர்ந்த மக்களுக்கு CFL bulb களின் அனுகூலங்களை பெற்று தமது நிதிகளை சேமித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்க முடிந்துள்ளது. பின்தங்கிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக எமது COOPLIGHT CFL bulb களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு மேலதிக வருமானத்தை திரட்டிக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது' என்றார். 

Prime Colour Tex இன் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. எச்.எஸ். ஷின் கருத்து தெரிவிக்கையில், 'தனது கம்பனி நவீன கொரிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதுடன், சர்வதேச தரங்களுக்கமைய CFL bulbs உற்பத்தி செய்ய அது போதுமானதாக அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நாம் செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளோம். COOPLIGHT CFL bulb என்பது 5 star தரப்படுத்தலை கொண்டுள்ளது. இலங்கையில் மேலும் வலுச்சிக்கனத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய மேலும் பல தயாரிப்புகளை நாம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X