2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுவை புரட்சியை ஏற்படுத்தியுள்ள வீவா ஜின்ஜர்

A.P.Mathan   / 2015 மார்ச் 05 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோல்டட் ஆகார பான வர்த்தகநாமமான வீவா, நாடு முழுவதும் முன்னெடுத்திருந்த 'வீவா ஜின்ஜர் - சுவை எழுச்சி' எனும் நுகர்வோர் செயற்பாடானது அண்மையில் மூன்று மாதத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது. சுமார் 260,000 இற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் புத்துணர்ச்சியூட்டும் வீவா ஜின்ஜர் பானத்தை இலவசமாக பருகி இந்த சுவை புரட்சியோடு தம்மை இணைத்து கொண்டிருந்தனர்.

இந்த முக்கியமான மைல்கல்லை குறிக்கும் வகையில் 'வீவா ஜின்ஜர் - சுவை எழுச்சி' இன் மாபெரும் இறுதி நிகழ்வு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மொறட்டுவ சொய்சாபுர மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வில் பெருந்திரளான நுகர்வோர்கள் பங்குபற்றியிருந்தனர். இதன் போது வாடிக்கையாளர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு எழுச்சியூட்டும் விளையாட்டுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பால் மற்றும் மோல்ட்; நலச்செழுமை மற்றும் ஆறுதலான இஞ்சி சுவை நிறைந்துள்ள புதிய வீவா ஜின்ஜர் பானமானது விசேடமாக இலங்கையரின் சுவைகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. போட்டிகரமிக்க விலை மற்றும் நாடுமுழுவதுமான விநியோகம் மூலம் முடிந்தவரை பல நுகரவோருக்கு வீவா ஜின்ஜர் சுவையை ருசிப்பதற்காக நிறுவனம் இம்முயற்சியை முன்னெடுத்திருந்தது. இதன் மூலம் இலங்கையர் அனைவரும் புத்துணர்ச்சியூட்டும், உற்சாகமூட்டும் தேநீர் கோப்பை ஒன்றினை அனுபவிக்க முடியும்.

இன்று இலங்கையர்கள் தமது வழக்கமான தேநீர் கோப்பையில் வீவா ஜின்ஜர் சேர்ப்பதன் மூலம் எழுச்சியூட்டும் சுவை நிறைந்த தேநீர் கோப்பையின் அனுபவத்தை பெற முடியும்' என வீவா வர்த்தகநாம முகாமையாளர் மோஹான் கமகே தெரிவித்தார்.

இந்த புதிய ஜின்ஜர் தெரிவுகள் நாடுமுழுவதுமுள்ள பல்வேறு மோல்டட் நுகர்வோர் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது. வீவா ஜின்ஜரின் வெற்றிகரமான வெளியீட்டுடன், GSK நிறுவனமானது மோல்டட் உணவு குடிபான பிரிவில் அதன் சந்தைப் பங்கினை விருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளது.

'இலங்கை நுகர்வோர் மகிழ்ச்சியுறும் புதுமையான தயாரிப்பினை வழங்குவதே எமது விருப்பமாகும். வீவா பானத்திலிருந்து சக்தியையும், இஞ்சி சுவையையும் ஒன்றிணைத்த வீவா ஜின்ஜர் ஆகார பானமானது உங்கள் வழக்கமான தேநீர் கோப்பையை மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றமடையச் செய்கிறது. என GSK ஊட்டச்சத்து பிரிவு முகாமையாளர் தர்ஷன ஜயசிங்க தெரிவித்தார்.

வீவா என்பது மக்களிற்கு சிறந்த உணர்வையும், நீண்ட ஆயுளையும் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் உலகின் முன்னணி ஆராய்ச்சி அடிப்படையிலான மருத்துவ மற்றும் சுகாதார பாதுகாப்பு நிறுவனமாக க்ளெக்சோஸ்மித்கிளைன் நிறுவனத்தின் வர்த்தகநாமமாகும்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திறன்களை தன்வசம் கொண்டுள்ள GSK நிறுவனமானது விசேடமாக இலங்கையர்களின் தேவைகளுக்கு பொருத்தமான இஞ்சி சுவை கொண்ட மோல்டட் ஆகார பானத்தை உற்பத்தி செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X