2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

2015இல் ஆசியாவில் தொழில்புரிய சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக 99X Technology தெரிவு

A.P.Mathan   / 2015 மார்ச் 12 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

99X Technology செயற்பாடுகள் மற்றும் விநியோக முகாமையாளர் செஹானி செனவிரட்ன ஆசியாவில் பணியாற்ற சிறந்த நிறுவனத்துக்கான விருதை அண்மையில் மும்பை நகரில் இடம்பெற்ற Great Place To Work கல்வியகத்தின் விருதுகள் வழங்கலின் போது கல்வியகத்தின் சர்வதேச பிரதம நிறைவேற்று அதிகாரி சீனா கோர்மனிடமிருந்து பெற்றுக் கொள்கிறார். 

தொடர்ச்சியாக தமது ஊழியர்களுக்கு பணியாற்ற சிறந்த நிறுவனமாக 99X Technology தெரிவு செய்யப்பட்ட வண்ணமுள்ளது. இதன் அடிப்படையில் மும்பை நகரில் அண்மையில் இடம்பெற்ற Great Place To Work ஆசியா விருதுகள் வழங்கலின் போதும் இந்நிறுவனத்துக்கு பணியாற்ற சிறந்த நிறுவனம் எனும் விருது வழங்கப்பட்டிருந்தது. ஆசியாவில் பணியாற்ற சிறந்த நிறுவனம் என பெயரிடப்பட்டிருந்ததுடன், இலங்கையிலிருந்து இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த முதலாவதும் ஒரே நிறுவனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

ஆசியாவின் சிறந்த சிறிய மற்றும் மத்தியளவு நிறுவன பிரிவிலிருந்து இந்த விருதை தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 60 நிறுவனங்கள் இந்த பிரிவிலிருந்து ஆசிய நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனங்களை பொறுத்தமட்டில் தமது ஊழியர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது பிரதான குறிக்கோளாக அமைந்துள்ளது. அத்துடன், ஊழியர்களை முன்னிலையில் திகழச் செய்வது என்பதற்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குவதுடன், இதன் மூலம் அதீத நம்பிக்கை, பெருமை மற்றும் நட்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவற்றின் மூலமாக ஆசிய பிராந்தியத்தில் பணியாற்ற சிறந்த நிறுவனங்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தன ஏனைய கூகுள், மைக்குரோசொஃப்ட், மரியட், அமெரிகன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹயட் போன்ற சர்வதேச முன்னணி நிறுவனங்களுக்கு நிகரானதாக 99X Technology நிறுவனத்தையும் நிலைநிறுத்த உதவியுள்ளது. 

99X Technologyஇன் இணை தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் கருத்து தெரிவிக்கையில், 'இந்த பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தமை என்பது மிகப்பெரும் சாதனையாக அமைந்துள்ளது. குறிப்பாக எமது நிறுவனத்துக்கும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தகவல் தொடர்பாடல் துறையைச் சேர்ந்த நிறுவனம் எனும் வகையில் இது பெரும் புகழாக அமைந்துள்ளது. இந்த உயர் மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது ஊழியர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளின் பயனாக இந்நிலை எமக்கு கிடைத்துள்ளது' என்றார்.

தொடர்ச்சியாக இரு வருடங்கள் இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக 99X Technology தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், இரு விசேட பிரிவு விருதுகளையும் சுவீகரித்திருந்தது. ஆளுமை அபிவிருத்தி மற்றும் சிறியளவு வியாபார (50 – 200 ஊழியர்கள்) பிரிவில் சிறப்பாக செயலாற்றியிருந்தமைக்காக இந்த விசேட விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. 

ஆசியாவில் பணியாற்ற சிறந்த நிறுவனமாக தெரிவு செய்யப்படுவதற்கு, கம்பனி தேசிய மட்டத்தில் பணியாற்ற சிறந்ததாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேசிய பட்டியலிலிருந்து 303 கம்பனிகள் இந்த ஆசிய பட்டியலில் உள்வாங்க தெரிவாகியிருந்தன. இதிலிருந்து 60 கம்பனிகள் இறுதியில் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

99X Technology என்பது மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமாகும். உலகளாவிய ரீதியில், குறிப்பாக ஐரோப்பாவில் காணப்படும் சுயாதீன மென்பொருள் சேவை வழங்குநர்களுக்கு (ISVs) அவசியமான மென்பொருள் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது. இலங்கையில் தலைமையகத்தை கொண்டுள்ளதுடன், நோர்வே நாட்டின், ஒஸ்லோ நகரை மையமாக கொண்டு இயங்கும்  இந்நிறுவனம், இதுவரையில் 150க்கும் மேற்பட்ட மென்பொருள் தீர்வுகளை வெற்றிகரமாக வடிவமைத்து வழங்கியுள்ளது. இலங்கையில் பணிபுரிய சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் Great Place To Work கல்வியகத்தின் மூலம் 2013 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X