2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜனசக்தி MDRT வெற்றியாளர்களின் மும்பை அனுபவம்

A.P.Mathan   / 2015 மார்ச் 13 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான மில்லியன் டொலர் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு தகுதியை பெற்ற ஜனசக்தி ஆயுள் விற்பனை படையைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மும்பை நகரில் புதுமையான அனுபவத்தை பெற்றிருந்தனர்.

Renaissance Mumbai Convention Centre ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற செயலமர்வில் பல்வேறு விதமான தலைப்புகளின் கீழ் 12 இற்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை பங்குபற்றியவர்கள் கேட்டு பயனடைந்தனர். மேலும் இத்துறையில் உள்ள ஒரு சில மிகச்சிறந்த தயாரிப்பாளர்களிடமிருந்து அறிவு மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

இந்த அமர்வுகளில் மிகச் சிறந்த தயாரிப்பாளர்கள் தங்கள் வெற்றி சூத்திரத்தை பகிர்ந்து கொண்டதுடன், வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்குவது தொடர்பான சிறந்த வழிமுறைகளை மறு பரிசீலணை செய்வதற்கான ஊக்குவிப்புகளையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியிருந்தனர். 

'ஜனசக்தி நிறுவனமாகிய நாம், எமது ஊழியர்கள் மீது முதலீடு செய்வதன் முக்கியத்துவத்;தை நன்குணர்ந்துள்ளோம். பயிற்சி மற்றும் அபிவிருத்திகளுக்காக நாம் வருடாந்தம் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிட்டு வருகிறோம்' என மனிதவள மற்றும் நிர்வாக பிரிவின் பொது முகாமையாளர் காமினி பீரிஸ் தெரிவித்தார். 'அண்மையில் இடம்பெற்ற SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் விழாவில் வெள்ளி விருதை நிறுவனம் வென்றதுடன், எமது முதலீடுகள் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது' என தெரிவித்தார்.

'மிக நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வான MDRT செயலமர்வுகள், மிகச் சிறந்த விற்பனை நிபுணர்கள் தங்கள் நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், பெறுமதி வாய்ந்த துறைசார் அறிவினை பெற்றுக்கொள்வதற்கும் வழிவகுக்கிறது. இந்த ஒருநாள் பயிற்சி பட்டறையானது, நவீன துறைசார் போக்குகள் தொடர்பில் எமது விற்பனை படையினர் அறிந்து வைத்துள்ளமையை உறுதி செய்யும் வகையில், மிகச்சிறந்த பேச்சாளர்களுக்கு தம்மை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினை தகுதியாளர்களுக்கு வழங்குகிறது' என ஆயுள் விற்பனை மற்றும் செயற்பாட்டு பிரிவின் பொது முகாமையாளர் ஹஷ்ர வீரவர்தன தெரிவித்தார்.

ஊழியர்களை மேம்படுத்தும் வகையில் விற்பனை, நிபுணத்துவம், சிறந்த நடைமுறைகளை பகிரல், சர்வதேச செயலமர்வுகளில் பங்குபற்றச் செய்தல் போன்வற்றை உறுதி செய்யும் வகையில் உள்ளக மில்லியன் டொலர் வட்ட மேசை வெற்றி கழகத்தை நிறுவனம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X