Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 18 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெவ்வேறு தெரிவுகளை நாடும் வாடிக்கையாளர்களை தன்னிறைவுபடுத்தும் வகையில் நவீன ஸ்மார்ட்ஃபோன்கள், அன்ட்ரொயிட் ஃபோன்கள் மற்றும் மல்டிமீடியா ஃபோன்களை Colors மொபைல் அறிமுகம் செய்துள்ளது. உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் கையடக்க தொலைபேசி வர்த்தக நாமமான Colors மொபைல் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவு பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. மொபைல் தொலைத்தொடர்புகள் துறையின் நவீன தொழில்நுட்பங்களை Colors மொபைல் வழங்குவதுடன், பாவனையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விலையிலும் அமைந்துள்ளது.
Colors மொபைல் அண்மையில் இரு அண்ட்ரொயிட் 3G கையடக்க தொலைபேசிகளை இலங்கையில் அறிமுகம் செய்திருந்தது. அவையாவன X18 மற்றும் X28 ஆகும். X18 என்பது அண்ட்ரொயிட் கையடக்க தொலைபேசிகள் பாவனையை ஆரம்பிக்க எதிர்பார்ப்பவர்களுக்கு பொருத்தமான வகையில் அமைந்திருப்பதுடன், குறைந்த விலையிலும் அமைந்துள்ளது. Duel Sim ஐ கொண்ட X18 என்பது, அண்ட்ரொயிட் 2.3.5 கையடக்க தொலைபேசி என்பதுடன், 1 GHz புரொசசர் ஐ கொண்டுள்ளதுடன், இரட்டை கமராவையும் கொண்டுள்ளது. 256 MB RAM மற்றும் 512 MB ROM இதில் காணப்படுகின்றன. Colors X28 Star என்பது, அண்ட்ரொயிட் KITKAT மென்பொருளை கொண்டுள்ளது. இதன் 3.5” HVGA திரை அசல் படங்களையும், கண்கவர் வர்ணங்களையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளன. 1.2 GHz duel Core புரொசசரை கொண்டுள்ளதுடன், 2MP பின்புற கமராவையும், duel Sim மற்றும் Wi-Fi ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. Colors மொபைலின் ZOOM range என்பதன் மூலமாக ஒப்பற்ற பிரத்தியேக தரம் மற்றும் விலை ஆகியவற்றை ஸ்மார்ட்ஃபோன் ஆர்வலர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனாலும், நீங்கள் பார் ஃபோன் ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளீர்களாயின், Colors F007 மற்றும் F012 போன்றன சிறந்த தெரிவாக அமைந்திருக்கும்.
Colors மொபைல் ஃபோன்களுடன், பாவனையாளர்கள் மேம்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடிவதுடன், இலங்கையின் முன்னணி இலத்திரனியல் சாதனங்கள் உற்பத்தியாளரான ஒரேன்ஜ் இலெக்ரிக் நிறுவனத்திடமிருந்து ஒரு வருட முழுமையான உத்தரவாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் Colors மொபைல்களை விநியோகிப்பதற்கு ஏக அங்கீகாரம் பெற்ற முகவராக ஒரெல் கோர்ப்பரேஷன் பிரைவேற் லிமிடெட் திகழ்கிறது. இது ஒரேன்ஜ் இலெக்ரிக் கம்பனியின் அங்கத்துவ கம்பனி என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் காணப்படும் ஒரெல் கோர்ப்பரேஷன் நிறுவனத்தின் பரந்த விநியோகத்தர் வலையமைப்பிலிருந்து Colors மொபைல் தெரிவுகளை கொள்வனவு செய்து கொள்ள முடியும்.
நாடு முழுவதும் தனது பிரசன்னதை அதிகரிக்க Colors மொபைல் திட்டமிட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago