Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 27 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
'Info-V' ஏற்பாட்டுக் குழுவானது விசாகா வித்தியாலயத்துடன் ஒன்றிணைந்தும் கல்வி அமைச்சின் ஆதரவுடனும் இரண்டாவது வருடாந்த 'Info-V 2015' தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கண்காட்சியை எதிர்வரும் ஜூலை 03. 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் (SLECC) நடாத்தவுள்ளது.
'சாமர்த்தியமான அடைவிடங்கள் - தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புத்தாக்கங்களில் மிகப் பிந்தியதை உங்களிடம் கொண்டுவரும் ஒரு அறிவுக் கேந்திரம்' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இக் கண்காட்சிக்கு ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் பிளாட்டினம் அனுசரணையாளராக இணைந்து செயற்படுகின்றது.
கண்காட்சி நடைபெறும் எல்லா நாட்களிலும் பொது மக்கள் பார்வையிடுவதற்காக முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 8 மணி வரைக்கும் இக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டிருக்கும். தகவல் தொழில்நுட்பத்தை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அருகே கொண்டு வருவதும் அவர்களது அன்றாட வாழ்க்கையில் அணுகிப் பயன்படுத்தக் கூடிய ஒரு கருவியாக அதனை மாற்றியமைப்பதுமே இந்த கண்காட்சியின் நோக்கமாகக் காணப்படுகின்றது.
'தொழில்நுட்பத்தை கிராமப் புறங்களில் வாழும் மக்களிடத்தே கொண்டு செல்கின்ற அதேவேளை உலகளாவிய தொழில்நுட்ப வலையமைப்பில் இலங்கையை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்ற இலங்கையின் ஒரு முன்னோடி நிறுவனம் என்ற வகையில் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆனது, குறிப்பாக மாணவர் சமூதாயத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை காட்சிப்படுத்துகின்ற இக் கண்காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்றது. இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும் தேவையாகவுள்ள தீர்வு என்ற அடிப்படையில் 'Info-V 2015' கண்காட்சிக்கு தெளிவான ஆதரவை வழங்கும் பொருட்டே பிளாட்டினம் அனுசரணையாளராக இணைந்து கொள்வதற்கான தீர்மானத்தை நாம் மேற்கொண்டோம்' என்று பிளாட்டினம் அனுசரணையாளராக இணைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிரதம வலையமைப்பு அதிகாரி திரு. எம்.பீ.பி. பெர்ணான்டஸ் தெரிவித்தார்.
'Info-V 2015' கண்காட்சியில் பல்வேறு கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் முன்னணி தகவல் தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்ப கம்பனிகள் பங்கேற்கவுள்ளன. இக் கண்காட்சி நாளாந்தம் 15,000 இற்கும் அதிமான பார்வையாளர்களை தம்பக்கம் கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இங்குள்ள காட்சிக் கூடங்கள் உள்நாட்டு கைத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்புக்களை மட்டுமன்றி வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்தி சேவைகளையும் காட்சிப்படுத்துவதாக அமைந்திருக்கும். அந்த வகையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் பங்குபற்றுவதற்கான தமது ஆர்வத்தை ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கின்றன.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய விசாகா வித்தியாலய அதிபர் திருமதி சந்தமாலி அவிருப்பொல கூறுகையில், 'வினையாற்றல் மிக்க கற்றல் மற்றும் அபிவிருத்திக்காக வயதுக்கு வந்தோர் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே பரந்த தொலைநோக்கின் அடிப்படையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதை இக் கண்காட்சியானது தனது அடிப்படை நோக்காகக் கொண்டுள்ளது. இப்போது வரைக்கும் இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பது பெரும்பாலும் ஆண்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்த அடிப்படை பண்பியல்பை மாற்றியமைப்பதற்கும் அதேபோல் இந்த பாலின சமமின்மையை சமப்படுத்தும் விதத்தில் கூடுமானளவுக்கு அதிகமான பெண்களை இத்துறைக்குள் உள்வாங்குவதற்கும் நாம் விரும்புகின்றோம். சாமர்த்தியமான வாழ்க்கைப் போக்கை அவர்கள் முன்கொண்டு செல்வதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப அறிவை அவர்களுக்கு வழங்குவதே எமது இறுதி இலக்காகும். அதேநேரம் 2016ஆம் ஆண்டில் 75% தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப எழுத்தறிவை அடைந்து கொள்ளும் தேசிய கொள்கைக்கு ஆதரவளிக்கவும் நாம் முனைப்புடன் இருக்கின்றோம். இதற்கு மேலதிகமாக, தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நாளாந்த வாழ்க்கையில் அவற்றினது பிரயோகங்கள் அத்துடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் காணப்படும் வணிக மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இக் கண்காட்சியின் நோக்கமாக உள்ளது' என்றார்.
கடந்த வருடம் பிரமாண்டமான வெற்றியை பெற்றுத்தந்த 'Info-V 2015' கண்காட்சியானது மிகப் பெரிய மற்றும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வாக இவ்வருடம் முன்னேறியுள்ளது. இக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் ஒரு பாடசாலை மட்ட நிகழ்வாக காணப்பட்ட இதனை ஒரு தேசிய நிகழ்வாக இப்போது தரமுயர்த்தி இருக்கின்றனர். இலங்கையிலுள்ள தகவல் தொழில்நுட்ப முறைமை மற்றும் அதில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை 'Info-V' கண்காட்சி காட்சிப்படுத்துகின்ற அதேவேளை கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாடசாலைகள் தகவல் தொழில்நுட்ப துறையுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஊக்கமளிக்கின்றது. நாளைய பிரஜைகளை நவீன தொலைத்தொடர்பாடல் முறைமைகளின் மூலம் வலுவூட்டுவதற்கு இது எதிர்பார்ப்பது மட்டுமன்றி, பூகோள கிராமத்துடன் அவர்களை தொடர்புபடுத்தக் கூடிய அறிவையும் தேடுகின்றது.
கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை முன்கொண்டு சென்ற ஒரு பலம்பொருந்திய சக்தியாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) திகழ்கின்றது. எனவேதான், தற்போதைய பூகோளமயமாக்கல் நடைமுறைகளின் பின்னணியில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டிய மிக முக்கியமான திறன்களுள் ஒன்றாக தகவல் தொழில்நுட்பம் உள்ளது. தத்தமது தனிப்பட்ட மற்றும் ஒன்றிணைந்த இலக்குகளை அடைந்து கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு இலங்கையரும் மிகச் சிறந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவுடன் இன்றைய நாள் வரைக்குமான விடயங்களை உள்ளடக்கிய தகவல் வலையமைப்பை அணுகி பயன்படுத்தக் கூடியதாக இருப்பது இன்றியமையாததாக இருக்கின்றது' என்று கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான திரு. மதுரங்க பெரேரா உறுதியாக தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago