2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

road.lk வழங்கும் புதுவருட பரிசு

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புதுவருடத்துக்கு தயாராகும் அனைவருக்கும் சிறந்த அன்பளிப்பொன்றை வழங்க road.lk முன்வந்துள்ளது. 

ஏப்ரல் மாதத்தில் சொப்பிங் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் எதிர்நோக்கும் கடுமையான வாகன நெரிசல் மற்றும் வாகன தரிப்பிட பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில், road.lk ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. தமது வாகனங்களில் வெற்று இருக்கைகளை கொண்டு பயணிப்போர், தாம் செல்லும் பிரதேசங்களுக்கு பயணிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு பயணிப்பதற்கான தெரிவுகளை வழங்கும் சேவையாக அமைந்துள்ளது. 

Rideshare அல்லது Carpooling என அழைக்கப்படும் இந்த சேவையை ஒருவர் பெற்றுக் கொள்ள அல்லது வழங்க செய்ய வேண்டியது, road.lk எனும் இணையத்தளத்தில் தமது கையடக்க தொலைபேசி, கணனி அல்லது டப்லெட் ஊடாக பிரவேசித்து, நீங்கள் பயணிக்கும் பிரதேசம், நேரம் மற்றும் திகதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அத்துடன், இந்த சேவையை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கிறீர்களா அல்லது வழங்க எதிர்பார்க்கிறீர்களா என்பதையும் குறிப்பிட வேண்டும். இதற்கமைய, பொருத்தமான தெரிவுகளை கட்டமைப்பு சுயமாக பொருத்தி இரு தரப்பினருக்கும் அறிவித்தலை வழங்கும். பயணிப்பவர்களும், சாரதிகளும் இதனை தொடர்ந்து, எவருடன் தாம் பயணிக்க வேண்டும் என்பது தொடர்பிலான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். 

இலங்கையில் இந்த முறை புதியதாக அமைந்திருந்த போதிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்த சேவை 20 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியிலிருந்து அமுலிலுள்ளது. 2009 இல், carpooling என்பது அnரிக்காவில் இடம்பெற்ற மொத்த பயணங்களில் 43.5% ஐ பங்களிப்பு செய்திருந்ததுடன், கொமியுட் பயணங்களில் 10மூ பங்களிப்பையும் செலுத்தியிருந்தது.

இந்த சேவை அறிமுகம் தொடர்பில் இன் தாபகர் ராதித திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில் 'இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலமாக, புதுவருடத்தின் பெருமளவான இடர்களை தவிர்த்துக் கொள்ள முடிவதுடன், அடுத்த சில வாரங்களில் பிரதான சொப்பிங் நிலையங்களுக்கு அருகாமையில் ஏற்படும் கடும் வாகன நெரிசல் என்பது எங்களுக்கு புதிதாக அமைந்த விடயமல்ல. புதுவருட காலப்பகுதியில் எல்லோரும் புதிய ஆடைகளை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதுடன், சகல விற்பனை நிலையங்களும் விசேட விலைக்கழிவுகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளன' என்றார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 'இருந்த போதிலும், இந்த விலைக்கழிவுகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள், கடுமையான வாகன நெரிசல் மற்றும் வாகன தரிப்பிட வசதிகள் போன்றவற்றை கவனத்தில் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விடயங்களாக அமைந்துள்ளன. தமக்கென சொந்த வாகனங்களை கொண்டிருப்பவர்களுக்கும், பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களுக்கும் இந்த காலப்பகுதியில் பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். இவர்கள் அனைவரும் சௌகர்யமான முறையில், சாதாரணமான விலையில் பயணம் செய்து தமது சொப்பிங் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை கொண்டுள்ளனர்' என்றார்.

இந்த சொப்பிங் நிலையங்களுக்கு விஜயம் செய்யும் வாகன உரிமையாளர்கள், இந்த கோரிக்கையை இலகுவான முறையில் நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலிருக்கும் என்பதுடன், அவர்களின் செலவீனத்தில் ஒரு பங்களிப்பை வழங்கக்கூடியவர்களாக இருக்கும். இந்த இரு குழுக்களும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பெரும் பங்களிப்பை வழங்கும் வகையில் அமைந்திருப்பார்கள். அத்துடன், குறைந்தளவு காபன் வெளியீட்டையும் சூழல் மாசடைதல் தவிர்ப்புக்கும் பங்களிப்பு வழங்குபவர்களாக இருப்பார்கள்.

புதுவருட சொப்பிங் காலப்பகுதியில், கொழும்பிலிருந்து பயணிக்கும் போது அல்லது உங்களுக்கு விருப்பமான விடுமுறை பகுதிக்கு பயணிக்கும் போதும் இந்த சேவையை பயன்படுத்தி அனுகூலமடையுமாறு road.lk அறிவுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X