2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலவச உள்ளாடைத் தெரிவுகளை வழங்கிய டிரையம்ப்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 1886ஆம் ஆண்டு முதல் நவீனமயமான பெண்கள் உள்ளாடை தெரிவுகளை வழங்கி வரும் டிரையம்ப் நிறுவனமானது கடந்த மார்ச் 8ஆம் திகதி மகளிர் தினத்தை முன்னிட்டு மெஜஸ்டிக் சிட்டி, லிபர்ட்டி பிளாசா, Crescat, Alfred House Gardens, கண்டி சிட்டி சென்டர், மொறட்டுவ மற்றும் கப்புவத்தை K- Zones ஆகிய பிரதேசங்களிலுள்ள டிரையம்ப பிரத்தியேக காட்சியறைகளுக்கு விஜயம் செய்த 20 பெண்களுக்கு இலவச உள்ளாடை தெரிவுகளை கொண்ட பரிசுப்பொதிகளை வழங்கியிருந்தது.

டிரையம்ப்பின் உள்ளாடைத் தெரிவுகள் இலங்கைப் பெண்களின் நாளாந்த வாழ்க்கை முறைகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. டிரையம்பின் பிரா வகைகள், உள்ளாடைகள் மற்றும் Shape wear ஆகியன ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் பெண்கள் தம்மை அழகாக உணரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிரையம்ப் உள்ளாடைகளில் கிறிஸ்டல் மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரையம்ப் இன் உள்ளாடைத் தெரிவுகள் விசேடமாக பெண்களின் இயற்கையான அழகினை வெளிப்படுத்திக் காட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

டிரையம்ப் நிறுவனத்தின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, டிரையம்ப் ஸ்ரீலங்கா பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்படும் சாதனை பெண்மணிகளின் பெயரினை comment மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட பேஸ்புக் போட்டியில் ஒன்லைன் ரசிகைகளான நிமந்தி ஜயசேகர மற்றும் மனிஷா ஜயவர்தன ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். சுமார் 650 நுழைவுகளிலிருந்து Spa சிகிச்சைகளை பெறும் அதிர்ஷ்டசாலிகளாக இரு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இப் போட்டியில் இளவரசி டயானா, Audrey Hepburn, ஜெ.கே.ரோலிங் மற்றும் மடோனா போன்ற சக்தி வாய்ந்த பெண்மணிகள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

'மார்ச் 8ஆம் திகதி மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் டிரையம்பிற்கு சர்வதேச மகளிர் தினமாகும். டிரைம்ப்பானது பெண்களுக்கு அற்புதமான மற்றும் நவீனமான உள்ளாடைத் தெரிகளை வழங்குவதனூடாக அவர்களின் அழகினை வெளிக்கொணர்ந்து தினமும் பெண்களை கொண்டாடு வருகின்றது. டிரையம்ப் நிறுவனத்தின் வசீகரிக்கும் உள்ளாடைத் தெரிவுகள் நவீன பெண்களுக்கு சுதந்திரமாக நடமாடுவதற்கும், தெளிவான மனப்பான்மையும் வழங்குகிறது' என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி அமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

டிரையம்ப் நிறுவனம் அதன் காட்சியறை மற்றும் ஒன்லைன் ஊக்குவிப்புகள் ஊடாக, தன்னம்பிக்கை, வலிமை, பரிவு மற்றும் பெண்ணியம் ஆகியவற்றை பின்பற்றுவதற்கான அதன் வாடிக்கையாளர்களை மேம்படுத்தி வருகின்றது. சர்வதேச மகளிர் தினம் என்பது உலகம் முழுவதுமுள்ள பெண்களின் சாதனைகள் மற்றும் மேம்பாடுகளை கொண்டாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இந்த வருட சர்வதேச மகளிர் தினத்தன்று டிரையம்ப் நிறுவனமானது பெண்களின் கருணை மற்றும் தன்னம்பிக்கை ஆகியன அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கின்றன என்பதை அதன் வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X