Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 12 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமானா வங்கி அண்மையில் அதன் புறப்பகுதி ஏ.ரீ.எம் சேவையை கல்கிஸ்ஸையில் உள்ள ஃபென்டேஷியா இலாஸ்ரிக் பிறைவேட் லிமிட்டட் நிறுவன வளாகத்தில் ஆரம்பித்தது. கல்கிஸ்ஸை டெம்பிள் வீதிக்கு அப்பால் உள்ள போஸ்ட் மாஸ்டர்ஸ் பிளேசில் அமைந்திருக்கும் இந்த ஏ.ரீ.எம் இயந்திரம் வேலைப்பளுமிக்க வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரமும் சௌகரியமான சேவையை பெற்றுக் கொள்ள துணைபுரிகின்றது.
அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர், ஃபென்டேஷியா இலாஸ்ரிக் நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் ஹமீத் அஷ்ரப் ஆகியோர் உட்பட இரண்டு நிறுவனங்களினதும் சிரேஷ்ட முகாமையாளர்கள் பங்கேற்புடன் இந்த ஏ.ரீ.எம். சேவை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த புறப்பகுதி ஏ.ரீ.எம் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டமை பற்றி கருத்து வெளியிட்ட அஸ்மீர், 'இந்த ஏ.ரீ.எம் சேவை ஆரம்பிக்கப்பட்டமையானது இதனை அண்டியுள்ள வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும். எமது முதலாவது புறப்பகுதி ஏ.ரீ.எம் இயந்திரத்தை நிறுவுவதற்கு இந்த சிறந்த இடத்தை எமக்கு வழங்கியமைக்காக ஃபென்டேஷியா நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளருக்கும், ஊழியர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்' என்றார்.
இது பற்றி கருத்து வெளியிட்ட ஹமீத் அஷ்ரப், 'எமது வர்த்தக வளாகத்தில் அமானா வங்கி தமது முதலாவது புறப்பகுதி ஏ.ரீ.எம் இயந்திரத்தை பொருத்தியிருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த ஏ.ரீ.எம் மூலம் கூடுதலாக நன்மையடைபவர்கள் எமது ஊழியர்களே' என்று குறிப்பிட்டார்.
அமானா வங்கியின் வீசா டெபிட் கார்ட் உலகம் முழுவதிலும் உள்ள 200 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலுள்ள 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ஏ.ரீ.எம் களில் சேவையை பெறலாம். அத்துடன் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல மில்லியன் வர்த்தக நிலையங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
வட்டியுடன் சம்பந்தப்படாத இஸ்லாமிய வங்கி துறையுடன் முற்றிலும் இணங்கி செயற்பட்டு வரும் இலங்கையின் ஒரேயொரு உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியாகத் திகழும் அமானா வங்கி கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரிசவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணைவாக அண்மையில் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற 18ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகளைத் தெரிவு செய்யும் 2014ஆம் ஆண்டிற்கான விருது விழாவில் குலோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் உலகில் முன்னேறி வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக அமானா வங்கி அங்கீகரிக்கப்பட்டது.
தனது மூலோபாய பங்காளிகளான மலேஷியா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷின் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025