Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 12 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன், உலக நீர் தினம் 2015 ஐ முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் செயற்திட்ட சேவைகள் அலுவலகம் (UNOPS) மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) போன்றவற்றின் மூலமாக மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நகரங்களைச் சேர்ந்த சமூகத்தவர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன. இந்த செயற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய உதவியுடனான மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் (EU-SDDP) ஊடாக வழங்கப்படும் நிதி உதவிகளின் உள்ளங்கமாக அமைந்துள்ளதுடன், மொத்த நிதி பெறுமதி 60 மில்லியன் யூரோ உதவித் தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்ளைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்வாங்கி இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
நான்கு தினங்கள் வரை இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் சிரமதான செயற்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான சித்திர போட்டிகள் போன்றன உள்ளடங்கியிருந்தன.
மன்னாரில் இடம்பெற்ற விழிப்புணர்வு செயற்பாடுகளின் போது, சமூக அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நீரின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்ததுடன், தூய மற்றும் பாதுகாப்பான சூழலை பேண வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டிருந்தது. பெருமளவான மக்கள் தமது கழிவுகளை குளங்களிலும் வடிகால்களிலும் இடுகின்றனர். இதன் காரணமாக இந்த நீர் வலையமைப்பு தடைப்படும் நிலை ஏற்படுகிறது. நகர சபையுடன் இணைந்து குளங்கள் மற்றும் நீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் சிரமதான செயற்பாடுகளின் மூலமாக UNOPS இனால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் 250க்கும் அதிகமான தன்னார்வ சமூக அங்கத்தவர்கள் பங்கேற்றிருந்தனர்.
'நீர் மற்றும் நிலையான அபிவிருத்தி' எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான ஓவிய போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 6 பாடசாலைகளின் 83 மாணவர்களும் வவுனியாவைச் சேர்ந்த 320 பாடசாலை மாணவர்களும் பங்கேற்றிருந்தனர். சிறுவர்களின் பங்குபற்றல் என்பது, பொது நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், UNICEF மற்றும் UNOPS ஆகியவற்றின் பிரதிநிதிகள் இணைந்து பொது மக்களுக்கு சூழல் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பான நீர் மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கான வசதிகள் போன்றன தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். பொது நீர் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு விசேட முக்கியத்துவம் வழங்கி நகரின் பராமரிப்பு செயற்பாடுகளில் சமூக அங்கத்தவர்களையும் பங்கேற்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். வவுனியாவிலுள்ள UNOPS அணியினர் நீர்ப்பாசன திணைக்களத்துடன் இணைந்து சிரமதான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது பாவற்குளம் நீர்ப்பாசன திட்ட விவசாயிகள் அமைப்பின் 50 விவசாயிகள் ஒன்றிணைந்து நீர்ப்பாசன நாளிகையை சுத்தம் செய்திருந்தனர்.
EU-SDDP கருத்திட்டத்துக்கமைவாக, மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களில் திறன் மேம்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணித்தல் மற்றும் புனருத்தாரணம் செய்யும் செயற்பாடுகளை UNOPS மேற்கொண்டிருந்ததுடன், நீர், தூய்மை மற்றும் சுகாதாரம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் நீர் பாதுகாப்பு மற்றும் தூய்மை செயற்பாடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் UNICEF கவனம் செலுத்தியிருந்தது.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025