Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 12 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை உடனடியாக வாடிக்கையாளருக்கு வழங்கும் முகமாக புரட்சிகரமான Easy Claim சேவையை ஜனசக்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்கள் இனிமேலும் வரிசைகளில் காத்திருக்காது எந்தவொரு சம்பத் வங்கி ATM இயந்திரத்திலிருந்தும் தமது மோட்டார் வாகன நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனசக்தி அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவையே இதுவாகும். வாடிக்கையாளருக்கு சௌகரியமானதும், தொந்தரவு அற்றதுமான சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த Easy Claim சேவை ஊடாக நஷ்டஈட்டு கொடுப்பனவு அனுமதிக்கப்பட்ட பின்னர் 24 மணித்தியாலயத்திற்குள் சம்பத் வங்கி ATM இயந்திரத்திலிருந்து பணத்தை பெறக்கூடியதாகவுள்ளது. நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை பெறுவதற்கு வங்கி கணக்கொன்றை கொண்டிருப்பதற்கான தேவை இனியும் இல்லை.
'புதிய Easy Claim சேவை மிகவும் சௌகரியமிக்கது. இதற்கு முன்னர் ஜனசக்தி அலுவலகத்திற்கு சென்று வௌ;வேறாக எனது வங்கிக்கணக்கில் பணத்தை வைப்பிலிட வேண்டியிருந்தது. ஆனால் தற்போது வங்கியிலிருந்து உடனடியாக பணத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது' என வர்த்தக முகாமையாளரான ருக்ஷான் சிறியந்த பெரேரா தெரிவித்தார்.
'இனிமேலும் வரிசைகளில் காத்திருந்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை என்பதால் இச்சேவையை நான் மிகவும் விரும்புகின்றேன்' என மோட்டார் ஓட்டுநரான பி.சத்துரக்க மதுசங்க தெரிவித்தார்.
வாகனம் விபத்துக்குள்ளானவுடன் செய்ய வேண்டிய செயற்பாடுகளை மேற்கொண்டு தேவையான விபரங்களையும் பூர்த்தி செய்த பின்னர், வினைத்திறனுடன் 24 மணிநேரமும் இயங்கும் ஜனசக்தியின் வாடிக்கையாளர் சேவை அழைப்பு நிலையத்துடன் தொடர்பு கொள்வதனூடாக, மிக விரைவாக நஷ்டஈட்டு கொடுப்பனவுகளையும், onsite settlement போன்ற செயற்பாடுகளையும் உறுதி செய்து கொள்ள முடியும். இதன் பொருட்டு Easy claim கோரிக்கைகளை வழங்குவதற்காக பிரத்தியேகமான குழு செயற்படுகிறது.
வாகனம் விபத்துக்குள்ளாகி தேவையான அனைத்து விடயங்களை பூர்த்தி செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 12 மணித்தியாலத்திற்குள் சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த பிரத்தியேக குழுவினர் செயற்பட்டு வருவதாக ஜனசக்தி அறிவித்துள்ளது.
'ஜனசக்தி இன்சூரன்ஸ் என்பது மோட்டார் காப்புறுதி பிரிவில் பல்வேறு புத்துருவாக்கங்களை உருவாக்கிய நிறுவனமாகும். இந்த புதிய கோரிக்கை கொடுப்பனவு அறிமுகம் ஊடாக வாடிக்கையாளருக்கு சௌகரியமானதும், நம்பிக்கையானதுமான சேவையை வழங்க முடிந்துள்ளது. இந்த சேவை ஊடாக மோட்டார் கோரிக்கை கொடுப்பனவுகள் வழங்கும் விகிதத்தை அதிகரிப்பதே எமது குறிக்கோளாகும்' என மோட்டார் பிரிவின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் கௌஷலா அமரசேகர தெரிவித்தார்.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025