2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஆயுள் காப்பீட்டினை தொடங்க முன்னர் அறிந்து வைத்திருக்க வேண்டியவை

A.P.Mathan   / 2015 மே 03 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் பாடசாலை கல்வியை முடித்த பின்னரோ அல்லது குடும்பமொன்றை நிர்வகிக்க தயாராகும் போதோ எதிர்காலம் குறித்த திட்டமொன்றை கொண்டிருத்தல் மிக அத்தியாவசியமாகும். இதன் போது அனைவரதும் பட்டியலிலும் ஆயுள் காப்புறுதியே முதல் தெரிவாக அமைந்திருக்கும். உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் பாதுகாப்பு வலையே இந்த ஆயுள் காப்புறுதி திட்டமாகும். இருப்பினும், ஆயுள் காப்பீட்டொன்றினை தெரிவு செய்ய முன்னர் அறிந்திருக்க வைத்திருக்க வேண்டியவை தொடர்பில் பெரும்பாலானவர்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை நிலவுகிறது. 

'ஜனசக்தி நிறுவனம் தொடர்ந்து ஆயுள் காப்புறுதி பிரிவில் முதல் இயக்கியாக விளங்குகிறது. எமது 20 வருட கால பயணத்தில், எமது விரிவான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஊடாக வாடிக்கையாளருக்காக திட்டங்களை உருவாக்கியுள்ளோம். இதனூடாக மக்கள் ஆயுள் காப்புறுதி திட்டமொன்றினை தொடங்குவதற்கு முன்னர் அறிந்திருக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் எவை என்பது தொடர்பில் நாம் நன்குணர்ந்துள்ளோம்' என ஜனசக்தி நிறுவனத்தின் ஆயுள் (விற்பனை மற்றும் செயற்பாடுகள்) பிரிவின் பொது முகாமையாளர் ஹஷ்ர வீரவர்தன தெரிவித்தார்.

1.    சேமிப்பை தொடங்குவதற்கு தகுந்த காலம்

பெரும்பாலானோர் ஆயுள் காப்பீட்டினை வாழ்க்கையின் பிற்பகுதிகளிலேயே தொடங்குகின்றனர். இருப்பினும், சிறந்த ப்ரீமியம் கட்டணத்தின் அனுகூலங்களை பெறுவதற்கு முடிந்தவரை ஆரம்பித்திலேயே காப்புறுதி திட்டத்தை தொடங்குவது மிக முக்கியமாகும். எனவே தான் இளமையான, ஆரோக்கியமான காப்புறுதிதாரராகிய நீங்கள் காப்புறுதி நிறவனத்திற்கு குறைந்த ஆபத்தாக கருதப்படுவதுடன், சிறந்த தவணை கட்டணத்தின் அனுகூலங்களையும் பெறுகின்றீர்கள். இது அவசர நிலைமைகளின் போது பாதுகாப்பு வலையாக திகழ்கிறது. 18 அல்லது 19 வயதுடைய இளைஞர்களுக்காக பல்வேறு ஆயுள் காப்புறுதி திட்டங்கள் (சேமிப்பு திட்டங்களை போன்ற இரட்டிப்பு) காணப்படுகின்றன.

2.    பணவீக்கத்தை எப்போதும் அனுமதியுங்கள்

ஆண்டுதோறும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இவ் விடயங்கள் காப்புறுதி திட்டமொன்றினை தொடங்க முன்னர் கருத்தில் கொள்ள வேண்டும். பணவீக்கத்திற்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பினை வழங்கக் கூடிய காப்புறுதி திட்டங்களை அவதானியுங்கள்.

3.    திட்ட விரிவாக்கல்கள் மற்றும் சேர்க்கப்பட்ட அனுகூலங்கள் குறித்து கவனியுங்கள்

அங்கவீனம் அல்லது விபத்து போன்றவற்றின் போது மேலதிக பாதுகாப்பினை வழங்கக்கூடியதும், அடிப்படை திட்டத்தை தவிர்த்து மேலதிக கொடுப்பனவுகளை வழங்கக்கூடியதுமான காப்புறுதி திட்டங்களை விரிவாக்கிக் கொள்ள முடியும். நீங்கள் காப்புறுதி திட்டமொன்றை தொடங்கும் போது வைத்தியசாலை அனுமதி மற்றும் அங்கவீனம் அல்லது நோய்வாய்ப்படலின் போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய விருப்பத்தெரிவுகள் குறித்து அறிந்திருக்க வேண்டியமை மிக முக்கியமாகும். இது  உங்களை எந்தவொரு நடவடிக்கைக்கும் தயார் நிலையில் வைத்திருக்க உதவும்.

காப்புறுதி திட்டங்களை வாழ்க்கைத்துணைவி அல்லது குழந்தைகளின் நலனுக்காகவும் விரிவாக்கிக் கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக, திடீர் குடும்ப உறுப்பினர்களுக்கு நிலையான மாதாந்த வருமானத்தை வழங்கக்கூடிய குடும்ப வருமான அனுகூலங்கள் குறித்து கருத்தில் கொள்ளவும். காப்பீட்டின் முதிர்வு திகதியன்று வழங்கப்படும் ஏதேனும் அனுகூலங்கள் குறித்து உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறியவும். அதுமட்டுமன்றி, காப்புறுதி திட்டம் உங்கள் வாழ்க்கைமுறையை மேம்படுத்தக்கூடிய சேர்க்கப்பட்ட அனுகூலங்களை வழங்குகிறது.

4.    மிக குறைந்தளவில் பட்ஜெட்டினை மேற்கொள்ளாதீர்கள்

நீங்கள் செலுத்தும் தவணைக்கட்டணம் உங்கள் வாழ்க்கைமுறைக்கு ஏற்றதாக என்பதை உறுதி செய்யவும். உங்களுக்கு முன்மொழியப்பட்ட தகவல்களை நிரப்பும் போது உங்களுக்கு ஏற்பட்ட நோய்கள் அல்லது அறுவைசிகிச்சைகள் தொடர்பில் விரிவான தகவல்களை எப்போதும் வழங்கவும். இது எதிர்பாராத விபத்தின் போது மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கி சரியான ப்ரீமியம் கொடுப்பனவை வழங்குவதற்கு வழிவகுக்கும்.

5.    உங்கள் தேவைகளை மாத்திரம் கருத்தில் கொள்ள வேண்டாம்

ஆயுள் காப்புறுதி திட்டத்தை பொறுத்தவரை, உங்களது தேவைகளை மட்டுமன்றி, உங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கைமுறைகள் மற்றும் தேவைகளையும் கருத்தில் கொள்வது மிக முக்கியமாகும். இந்த முறை உங்களின் வரவு செலவு திட்டத்தின் துல்லியமான வரைபடத்தை வழங்கி உங்கள் குடும்பத்தினருக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கிடும்.

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும், ஜனசக்தி - 0112303300


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X