Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 11 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொபியலக் வர்த்தக குறியீட்டிலான பெயின்ட் (வர்ணப்பூச்சு) வகைகளின் உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனருமாக திகழும் லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனமானது, 'ரொபியலக் வர்ணம்பூச்சு பூசுவோர் கல்வியகத்தை' (Robbialac Painters Academy) அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது. இக் கல்வியகமானது இனிவரும் காலங்களில் இலங்கையில் வர்ணப்பூச்சு வகைகளை பிரயோகிக்கும் நபர்களை பயிற்றுவிப்பதுடன், வாழ்க்கைக்கு தேவையான விஞ்ஞானபூர்வ திறனை வழங்கி அவர்களை வலுவூட்டும் வகையில் செயற்படும்.
இலங்கையில் இதுபோன்றதொரு முதன்முதலான திட்டமாக காணப்படும் ரொபியலக் கல்வியகமானது லங்கெம் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் மிகப் புதிய கூட்டாண்மை சமூகப் பொறுப்பு முன்னெடுப்பாக அமைவதுடன், எவ்வாறு வர்ணம் பூசுவது என்பதை கற்றுக்கொள்ள விரும்புகின்ற நபர்களுக்கு வர்ணம் பூசும் துறை சார்ந்த தொழில்சார் பயிற்சிநெறி ஒன்றை எவ்வித கட்டணமும் இன்றி முற்றுமுழுதாக இலவசமாக வழங்குகின்றது.
இந்த கல்வியகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள முதலாவது தொகுதி பயிலுனர்களுள் வெயாங்கொடை, களனி, மாலபே, கேகாலை, ஹங்;வெல்ல மற்றும் பிலியந்தல போன்ற வேறுபட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளடங்கியுள்ளனர். இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இருந்து கிடைக்கப் பெற்ற பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களுள் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதன்பின்னர் நான்கு வார காலப் பகுதியில் செயல்விளைவுமிக்க தீவிர பயிற்சியை இவர்கள் நிறைவு செய்திருக்கின்றனர்.
இப் பயிற்சிக் காலப்பகுதியில், மேற்படி பங்குபற்றுனர்கள் ஆறுபேரும் இத் துறையிலுள்ள மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் பயிற்றுவிக்கப்பட்டனர். வர்ணப்பூச்சுகள், மேற்பூச்சு முறைமைகள், உற்பத்திகள் மற்றும் அவற்றின் பயன்பாடு போன்ற விடயங்கள் பற்றி அவர்களுக்கு முழுமையானதொரு விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, சுவர் மேற்பரப்புகளை தயார்படுத்தல், சரியான பதத்துடன் வர்ணப்பூச்சை கலத்தல், வர்ணப் பூச்சை பூசுவதற்கான மிகச் சரியான வழிமுறை மற்றும் வர்ணம்பூசும் செயன்முறையில் வர்ணப்பூச்சை மீதப்படுத்துவது எவ்வாறு போன்ற விடயங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
'இலங்கையின் வர்ணப்பூச்சு துறையில் வெற்றிகரமானதும் பல முக்கிய நிகழ்வுகளைக் கொண்டதுமான 30 வருடங்கள் நிலைத்திருந்த நிறுவனம் என்ற வகையில், நாம் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்ற இத் துறைக்கு பிரதியுபகாரம் செய்ய வேண்டிய காலம் கனிந்து வந்திருக்கின்றது என்று நாம் உணர்ந்து கொண்டோம். இலங்கையில் பரந்தளவிலான திறன்கள் காணப்படுகின்றன. எனவேதான், இவ்வாறான இளம் ஆண்களுக்கும் ஏன் பெண்களுக்கும் கூட வாழ்க்கைக்கு தேவையான ஒரு ஆற்றலை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு வலுவூட்ட நாம் விரும்புகின்றோம். பொருளாதார செயற்பாட்டில் புத்தெழுச்சி ஏற்பட்டுள்ளதுடன் கட்டிட நிர்மாண பணிகள் நாடு முழுவதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில், சிறப்பாக பயிற்றப்பட்ட மற்றும் தகுதிவாய்ந்த வர்ணம்பூசும் நபர்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது. அதனையே ரொபியலக் கல்வியகம் வழங்குகின்றது. வர்ணம்பூசுதல் தொடர்பிலான அரிச்சுவடியை கற்று, தொழில்சார் வர்ணம்பூசும் நபர்களாக முன்னேற ஆர்வமுள்ள நபர்களுக்;காக இக் கல்வியகத்தின் கதவுகள் இப்போது திறந்துள்ளன' என்று லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளரான றுவான் ரி. வீரசிங்க தெரிவித்தார்.
'கடந்த பதினைந்து வருடங்களாக நான் ஒரு வர்ணம்பூசுபவராக (பெயின்டர்) வேலை செய்கின்ற போதிலும், இப் பயிற்சியானது எனது அறிவை மிகச் சிறப்பாக மேம்படுத்தி இருக்கின்றது. அத்துடன் என்போன்ற வர்ணம்பூசும் நபர்களுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. விரிவான முக்கிய விடயங்கள் (finer points) போன்ற, இதற்கு முன்னர் நாம் அறிந்திராத பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு நாம் அதிகமாக கற்றறிந்து கொண்டோம். இது எமக்கு உன்னதமான நம்பிக்கை அளித்துள்ளது மட்டுமன்றி, எமது ஆற்றல்களை பலப்படுத்தி, கூர்மையாக்கி இருக்கின்றது. லங்கெம் நிறுவனமானது பயிற்சி அளித்தலுக்கும் அப்பால் சென்று, அனைத்து அமர்வுகளின் போதும் எமக்கு பகலுணவு மற்றும் சிற்றுண்டி உபசாரத்தையும் வழங்கியிருந்தது. இவ்வாறான மேலும் பல நூற்றுக்கணக்கான வர்ணப்பூச்சு பூசுவோருக்கு லங்கெம் பெயின்ட்ஸ் பயிற்சியளிக்கும் என்றும், அதன்மூலம் இத்துறை மேன்மையடையும் என்றும் நான் நம்புகின்றேன்' என்று பிலியந்தலைமையச் சேர்ந்த கே. சந்திம ஜயறுக் கருத்துத் தெரிவித்தார்.
'இந்த ஆண்களும் பெண்களும் ரொபியலக் கல்வியகத்தில் பயிற்றப்பட்ட பின்னர் விஞ்ஞான அடிப்படையில் வர்ணம் பூசும் முறைமை தொடர்பில் திறன் வாய்ந்தவர்களாகவும் தகுதி பெற்றவர்களாகவும் திகழ்வார்கள். அவர்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதை காண்பதே லங்கெம் நிறுவனத்தின் விருப்பமாகும். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் பணியாற்றும் ஏனைய தொழிலாளர்களால் ஏற்பட்ட சாதக விளைவைப் போலவே, இம் முயற்சியும் கூட நீண்டகால அடிப்படையில் இலங்கையின் பொருளாதாரத்தில் அனுகூலமான தாக்கம் ஒன்றை ஏற்படுத்தும். அந்தவகையில், ரொபியலக் கல்வியகம் என்பது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற ஒரு செயன்முறையாகவும் அதேநேரம் எதிர்வரும் வருடங்களுக்காக நாம் போஷித்து வளர்க்கும் ஒரு முன்முயற்சியாகவும் காணப்படுகின்றது' என்று வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
ரொபியலக் கல்வியகமானது அடுத்த கட்ட பயிற்சியளித்தலுக்காக 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளம் இலங்கையர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோருகின்றது. இப் பயிற்சியளித்தல் அமர்வுகள் 2015 மே மாத இறுதியில் இடம்பெறவுள்ளது. அவர்கள் தமது விண்ணப்பங்களை – ரொபியலக் அக்கடமி, மேஃபா லங்கெம் பெயின்ட்ஸ், 297யு 1/1 யூனியன் பிளேஸ், கொழும்பு என்ற முகவரிக்கு எழுதியனுப்பலாம். அல்லது 0117766000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளலாம்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago