2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அமானா வங்கியின் அக்குறணை கிளை இடமாற்றம்

A.P.Mathan   / 2015 ஜூன் 11 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமானா வங்கி அதன் அக்குறணைக் கிளையை, மிகவும் இடவசதியுள்ள வாடிக்கையாளருக்கு சினேகபூர்வமான இடமொன்றான 201/1, மாத்தளை வீதி, அக்குறணை என்ற முகவரிக்கு மாற்றியமைத்துள்ளது. இந்நிகழ்வில் நலன் விரும்பிகளும், வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். அமானா வங்கியின் அக்குறணை கிளையானது விசேட மகளிர் பிரிவு, 4.00 மணி வரை விஸ்த்தரிக்கப்பட்ட வங்கிச் சேவை, பாதுகாப்பு வைப்பு பெட்டகங்கள் மற்றும் பாரம்பரிய அடகுவைப்புக்கு மாற்றீடான சேவைப் பிரிவு போன்ற பல மேலதிக வசதிகளை வழங்குகின்றது. 

இந்தக் கிளையை புதிய இடத்தில் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர், 'அமானா வங்கி அக்குறணைக்கு புதியதல்ல. அக்குறணையின் வல்லமையை உணர்ந்த நாம் சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அதாவது 2005 ஒக்டோபர் மாதம் அக்குறணை மக்களுக்கு சேவையை வழங்க விரும்பினோம். அப்போதிலிருந்து அக்குறணை மக்களுடன் நாம் மிகவும் வலுவான தொடர்பொன்றை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது அக்குறணையில் எமது வர்த்தகம்  வளர்ந்து வருகின்றது. இன்று, இந்த புதிய இடத்திற்கு எமது கிளை மாற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அக்குறணையிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சௌகரியமான மற்றும் விரிவான சேவையை வழங்கும் ஆற்றலை பெற்றுள்ளோம்' என்று குறிப்பிட்டார். 

மேலதிக வசதிகள் பற்றி பேசிய அஸ்மீர், 'அக்குறணை கிளை கொழும்புக்கு வெளியே பெண்களுக்கான பிரத்தியேக சேவையை வழங்கும் விசேட மகளிர் பிரிவை கொண்டுள்ள முதலாவது கிளையாகும். மேலும், தங்கத்தை பாதுகாத்து வைக்கும் வசதி அறிமுகப்படுத்திருப்பதால், இந்தப் பகுதியின் நிதி வளத்தை எமக்கு விருத்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும்' என்று குறிப்பிட்டார். 

வட்டியுடன் சம்பந்தப்படாத இஸ்லாமிய வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கிச் செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கி, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரி சவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு வங்கியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டுக்கு இணைவாக அண்மையில் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற 18ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகளைத் தெரிவு செய்யும் விருது விழாவில் குலோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் உலகில் முன்னேறி வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக அமானா வங்கி அங்கீகரிக்கப்பட்டது. தனது மூலோபாய பங்காளிகளான மலேஷியா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களாதேஷின் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X