Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 12 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் 'April Blossoms 2015' (ஏப்ரல் மலர்கள் 2015) நிகழ்வு கடந்த மாதம் இடம்பெற்ற போது முழு நுவரெலியா பிரதேசமுமே கண்ணைக் கவரும் விதத்தில் வர்ண மயமாக காட்சியளித்தது. மலைநாட்டுக்கு தமது வழக்கமான பயணத்தை மேற்கொண்டு வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு இதன்போது மலர்வளர்ப்பு தொடர்பான பல்வகைப்பட்ட அழகு மற்றம் மிகச் சிக்கலான திறன்கள் காண்பிக்கப்பட்டன.
நுவரெலியா மாநகர மேயர் மதிப்பிற்குரிய மஹிந்த தொடம்பகே மற்றும் மாநகர சபை உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட April Blossoms 2015 நிகழ்வு பிரதம பொதுச் சுகாதார பரிசோதகரான டி.பி. மவுஸ்ஸவவினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்கள் இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதேவேளை, மத்திய மாகாண சபை முதலமைச்சர் கௌரவ சரத் ஏக்கநாயக்க அவர்கள் விருது வழங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இலங்கையில் நடைபெறும் ஒரேயொரு ஐரோப்பிய பாணியிலான மலர் கண்காட்சி என்ற பாராட்டைப் பெற்றதும், மலைநாட்டு மலர்களை காட்சிப்படுத்துவதுமான 'April Blossoms 2015' நுவரெலியாவிலுள்ள குயின் விக்டோரியா பூந்தோட்டத்தில் இடம்பெற்ற வேளையில், அதிக எண்ணிக்கையிலான மலர்சார் நிபுணர்கள், ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளை அது தம்பக்கம் கவர்ந்திழுத்திருந்தது.
'ஹட்டன் நஷனல் வங்கி மற்றும் உல்லாசப் பயண சபை ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து இந் நிகழ்வுக்கான பிரதான அனுசரணையாளராக செயற்பட்டதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இங்கு எமது பிரசன்னம் இரண்டு மடங்கானதாகும். ஏனென்றால், இந் நிகழ்வு உயர் தரமான மலர்களை வளர்ப்பதை சிறப்பாக ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது மட்டுமன்றி, புதுமையான மலர் வடிவமைப்பு மற்றும் பூந்தோட்டம் அமைத்தல் போன்றவற்றை தேசிய மட்டத்தில் ஊக்குவிப்பதற்கான களத்தையும் எமக்கு ஏற்படுத்தித் தந்தது' என்று லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி. லசந்த மாளவிகே தெரிவித்தார்.
'மலர் வளர்ப்பு என்பது வளர்ச்சியடைந்து செல்லும் ஒரு துறையாகும். வர்த்தக அடிப்படையிலும் அதேபோல் நபர் ஒருவர் தனது கொல்லைப்புறத்தில் வளர்க்கும் விதத்திலமைந்த ஒரு பொழுதுபோக்காகவும் இன்று காணப்படுகின்றது. புத்தம்புதிய மலர்களுக்கான கேள்வியை தொடர்ச்சியாக தந்துகொண்டிருக்கும் இத் துறையானது, எப்போதும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தை வாய்ப்பை பெற்றுக் கொள்கின்றது. நாம் வர்த்தக ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் இத்துறையின் எல்லைத்தடையை உயர்த்துவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். கடந்த பல வருடங்களாக சிறிய அளவிலான மலர் வளர்ப்பாளர்களுடன் அறிவைப் பகிர்ந்து கொண்டதன் மூலமாகவும் அவர்களது திறமைகளை கூர்மையாக்கியதன் ஊடாகவும் நாம் உதவி புரிந்துள்ளோம். இது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளை அளித்துள்ளது' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
'April Blossoms 2015' நிகழ்வின்போது தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியிலான மலர் வளர்ப்பாளர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அவர்களது பல்வகைப்பட்ட மலர்களின் தரத்திற்காக விருதுகள்; வழங்கப்பட்டன. மலர் ஒழுங்கமைத்தல் போட்டியானது இங்கு முக்கிய நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. இதற்காக புத்தாக்கமான மலர் வேலைப்பாடுகள் தொடர்பில் சில நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. 'பூந்தோட்டம்' நிகழ்ச்சியானது இலங்கையில் நடைபெறும் இவ் வகையான ஒரேயொரு நிகழ்ச்சியாக காணப்படுகின்றது. இதன்போது வர்த்தக ரீதியிலான மற்றும் தனிப்பட்ட பூந்தோட்டங்கள் யாவற்றையும் நடுவர்கள் மிகக் கவனமாக பரிசீலித்தனர். இலைத் தொகுதி, மலர்கள், எல்லை வேலிகள் மற்றும் புல்வெளிகள் போன்ற பல விடயங்களில் நடுவர்கள் கவனம் செலுத்தினர். இந்த மதிப்புக்குரிய நடுவர் குழுவுக்கு தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் உயரதிகாரிகள் தலைமை வகித்தனர்.
லஸ்ஸன ஃபுளோரா நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இலங்கையின் முதலாவது மலர் சேகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தது. இதன்மூலம் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான மலர் வளர்ப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தமது மலர்களை கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு நிறுவனம் உதவி அளிக்கின்றது. இப் பிரதான கூட்டாண்மை சமூகப் பொறுப்பு திட்டத்தின் ஊடாக, மலர் வளர்ப்பை எவ்வாறு சிறப்பாக்குவது மற்றும் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பிலும், அதேபோல் சாத்தியமானளவுக்கு மிகச் சிறந்த உற்பத்தியை மேற்கொள்வது எவ்வாறு என்பது குறித்தும் லஸ்ஸன ஃபுளோரா நிறுவனமானது தன்னிடமுள்ள அறிவையும் நிபுணத்துவத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
'இலங்கையின் மலர்சார் வர்த்தக துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று என்ற வகையில் லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தினராகிய நாம், மலர் வர்த்தக துறையின் தரம் மற்றும் படைப்பாற்றல் தொடர்பான கருப்பொருட்களை தொடர்ச்சியாக மேலும் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்வது எமது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்று திடமாக நம்புகின்றோம். இவ்வகையான போட்டி நிகழ்ச்சிகள் நிச்சயமாக எல்லைத்தடைகளை உயர்த்தி விடக்கூடியவையாகும். எனவேதான் அதற்கு எல்லா நேரங்களிலும் ஆதரவளிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இவ்வருடம் April Blossoms நிகழ்வு மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், இலங்கையில் மட்டுமன்றி இப் பிராந்தியத்திலேயே உல்லாசப் பயணிகளை கவரும் மிக முக்கிய நிகழ்வாக விரைவில் இது முன்னேற்றம் காணும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்' என்று கலாநிதி லசந்த மாளவிகே கூறி முடித்தார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago