Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 12 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பௌத்த மதம் இலங்கையில் முதல் தடவையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அதே நாளினை இலங்கையில் ஒவ்வொரு ஜுன் மாதமும் பொசன் போயா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரலாற்று மற்றும் சமய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளினை நாடு முழுவதும் உள்ள பெரும் எண்ணிக்கையிலான பௌத்த மதத்தவர்கள்; கொண்டாடி வருகின்றனர்.
தேசத்தின் முன்மாதிரி வர்த்தகநாமமாக திகழும் தீவா ஆனது, இந்த ஆசிர்வதிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு தந்திரிமலை புனித பௌத்த பிரதேசத்தில் 'மல்லிகை பூக்கள் தன்சல்' இனை ஒழுங்கு செய்து சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிப்பு வழங்கியிருந்தது.
இந்த நகரத்தில் அமைந்துள்ள பௌத்த சிலைகள் மற்றும் புனித அரச மரத்தினை வணங்குவதற்காக வருகை தந்த யாத்திரிகர்கள் வெள்ளை நிறத்தினாலான ஆடைகளை அணிந்திருந்ததுடன், இந் நிகழ்வில்; பக்தியை அதிகரிக்கும் வகையில் தீவா மூலம் ஒவ்வொரு யாத்திரிகர்களுக்கும் மல்லிகை பூக்கள் வழங்கப்பட்டிருந்தன.
மேலும் தீவா வர்த்தகநாமமானது பெருந்திரளான பக்தர்களுக்கு தமது புனித யாத்திரையின் போது சுத்தமான மற்றும் நறுமணம் மிக்க ஆடைகளுடன் எளிமை மற்றும் தூய்மையை கடைபிடிக்கும் வகையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அதன் மல்லிகை மற்றும் எலுமிச்சை சலவைத் தூள் தெரிவான 'தீவா ஃபிளவர்ஸ்' சஷே பக்கற்றுக்களை அவர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த பொசன் காலப்பகுதியில் புனித நகரத்திற்கு சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த நிகழ்வுடன் கைகோர்த்தமை குறித்து ஹேமாஸ் மெனுபக்டரிங் நிறுவனத்தின் வர்த்தகநாம முகாமையாளர் ஷானக பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், 'தீவா ஆகிய நாம் தந்திரிமலை புனித நகரத்திலிருந்து பரவும் ஆன்மீக நறுமணத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளோம். அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்ட மல்லிகை நறுமணம் கொண்ட தீவா ஃபிளவர்ஸ் டிடர்ஜன்ட் சஷே பக்கற்றானது அவர்களை தமது எதிர்கால சமயச் சடங்குகளை தூய்மையான ஆடைகளுடன் தொடர்ந்து முன்னெடுக்க வழிவகுக்கும் என நாம் நம்புகிறோம்' என தெரிவித்தார்.
ரோஜா மற்றும் எலுமிச்சை நறுமணங்களிலும், தீவா ரெகியூலர் எனும் பெயரிலும் 'தீவா ஃபிளவர்ஸ்' தெரிவுகள் கிடைக்கின்றன. இதற்கு மேலதிகமாக எலுமிச்சை மற்றும் மல்லிகை நறுமணங்களில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டிடர்ஜன்ட் சோப் வகைகளை தீவா அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago