Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 22 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றிய ஆயுள் விற்பனை படையினரின் கடின உழைப்பை அடையாளப்படுத்தும் வகையில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்பை அண்மையில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் வழங்கியிருந்தது. இதற்கமைய, 54 விற்பனை அணியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பட்டாயா மற்றும் பாங்கொக் சுற்றுலா சென்றிருந்தனர். இதன்போது புகழ்பெற்ற புலிகள் மிருகக்காட்சிசாலை, இயற்கை பவள தீவுகளுக்கு செல்லவும் மற்றும் கப்பலில் இராப்போசன விருந்தினை ருசிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன் ஷொபிங், விளையாட்டுக்கள் மற்றும் ஏனைய குழு சார்ந்த செயற்பாடுகள் போன்றன தோழமையை கட்டியெழுப்ப உதவியாக அமைந்தது.
'இந்த சுற்றுப்பயணத்தில் பெரும்பாலான ஊழியர்கள் முதல்முறையாக பாங்கொக்கிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சுற்றுப்பயணத்தை குறிப்பாக புலிகளின் மிருகக் காட்சிசாலை விஜயத்தை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். உல்லாசப்பயண கப்பல் சுற்றுலா மிகவும் அருமையாக இருந்தது. ஜனசக்தியின் தலைமை அலுவலகமானது அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தது அதற்கான எமது நன்றிகளை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்' என மேல் மாகாண ஆயுள் பிரிவின் வலய விற்பனை முகாமையாளர் ரெஹான் குணவர்தன தெரிவித்தார்.
ஜனசக்தியுடன் இணைந்து வெறும் 6 மாதங்களேயான ஊழியர்களுக்கும் தமது கடின உழைப்பிற்காக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த இந்த சுற்றுப்பயணமானது மிகச்சிறந்த முயற்சியாகும் என மேலும் குணவர்தன தெரிவித்தார்.
இந்த சுற்றுப்பயணத்திற்கான ஊழியர்கள் தெரிவானது உள்ளக போட்டியின் அடிப்படையில் நிறுவன படையினர் முதல் வர்த்தக முகாமையாளர்கள், பிராந்திய மற்றும் வலய முகாமையாளர்கள் தெரிவிற்கமைய இடம்பெற்றது.
'ஜனசக்தி நிறுவனமாகிய நாம் எமது மக்களே எமது சிறந்த சொத்து என்பதை அடையாளப்படுத்தி வருகின்றோம். வெளிநாட்டு பயிற்சிகள் உள்ளடங்கலாக எமது ஊழியர்களின் நலனுக்காக இதுவரை வருடாந்தம் 50 மில்லியன் ரூபா முதலீடு செய்துள்ளோம்' என ஆயுள்(விற்பனை மற்றும் செயல்பாடு) பிரிவின் பொது முகாமையாளர் ஹஷ்ர விஜேவர்தன தெரிவித்தார். 'ஊழியர் மேம்பாடு மீதான முக்கியத்துவமானது ஜனசக்திக்கான SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது' என மேலும் அவர் தெரிவித்தார்.
ஜனசக்தியானது தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலாக்கள் ஊடாக அதன் சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவித்து வருகிறது. இதற்கு முன்னைய சுற்றுப்பயணங்களில் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு ஐரோப்பா, சீனா, டுபாய், தாய்லாந்து, பாலி மற்றும் மாலைதீவு போன்ற பல்வேறு நாடுகளுக்கு பயணிப்பதற்கான வாய்ப்பினை ஜனசக்தி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago