2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Ma’s இன் சேதன சூப் தெரிவுகள்

A.P.Mathan   / 2015 ஜூன் 22 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேதன மற்றும் இயற்கையான உற்பத்திகளை விரும்பும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், Ma’s ஃபூட்ஸ் நிறுவனமானது அண்மையில் அதன் புதிய Happy Home சேதன சூப் தெரிவுகளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் நம்பகமான உணவு பதப்படுத்தும் குடும்ப வர்த்தகநாமமான Ma’s ஃபூட்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த இயற்கையான மற்றும் சேதன மூலப்பொருட்களைக் கொண்டு இந்த புதிய சூப் தெரிவுகளை உற்பத்தி செய்துள்ளது.

'தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட காய்கறிகளைப் போல புதிய சுவை மற்றும் நலன்களை கொண்ட இந்த சுவை மிக்க இப் புதிய சூப் தெரிவுகளை அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். மிகச்சிறந்த மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ள எமது சூப் வகைகள், உண்மையான சுவை நிரம்பிய மூலப்பொருட்களினால் செய்யப்பட்ட உணவுகளை நினைவூட்டுவதாக அமையும்' என Ma’s ஃபூட்ஸ் நிறுவனத்தின் 'Muluthange' காலாண்டு உணவு இதழின் தொடர்பாடல் முகாமையாளர் சாரா டி சில்வா தெரிவித்தார்.

இந்த புதிய Happy Home சேதன சூப் வகைகளில் மாம்பழம் மற்றும் கடுகு, பூண்டு மற்றும் வல்லாரை, Mulligatawny, கிரீமி பூசணிக்காய் மற்றும் Tom Kha – தேங்காய் மற்றும் Galangal சூப் போன்ற தெரிவுகள் உள்ளடங்கியுள்ளன.

Ma’s ஆனது எந்தவித செயற்கை பூச்சிக்கொல்லிகளோ அல்லது உரங்களோ பயன்படுத்தாது பயிர் செய்யப்படும் சேதன மூலப்பொருட்களை கொண்டு சுவை மிக்கதும், ஆரோக்கியமானதுமான உணவு வகைகளை உற்பத்தி செய்ய முடியும் என்பதில் Ma’s நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. வீட்டைப் போன்றே புதிய சேதன காய்கறிகள், மூலிகைகள் மற்றும் வாசணைப் பொருட்களை பயன்படுத்தி வர்ணங்கள் மற்றும் சுவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சூப் தெரிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள் அனைத்தும் பதப்படுத்தப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சூப் தெரிவுகளில் தீங்கு விளைவிக்கக்கூடிய கொல்லிகள், MSG, செயற்கை சுவைகள் மற்றும் மூலப்பொருட்கள், இரசாயன சேர்மானங்கள் மற்றும் அதிக நாட்கள் பேணி வைப்பதற்கான சேர்மானங்கள் அல்லது GMO மூலப்பொருட்கள் போன்ற எதுவும் சேர்க்கப்பட்டில்லை என்பதுடன், மிகக் குறைவாகவே பதப்படுத்தப்பட்டுள்ளது.

குடும்ப சைஸ் பக்கற்றுக்களை சமைக்க அவசியமில்லை. தேவைப்படும் அளவினை பொறுத்து நீர் அல்லது பால் சேர்த்து பரிமாறலாம். இந்த சூப் தெரிவுகள் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த ஆரோக்கியமான உணவுத் தெரிவாகவும், மாலை வேளையில் சூப் கப் ஒன்றை ருசி பார்க்க விரும்பும் அனைவருக்கும் பொருத்தமான வகையில் ஊட்டச்சத்துக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

'எமது வாடிக்கையாளர்களுக்கு இயற்கையான மற்றும் சேதன சூப் தெரிவுகளை வாங்குவதற்கான தெரிவினை வழங்கியமை முக்கிய நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையானது மிகச் சுவையானதும், ஆரோக்கியம் மிக்கதுமான சேதன உணவு வகைகளை உண்ண விருப்புபர்களுக்காக தொடர்ச்சியாக எமது தெரிவுகளை விஸ்தரித்து சேதன உற்பத்திகள் ஊடாக ஆரோக்கியமான உணவு உண்ணல் பழக்கங்களை ஊக்குவித்து வரும் Ma’s ஃபூட்ஸ் நிறுவனத்தின் உறுதிப்பாட்டின் ஓர் நிலையான செயல்பாடாக அமைந்துள்ளது' என Ma’s ட்ரொபிகல் ஃபூட்ஸ் நிறுவனத்தின் தலைமை உடன்பாட்டு அதிகாரி ஷெரான் டி சில்வா தெரிவித்தார்.

3 முதல் 4 வரையான பேருக்கு பரிமாறக்கூடிய இந்த சூப் தெரிவு பொதிகள் ரூ.200-300 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. Happy Home சூப் தெரிவுகள் ஷெல்ப்களில் வைக்கக்கூடிய வகையில் விசேட pouch இல் கிடைக்கிறது. 

Ma’s உற்பத்தி தொகுப்பில் Dad’s Garden gourmet சோஸ் வகைகள், Happy Home உடனடி உணவுகள் மற்றும் கறி வகைகள், Ma’s Happy Life Kitchen சான்றிதழ் பெற்ற சேதன உணவுகள், Pasta Roma விசேட பஸ்தா வகைகள் மற்றும் சோஸ் வகைகள் மற்றும் Katersafe உணவு சேவை துறை விநியோகம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X