Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 24 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணி புரிவதற்கு சிறந்த நிறுவனங்கள் 2015 க்கான விருதுகள் வழங்கும் வைபவத்தின் போது 99X Technology ஐந்து விருதுகளை தனதாக்கியிருந்தது. Great Place To Work® கல்வியகத்தின் மூலமாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்த விருதுகள் வழங்கலில் ஒரு நிறுவனம் பெற்றுக் கொண்ட அதிகளவு விருதுகளாக இது அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு இந்த விருதுகள் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டது முதல், இந்த விருதை தொடர்ச்சியாக பெற்றுக் கொண்ட தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஒரே நிறுவனமாக 99X Technology திகழ்கிறது.
இலங்கையில் பணிபுரிவதற்கு சிறந்த 20 நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்தமைக்கு மேலாக, அபிவிருத்தி தொடர்பான (ஊழியர் விருத்தி) சிறந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது மற்றும் ஊழியர் கௌரவிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் சிறந்த செயற்பாடுகள் மற்றும் மத்தியளவு நிறுவனத்துக்கான தங்க விருதை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக 99X Technology ஆசியாவின் பணியாற்றுவதற்கு சிறந்த 25 சிறிய மற்றும் மத்தியளவு நிறுவனங்களில் முதலாவதும் ஒரே நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
99X Technology நிறுவனத்தின் இணை தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோ சேகரம் கருத்து தெரிவிக்கையில், 'தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக நாம் இந்த தரப்படுத்தலை பெற்றுள்ளோம், ஒவ்வொரு வருடமும் இந்த தரப்படுத்தலுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தொடர்ந்தும் நாம் தெரிவாகியுள்ளோம். வௌ;வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. நிறுவனத்தின் கலாசாரத்திலும் இது மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த விருதின் மூலமாக கம்பனி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதுடன், சர்வதேச சந்தையில் திறமை மையமாகவும் திகழக்கூடிய வாய்ப்பையும் பெற்றுள்ளது' என்றார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், '2013 இல் இந்த தரப்படுத்தலில் உள்ளடக்கப்பட்ட முதலாவது தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த நிறுவனம் எனும் வகையில், பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக எமது நிறுவனத்தை திகழச்செய்வதில் நாம் பெருமை கொள்கிறோம். எமது ஊழியர்களின் தொடரச்சியாக ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பின் மூலமாக இவை அனைத்தையும் எம்மால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது' என்றார்.
99X Technology வெளிப்படைத்தன்மை தொடர்பான கலாசாரத்தை பின்பற்றுவது தொடர்பில் மிகவும் பெருமையடைகிறது. இதன் மூலமாக நம்பிக்கை மற்றும் ஒளிவுமறைவின்மை ஆகியன கட்டியெழுப்பப்படுகின்றன. சகல ஊழியர்களையும் நிறுவனத்தின் சிறந்த செயற்பாட்டு கட்டமைப்புக்கு பங்களிப்பு வழங்க ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனத்தை உருவாக்குவதில் இந்த அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படையான செயற்பாடுகளும் பங்களிப்பு வழங்கியிருந்தன.
Great Place To Work® ஆய்வு என்பது இரு உள்ளம்சங்களை கொண்டுள்ளது. the Trust Index® ஆய்வு மற்றும் என்பன Culture Audit® அவையாகும். 99X Technology இன் ஊழியர்கள் தாம் பணியாற்றும் நிறுவனம் தொடர்பில் பெருமளவு பெருமையுடன் திகழ்கின்றனர். சிரேஷ்ட முகாமைத்துவத்தின் திறமைகள் மீது அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளனர் அத்துடன், தொழில்புரியுமிடத்தில் தமக்கு வரவேற்பு மற்றும் சௌகர்யம் ஆகியவற்றை பெற்றுக் கொள்ள கம்பனி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் தன்னிறைவடைந்துள்ளனர். 99X Technology இன் சகல ஊழியர்களும் இந்த Trust Index® ஆய்வில் பங்கேற்றுள்ளனர் அத்துடன், Great Place To Work® கல்வியகத்தின் மூலமாக வழங்கப்பட்டிருந்த வினாக்கோவைக்கு தமது பங்களிப்புகளை வழங்கியிருந்தனர்.
இலங்கையில் பணியாற்ற சிறந்த நிறுவனங்களுக்கான தரப்படுத்தல் என்பது வருடாந்தம் Great Place to Work® கல்வியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆய்வாக அமைந்துள்ளது. இந்த கல்வியகம் சர்வதேச ரீதியில் மனித வளங்கள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்கும் ஸ்தாபனமாகும், இலங்கையில் இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் LMD ஆகியவற்றுடன் இணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. 2013 இல் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆய்வு முறை, நடப்பு ஆண்டில் 14 வியாபார துறைகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 12000க்கும் அதிகமான ஊழியர்கள் மத்தியில் இந்த கருத்துக்கணிப்பை முன்னெடுத்திருந்தது. இதன் மூலமாக கடந்த ஆண்டுகளில் காணப்பட்ட 15 சிறந்த நிறுவனங்கள் என்பதிலிருந்து 20 எனும் நிலைக்கு இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருந்தது.
99X Technology என்பது மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமாகும். உலகளாவிய ரீதியில், குறிப்பாக ஐரோப்பாவில் காணப்படும் சுயாதீன மென்பொருள் சேவை வழங்குநர்களுக்கு (ISVs) அவசியமான மென்பொருள் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது. இலங்கையில் தலைமையகத்தை கொண்டுள்ளதுடன், நோர்வே நாட்டின், ஒஸ்லோ நகரை மையமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம், இதுவரையில் 150க்கும் மேற்பட்ட மென்பொருள் தீர்வுகளை வெற்றிகரமாக வடிவமைத்து வழங்கியுள்ளது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago