2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சென்ரல் ஃபினான்ஸ் உடன் கைகோர்த்துள்ள Carmudi.lk

A.P.Mathan   / 2015 ஜூலை 21 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதல்தர ஒன்லைன் கார்கள் விளம்பர இணையத்தளமான Carmudi.lk, இலங்கையின் முதல்தர நிதித் தீர்வுகளை வழங்கும் சென்ரல் ஃபினான்ஸ் கம்பனியுடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம், Carmudi.lkஇல் விளம்பரப்படுத்தப்படும் கார்களை லீசிங் முறையில் சென்ரல் ஃபினான்ஸ் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யும் போது, மொத்த விலையில் 25,000 ரூபாய் கழிவு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Carmudiஇல் விளம்பரம் செய்யப்பட்டுள்ள கார் ஒன்றை லீசிங் முறையில் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் எவரும், இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள கழிவு வவுச்சர் ஒன்றுக்கு தம்மை பதிவுசெய்து கொள்ள முடியும். ஆறு மாத காலப்பகுதிக்கு செல்லுபடியாகும் இந்த வவுச்சரை, சென்ரல் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தில் புதிய லீசிங் ஒன்றை பெற்றுக் கொள்ளும் போதான ஆரம்ப செலவுகளை நிவர்த்தி செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். 

துறையின் முன்னோடியாக திகழ்வது எனும் நோக்கத்துக்கமைவாக, சென்ரல் ஃபினான்ஸ் பிஎல்சி 1957 ஆம் ஆண்டு முதல் புத்தமைவான நிதித் தீர்வுகளை வழங்கிவருவதுடன் வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை சென்ரல் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனம் வழங்குகிறது. இதில் சொத்துக்களுக்கான லீசிங், சேமிப்பு மற்றும் வைப்புகள், ஒப்பந்த வாடகை கொள்வனவு, Fleet Management சேவை, காப்புறுதி முகவர் சேவை, நுண் நிதியியல் சேவை மற்றும் சிறிய மற்றும் மத்தியளவு கடன் வழங்கல் சேவைகள் உள்ளடங்கியுள்ளன.

Carmudi என்பது புத்தாக்கமான ஒன்லைன் கார் சிறுவிளம்பர இணையத்தளமாகும். இதன் மூலமாக உங்கள் காரை, மோட்டார் சைக்கிளை அல்லது இதர வாகனங்களை விரைவாக வாங்கவோ விற்கவோ முடியும். 300,000 க்கும் அதிகமான வாகனங்களை உங்கள் கையடக்க தொலைபேசியிலிருந்து பார்வையிட முடியும். இதன் மூலம் கார் ஷொப்பிங் என்பது, முன்னொரு போதுமில்லாத வகையில் இலகுபடுத்தப்பட்டுள்ளது. 

ஒன்றரை வருடகாலப்பகுதியினுள், Carmudi ஆசியா, ஆபிரிக்கா, மத்தியகிழக்கு மற்றும் இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் வியாபித்துள்ளது. இலங்கையில் தாபிக்கப்பட்டு தனது 1ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் Carmudi.lk இதுவரையில் 3000க்கும் அதிகமான கார் பட்டியல்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதுடன், இலங்கையிலிருந்து நாளாந்தம் 5000க்கும் அதிகமானகார் வாடிக்கையாளர்கள் பார்வையிடும் இணையத்தளமாகவும் திகழ்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X