2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிறந்த சாதனையாளர்களை கௌரவித்த ஜனசக்தி

A.P.Mathan   / 2015 ஜூலை 27 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் கடந்த ஜுன் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற 2015 வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவித்திருந்தது.

இந் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளின் ஆயுள் மற்றும் பொது காப்புறுதி என்ற பிரிவுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் 'Vibrant transitions' எனும் தொனிப்பொருளில் ஊழியர்களின் பங்குபற்றலுடனும் ஆடல், பாடல்களுடனும் நடைபெற்றது. ஆண்டு முழுவதும் தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கிய அதேவேளை தமது இலக்கினை எய்திய சிறந்த செயற்பாட்டாளர்கள் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

'2015 என்பது மாற்றத்திற்கான ஆண்டாகும். இரு நிறுவனங்களை நாம் முன்னெடுத்தாலும், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளதுடன், மேன்மேலும்; வளர்ச்சியை நோக்கி முன்னோக்கி செல்லவுள்ளோம்' என ஜனசக்தியின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனசக்தியின் தலைவர் டபிள்யு.டி.எல்லாவல மற்றும் கௌரவ விருந்தினராக ஜனசக்தியின் ஸ்தாபகர் சி.டி.ஏ.ஷாஃப்ட்டர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

'எமது வளர்ச்சிக்கான ஊழியர்களின் பங்களிப்புக்களை நாம் மதிப்பதுடன், இத்தகைய நிகழ்வுகள் ஊடாக அவர்களை பாராட்டி வருகின்றோம். வெற்றியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இத்தகைய கௌரவிப்புகள் உங்களை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்' என தலைவர் டபிள்யு.டி.எல்லாவல தெரிவித்தார்.

ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி பிரிவினரை அடையாளப்படுத்தும் வகையில் இம்முறை 'தலைவர் விருது' சிறந்த இரு செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. பொதுக் காப்புறுதி பிரிவில் 'தலைவர் விருது' இனை காப்பீட்டு ஏற்பாளராக (Underwriter) நிறுவனத்துடன் இணைந்த கொழும்பைச் சேர்ந்த சமன் இந்திரசிறி என்பவர் வெறும் நான்கு மாதங்களில் வர்த்தக ஊக்குவிப்பு நிறைவேற்று பிரிவில் விற்பனை விருதை வென்றெடுத்தார். இந்த வருடம் Hall of Flame வெண்கலப் பிரிவில் நட்சத்திர செயற்பாட்டாளர் விருதையும் சமன் தனதாக்கிக் கொண்டார்.

ஆயுள் காப்புறுதி பிரிவில் 'தலைவர் விருது' இனை சிறந்த குழு முகாமைத்துவ பிரிவில் விருதை வென்றதுடன், தமது குழுவை வெற்றி நோக்கி முன்னோக்கி வழிநடத்திய மிக பெறுமதியான அணி முகாமையாளராகவும் நீர்கொழும்பு கிளையைச் சேர்ந்த சுலோச்சனா பெர்னாண்டோ வென்றெடுத்தார். இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தமது கடின உழைப்பு மற்றும் ஆக்கத்திறனுக்கான கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

பொதுப்பிரிவில், சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளர் விருதை கே.டபிள்யு.எஸ்.டி.ரொஷான் வென்றதுடன், பொதுக்காப்புறுதி பிரிவில் கொழும்பைச் சேர்ந்த மியுரு ராஜபக்ஷ 2014/2015 இல் அவரது அதிசிறந்த செயல்திறனுக்காக Hall of Flame (வெள்ளி பிரிவு) நட்சத்திர செயற்பாட்டாளர் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார். வைரம் பிரிவில் சிறந்த விற்பனை முகாமையாளர்/ உதவி இலாகா முகாமையாளர் விருதினை தனுஷ்க குமார வென்றெடுத்தார்.

வைரம் பிரிவில் சிறந்த உதவி வர்த்தக ஊக்குவிப்பு முகாமையாளர் விருதினை சமந்த உதேஷ் வென்றதுடன், தங்கம் மற்றும் வெள்ளி பிரிவுகளில் முறையே தம்மிக்க பிரசனஜித் மற்றும் ஜே.எம்.தினேஷ் ஜயசுந்தர ஆகியோர் வென்றெடுத்திருந்தனர். மேலும் வைரம் பிரிவில் சிறந்த சிரேஷ்ட வர்த்தக ஊக்குவிப்பு நிறைவேற்றுநர் விருதினை கொழும்பு மெட்ரோவைச் சேர்ந்த சந்தன ரணவக உம், தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை முறையே இ.என்.ஷசங்க பெர்னாண்டோ மற்றும் திலுஷ அப்புஆரச்சி ஆகியோர் வென்றனர். வைரம் பிரிவில் சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரிக்கான விருதினை மனோஜ் சுபசிங்க மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி பிரிவுகளில் நுவன் மார்டீன்ஸ் உம், ஆர்.அஜந்த உம் தனதாக்கிக் கொண்டனர். மேலும் சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு உதவியாளர் விருதினை வைரப் பிரிவில் ஷானக சயுரங்க மற்றும் தங்கப் பிரிவில் யு.டி.நயனஜித் ஆகியோர் வென்றனர். சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு விற்பனை மேற்பார்வையாளர்(வைரம்) பிரிவில் கே.எச்.ஆரியவன்ச உம், தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை எல்.ஏ.ஷசி மற்றும் தாரக சன்தமாலி குணவர்தன வென்றெடுத்தனர். ஜனசக்தியின் வாகன நிலையத்திற்கு பாரிய வர்த்தகங்களை கொண்டு வந்த என்.கே.ரணவீர சிறந்த மதிப்பீட்டாளராக கௌரவிக்கப்பட்டதுடன், சிறந்த மதிப்பீட்டாளராக சம்பத் விஜேசிங்க பெயரிடப்பட்டார்.

ஆயுள் காப்புறுதி பிரிவில் மேற்கு வலயத்தைச் சேர்ந்த ரெஹான் குணவர்தன சிறந்த வலய விற்பனை முகாமையாளர் விருதை வென்றதுடன், குருநாகல் அனுரசிறி கருணாரத்ன சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளர் விருதை வென்றெடுத்தார். மிகப் பெறுமதி வாய்ந்த அலகு முகாமையாளர் மற்றும் சிறந்த அலகு முகாமையாளர் பிரிவின் வெற்றியாளராக அருண பெர்னாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகப் பெறுமதியான மற்றும் சிறந்த வர்த்தக முகாமையாளர் பிரிவில் விருதுகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதேஷ் தீபா வென்றெடுத்தார். சிறந்த முகவர் பிரிவின் வெற்றியாளராகவும், மிகப் பெறுமதி வாய்ந்த ஆயுள் விற்பனை முகவராகவும் சுஜானி சத்துரிகா குலசேகர வெற்றியீட்டினார்.

'உங்களிடம் ஆர்வம் இருந்தால் நீங்கள் ஒவ்வொருவரும் போட்டியாளரிலிருந்து வெற்றியாளராக வலம் வர முடியும்' என ஜனசக்தியின் பணிப்பாளர் ரமேஷ் ஷாஃப்ட்டர் ஊக்கமளித்து உரையாற்றி விழாவினை இனிதே நிறைவு செய்தார். 

கடந்த இரு தசாப்தங்களாக ஜனசக்தி நிறுவனம் அதன் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் காரணமாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. வெளிநாட்டு பயிற்சி திட்டங்கள் உள்ளடங்கலாக பயிற்சி மற்றும் அபிவிருத்தி முயற்சிகள் போன்வற்றிற்காக இந் நிறுவனம் 40 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. 2015 இல் முதலாவது காலாண்டில் 13.4% வளர்ச்சியை பதிவு செய்துள்ள இந் நிறுவனம் 2014 தேசிய வர்த்தக மேன்மை விருதுகள் விழாவில் இரு தங்க விருதுகளை வென்றெடுத்துள்ளது. எவ்வித தாமதமுமின்றி ATM ஊடாக தமது நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் Easy Claim எனும் திட்டத்தை அறிமுகம் செய்து காப்புறுதி துறையில் பெரும் புரட்சியை ஜனசக்தி ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X