Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 27 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சன்ஷைன் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா நிறுவனம் (SHL) வெற்றி நோக்கிய ஆர்வத்துடன் அதன் குழுவினரை கட்டியெழுப்புவதில் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறது. சுகாதார பராமரிப்பு துறையில் தேசத்தின் முன்னணி தீர்வுகள் வழங்குநராக SHL திகழ்கிறது.
'மனித வள கற்றல் பரப்பில் மிகப்பெரிய பகுதியான அனுபவ ரீதியான கற்றல் அனுபவத்தை வழங்கும் வகையில் அண்மையில் மரபுசாரா பயிற்சி திட்டங்கள் தொடரினை நாம் அறிமுகம் செய்திருந்தோம்' என மனித வளங்கள் துறையின் குழும தலைவர் மிஷேல் சேனாநாயக்க தெரிவித்தார். 'மேலும் ஊழியர்கள் தமது சவால்களை எதிர்கொள்வதற்கான ஊக்குவிப்பை வழங்கிடும் வகையில் தனிநபர்களின் பங்களிப்பை அடையாளப்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்திருந்தோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
இந் நிறுவனத்தின் செயற்திறன் அளவுகோள்களில் ஒன்றாக திறமை தக்கவைப்பு அமைந்துள்ளதுடன், இந்த முறை ஊடாக அதன் இளம் மற்றும் சக்திவாய்ந்த தொழிற் படையினரை SHL ஈடுபடுத்தி வருகிறது. ஊழியர் ஆய்வானது எமது ஊழியர்களின் தேவைகளை புரிந்து கொள்ளவும், நிறுவனத்துடன் ஊழியர்களின் நிகழ்ச்சி நிரலை வரிசைப்படுத்துவதற்கும் எமக்கு உதவியுள்ளது.
கடந்த சில மாதங்களாக அனுபவ ரீதியான கற்றல் களமாக முன்னெடுக்கப்பட்ட இத் திட்டங்கள் ஊடாக தலைமைத்துவ ஆற்றல், ஊழியர் ஊக்குவிப்பு மற்றும் குழு மனப்பான்மை போன்றவற்றை விருத்தி செய்ய முடிந்துள்ளது.
உயர் பங்குபற்றல் மற்றும் அனுபவ ரீதியான கற்றல் போன்றவற்றை உறுதி செய்வதே ளுர்டு இன் கற்றல் பாடத்திட்டத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. அனைத்து மட்ட ஊழியர்களினதும் குறிப்பிட்ட தேவைகளுக்கு பொருத்தமாகவும், நிறுவனத்தின் இலக்குகளை பொதுவான புரிந்துணர்வுடன் இயக்கும் வகையிலும் பயிற்சி திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன' என மேலும் மிஷேல் குறிப்பிட்டார். இந் நிறுவனத்தின் அங்கத்தவர்கள் பொதுவாக முகம் கொடுக்கும் சூழ்நிலை பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு பண்டாரகம நகரின் சர்வோதய கல்வி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கற்றல் செயற்பாடுகளில் SHL குழுக்களைச் சேர்ந்த சுமார் 450 ஊழியர்கள்; பங்குபற்றியிருந்தனர்.
மிகச்சிறந்த கூட்டாண்மை நிறுவனங்களுக்கு குழு கட்டமைப்பு மற்றும் தலைமைத்துவ பயிற்சிகளை உருவாக்குவதில் முன்னோடியான Wild Drift மூலம் இப் பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. குழு மனப்பான்மையை மேம்படுத்துவதே இத்திட்டங்களின் குறிக்கோளாக அமைந்திருந்தது.
இந்த திட்டங்கள் குறித்து SHL இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஷியாம் சதாசிவம் கூறியதாவது, 'எனது அணியினர் அதியுயர் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்ததுடன், அவர்கள் மிகவும் துடிப்பாகவும், நேர்மறையாகவும் காணப்படுகின்றனர்' என்றார்.
இந் நிறுவனத்தின் மனித வளப் பிரிவானது செயற்திறன் நோக்கிய கலாச்சாரம், செயற்திறன் ஊக்குவிப்பு மற்றும் வெகுமதிகள் மற்றும் திறமைகளை தக்கவைத்தல் போன்றவற்றில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago