2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சமாதி பௌத்த நிலையத்துக்கு சைத்தியவை அன்பளிப்பு செய்த அமில் குரூப்

A.P.Mathan   / 2015 ஜூலை 30 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 30 வருட சேவையை நினைவுகூறும் வகையில், அமில் குரூப் நிறுவனத்தின் தலைவர் வோல்டர் அபேசுந்தரவினால் வடிவமைக்கப்பட்ட சைத்திய கொத்தவை இரத்மலானை, சமாதி பௌத்த நிலையத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குபற்றியிருந்தார். 

வேல்டர் அபேசுந்தரவின் பேரனான ஆதித்ய அபேசுந்தரவினால் இந்த கையளிப்பு இடம்பெற்றதுடன், இதற்கான வழிகாட்டல்களை நிலையத்தின் பிரதம குருவான வண. மாபலகம புத்தசிரி தேரர் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அமில் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான ஹேஷினி சமரகோன் கருத்துத் தெரிவிக்கையில், 'நானும் எனது குடும்பத்தாரும், கம்பனியின் வருமானத்தின் ஒரு பகுதியை சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பல ஆண்டுகளாக ஒதுக்கி வருகிறோம். சமூகம், சமயம் மற்றும் கலை ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்தும் வகையில் எமது நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்கள் அமைந்துள்ளன. இன்றைய நிகழ்வின் விசேட அம்சம் யாதெனில், தலைவரின் எதிர்பார்ப்பு, அவரின் பேரப்பிள்ளையால் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்காலத் தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது' என்றார்.

வைத்திய ஆலோசகருமான சுஜாதா சமரகோனின் புதல்வியாக ஹேஷினி சமரகோன் திகழ்கிறார். முன்னாள் மீனவ அமைச்சரும், சமூக ஆர்வலருமான எஸ் டி எஸ் ஜயசிங்கவின் பேத்தியுமாவார்.
ஹேஷினி தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 'நான் சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். அமில் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக எனது கணவர் பணியாற்றுகிறார். எனவே, நாம் தொடர்ந்தும் சமூகத்தின் நலன் கருதி இது போன்ற சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

இந்த சைத்திய கையளிப்பு நிகழ்வில், சியாம் நிகாயவின் கோட்டே பீடத்தின் பிரதம குரு வண. இத்தபன தம்மாலங்கார தேரர், சியாம் நிகாயவின் மல்வத்து உப குரு பேராசிரியர் வண. நியங்கொட தர்ம கீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித்த விஜிதசிறி தேரர் மற்றும் கோட்டே நாகவிஹாரை பிரதம குரு வண. சோபித தேரர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மோஹன் லால் குரேரு ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அமில் குழுமத்தில், இலங்கையின் முன்னணி நிர்மாணத்துறை நிறுவமான அமில் பில்டர்ஸ், அமில் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அமில் ஜனிடோரியல் சேர்விசஸ் கம்பனி ஆகியன உள்ளடங்கியுள்ளன. அமில் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூலமாக DESIGNER வர்த்தக நாமத்திலமைந்த அமில் சுழல் படலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X