2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

றிச்சர்ட் பீரிஸின் வருடாந்த விநியோகத்தர் ஒன்றுகூடல்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனியின் வருடாந்த விநியோகத்தர் ஒன்றுகூடல் நிகழ்வு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. கம்பனியின் 1500 உறுதியான விநியோகத்தர்கள் மத்தியில், சிறப்பாக தமது செயற்பாடுகளை வெளிப்படுத்தியிருந்த விநியோகத்தர்களை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கான விருதுகளை றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி குழும பணிப்பாளர் சுனில் லியனகே மற்றும் பொது முகாமையாளர் பிரதீப் சமரதுங்க ஆகியோர் வழங்கியிருந்தனர்.

கடந்த ஆண்டுகளில் 50 விற்பனை முகவர்கள் மட்டுமே நிகழ்வுக்கு வரவேற்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான போட்டி காணப்பட்டதால், இந்த ஆண்டு மொத்தமாக 100 விற்பனை முகவர்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன், சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 25 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

வழமை போலவே, இந்த ஆண்டும் டயர் ரிடிரெடிங் மற்றும் டயர் விற்பனை பிரிவுகளில் விசேட விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

டயர் ரிடிரெடிங் பிரிவில் அகில இலங்கைக்கான சிறந்த விருதை திக்வெல்;ல, சாந்தி டயர் மார்ட் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.எம்.ரி.ஜே. சாந்திரட்ன வெற்றியீட்டியிருந்தார். இரண்டாமிடத்தை ரம்புக்கன, சிசிர டயர் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டபிள்யு.ஏ.டபிள்யு.டபிள்யு. சிசிர குமார வெற்றியீட்டியிருந்ததுடன், பலாங்கொட, ஜயந்தி டயர் சென்டர் உரிமையாளர் எச்.ஏ.சி.பி. தேவிகா மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.

இதுபோலவே, டயர் விற்பனை பிரிவில் சிறந்த விநியோகத்தருக்கான விருது (நாடு முழுவதையும் உள்ளடக்கி) பன்னல, ஹிருணி டயர் ஹவுஸ் உரிமையாளர் ஐ.ஏ.கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இரண்டாம் பரிவு அட்டாளைச்சேனை, ரீகல் மார்கெட்டிங் நிறுவன உரிமையாளர் அப்துல் பஹாமுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த விருதுகள் வழங்கும் வைபவம் சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கம்பனியின் புதிய டயர் அறிமுகமாக Arpidag Hybrid இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனியில் பொது முகாமையாளரான பிரதீப் சமரதுங்க கருத்து தெரிவிக்கையில், 'இலங்கைச் சந்தையில் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்வது கம்பனியின் இலக்காகும். இதற்காக உறுதியான மற்றும் அர்ப்பணிப்பான விநியோகத்தர்களை நாடு முழுவதும் நாம் கொண்டுள்ளோம்' என்றார். 

'நாம் தொடர்ச்சியாக எமது பொருட்களின் தரத்துக்கு பெறுமதி சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அவற்றை சகாயமான விலையில் எமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கமைய வழங்கி வருகிறோம்' என சமரதுங்க குறிப்பிட்டார்.

றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனி 1932 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டிருந்தது. 1942 இல், கம்பனி ரீபில்டிங் டயர்கள் பிரிவில் இணைந்தது. இதன் மூலம் இலங்கையின் முதலாவது ரீபில்டிங் கம்பனி எனும் பெருமையையும் பெற்றுக் கொண்டது. படிப்படியாக உறுதியாக வளர்ச்சியடைந்த நிறுவனம், 1991 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் BANDAG கம்பனியுடன் இணைந்து 'ARPIDAG' டயர்களை இலங்கையில் அறிமுகம் செய்திருந்தது. டயர்கள் துறையில் ஈடுபடும் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்டிருந்த புரட்சிகரமான செயற்பாடாக இது அமைந்திருந்தது.

இலங்கையில் காணப்படும் டயர் மீள் நிரப்பும் கம்பனியான றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனி, தற்போது 50,000க்கும் அதிகமான DAG டயர்கள் மற்றும் பாரம்பரிய மீள்நிரப்பல் டயர்களை மாதமொன்றில் உள்நாட்டு விநியோகித்து வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X