2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Construct கண்காட்சி 2015இன் பிரதான அனுசரணையாளராக EMP

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி பொறியியல் நிர்மாண எலெக்ட்ரோ மெட்டல் பிரெசிங்ஸ் (EMP) எதிர்வரும் 'Construct 2015' கண்காட்சிக்கு உத்தியோகபூர்வ அனுசரணையை வழங்க முன்வந்துள்ளது. 'உங்கள் கனவுகளை கட்டியெழுப்புங்கள்' எனும் தொனிப்பொருளில் தொடர்ச்சியான 15 ஆவது தடவையாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய நிர்மாண சம்மேளனத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் மூலமாக அங்கீகாரமளிக்கிறது. ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இந்த அனுசரணை தொடர்பில் EMP குழுமத்தின் தலைவர் சந்திரானந்த தியுனுகே கருத்து தெரிவிக்கையில், 'இந்த கண்காட்சிக்கு நாம் அனுசரணை வழங்குவதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். இலங்கையில் முன்னெடுக்கப்படும் அதிகளவானோரை கவர்ந்த ஒரு கண்காட்சியுடன் இணைந்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.

'எமது உறவை நாம் வலுப்படுத்துவதன் மூலமாக, நிர்மாணத்துறையில் பாரம்பரியமாக வழங்கி வரும் பொருட்கள் மற்றும் சேவைகளை நாம் மேலும் வலுவூட்ட திட்டமிட்டுள்ளோம். அரசாங்க கொள்கைகளில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, இந்தத் துறை மேலும் வளரச்சியடையும் என நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.

மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சிகளில் கலந்து கொள்வதற்கு 350 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காட்சிகூடங்கள் உள்ளடக்கப்படும். இவற்றில் நிர்மாண நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், பொறியியலாளர்கள், வடிவமைப்பாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், ஆலோசகர்கள், உள்ளக வடிவமைப்பாளர்கள், குவான்டிட்டி சேவையர்கள் போன்ற பலரும் பங்கேற்கவுள்ளனர். நிர்மாணத்துறையை பொறுத்தமட்டில் வௌ;வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெருமளவு ஈடுபாட்டைக் கொண்ட ஒரு நிகழ்வாக இது அமைந்திருக்கும். 

1982 இல் ஸ்தாபிக்கப்பட்ட EMP நிறுவனம், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேற்பகுதிகள் மற்றும் பெனல் பலகைகள், கேபிள் முகாமைத்துவ கட்டமைப்புகள், கணனி ரெக்கள் மற்றும் இதர இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் போன்றன மாற்றியமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. பொறியியல் நிர்மாணத்துறைக்கு பரிபூரண தீர்வுகளை வழங்கும் வகையில் நான்கு இதர அங்கத்துவ நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதில், EMP PVC தொழில்நுட்பம், PVC பைப்கள் விநியோகம், கொண்டியுட்கள் மற்றும் சாதனங்கள் போன்றன மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் கேள்விகளைப்பொறுத்து விநியோகிக்கப்படுகின்றன. அங்கீகாரம் பெற்ற குழுமக் கம்பனியான AKLAN இன்டர்நஷனல், மூலமாக உலகத் தரம் வாய்ந்த இலத்திரனியல் சாதனங்கள் விநியோகிக்கப்படுகின்றன. OMATA வோட்டர் மனேஜ்மன்ட் மூலமாக, நீர் மற்றும் தூய்மை தொடர்பான துறைகளுக்கும் மின்சாரம் மற்றும் பெற்றோலிய துறைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. EMP புரெஜெக்ட்ஸ் லங்கா மூலமாக உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, பொறியியல் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X