2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

‘Swim’ by Colombo Fashion Week நிகழ்வின் பங்காளராக A&E Lanka

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி ஆடை நூல்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமமான American & Efird LLC, USA இன் அங்கத்துவத்தைப் பெற்ற American & Efird (A&E) Lanka நிறுவனம், இலங்கையின் ‘Swim’ by Colombo Fashion Week (CFW) நிகழ்வின் பிரதான பங்காளராக கைகோர்த்துள்ளது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதல் தடவையாக அறிமுகமாகும் CFW, Swim நிகழ்வு, வருடாந்தம் இடம்பெறவுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நீச்சல் ஆடை அலங்கார வடிவமைப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை உள்வாங்கி இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கை அதன் ஆடை உற்பத்திகளுக்கு ஏற்கனவே புகழ்பெற்ற நாடாக திகழ்கிறது.  உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி இயலுமைகளை இது கொண்டுள்ளது. நீச்சல் ஆடைகளுக்கான மையமாக திகழ்வதற்கான பெருமளவு வாய்ப்பை வெளிப்படுத்தியிருந்தது. 

ஒரு தசாப்த காலமாக திறமைகளை வெளிக்கொணரும் வகையிலமைந்த CFW, ஆசியப்பிராந்தியத்தில் இடம்பெறும் நான்கு பிரதான நிகழ்வுகள் மற்றும் திட்டங்களின் ஓரங்கமாக அமைந்துள்ளது. இதன் மூலமாக இலங்கையில் இந்தத்துறையை கட்டியெழுப்பப்படுவதுடன், பெரும் ஆர்வத்துடன் திகழும் உள்நாட்டு வடிவமைப்பாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உலகளாவிய ரீதியில் வழங்குகிறது.

A&E Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரியந்த அலுத்வத்த கருத்துத் தெரிவிக்கையில், 'சகல பருவகாலத்திலும் ஆடை உற்பத்தியாளர்களால் பெருமளவில் தெரிவு செய்யப்படும் வர்த்தக நாமமாக நாம் அமைந்துள்ளோம். நீச்சல் ஆடைகளை பொருத்தமட்டில், இலங்கையில் அதிகளவு கேள்வி காணப்படுவதுடன், இந்த வருடாந்த CFW நிகழ்வுடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்னணி நீச்சல் ஆடைகளை காட்சிப்படுத்தும் நிகழ்வான இது வளர்ச்சியடையும் என நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.

நீச்சல் ஆடைத் தெரிவுகளை A&E Lanka காட்சிப்படுத்துவதுடன், இதற்காக தொடர்பாடல் மற்றும் புத்தாக்க முறைகளை பின்பற்ற தீர்மானித்துள்ளது. நூற்களைக் கொண்டு கண்கவர் வகையிலமைந்த பதிதல் முறை ஏலத்தில் வைக்கப்படும்.

தொழிற்துறை தையல் நூல், எம்பிராய்டரி நூல் மற்றும் தொழில்நுட்ப ஆடையக உலகின் மிகப்பாரிய உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தருள் ஒருவாரான American & Efird (A&E) Lanka நிறுவனம், தரமான மற்றும் அர்ப்பணிப்பு மிக்க உற்பத்தியை வழங்கி வருகின்றது. மேலும் இலங்கையில் தையல் நூல் சந்தையில் பாரிய பங்காற்றும் இந்நிறுவனம் நான்காவது ஆண்டாகவும் விருப்பிற்குரிய நூல் தீர்வுனராக 'இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்' மூலம் தெரிவாகியுள்ளது. 

American & Efird (A&E) Lanka நிறுவனம், 120 வருடங்களுக்கு மேலாக ஆடை வியாபாரத்தில் ஆதிக்கம் வகித்து வருகின்றது. மேலும் இந்நிறுவனம் திட்டமிடப்பட்ட விநியோகம், தொடர்ச்சியான மற்றும் நீடிப்புத் தன்மை, உச்சகட்ட செயல்முறை, அர்ப்பணிப்பு மற்றும் நெகிழ்வான சேவை மற்றும் பரந்த அளவிலான உற்பத்தி பிரிவு உட்பட முன்னணி தொழில்நுட்பங்களை கையாண்டு வருகின்றது. 

American & Efird (A&E) Lanka நிறுவனத்தின் சர்வதேச வலையமைப்பினூடாக இத்தயாரிப்புக்கள் 23 நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு 50 நாடுகளில் விநியோகிக்கப்படுவதுடன் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் இந்நிறுவனம் உயர் தரமான தையல் நூல் ஐரோப்பிய உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தருடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் மூலம் தனது சர்வதேச தயாரிப்பு விநியோகத்தை விஸ்தரித்துக்கொண்டது. இந்த ஐரோப்பிய நிறுவனம் Ludlow®, Robison-Anton® மற்றும் Synthetic Thread போன்ற தையல் சார் உற்பத்திகளை மேற்கொள்ளும் பிரபல்யமான நிறுவனமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X