2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பின் பெர்ணான்டோ கோப்பை 2015இன் வெற்றியாளர் அரவிந்த் பெர்ணான்டோ

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியாக சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த அரவிந்த பெர்னான்டோ, பின் பெர்னான்டோ கோப்பை 2015ஐ வெற்றியீட்டியிருந்தார். ரவீந்திர விஜேகுணரட்வை வெற்றியீட்டியதன் மூலம் இந்த கோப்பையை தனதாக்கியிருந்தார்.

வெளிநாட்டில் பல ஆண்டுகளாக உயர்கல்வியை தொடர்ந்திருந்த அரவிந்த், இலங்கைக்கு மீளத்திரும்பி, தெற் மேற்கு பருவகால போட்டித்தொடரின் போது சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற போட்டித் தொடர் சிறந்த தகுதிகாண் போட்டியாக அமைந்திருந்தது.

அரவிந்த் தொடர்ச்சியாக தமது திறமைகளை தம் தந்தை அர்ஜுன் பெர்னான்டோவை போல வெளிப்படுத்தியிருந்ததுடன், இலங்கையின் எதிர்கால கொல்ஃவ் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தக்கூடியவராக திகழ்கிறார்.

அரவிந்த்தின் வெற்றியுடன், பின் பெர்னான்டோ கோப்பையை தந்தை மற்றும் மகன் இணைந்து வெற்றியீட்டி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் அர்ஜுன் பெர்னான்டோ 1995 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் போட்டிகளை வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரவிந்த் இந்த ஆண்டில் தந்தை / மகன் வெற்றியை முடிவுக்கு கொண்டுவந்தார்.

பெண்களுக்கான பெம் பெர்னான்டோ கேடயம் 2015 போட்டியில் ரொஷினி சங்கானி வெற்றியீட்டியிருந்தார். இவருக்கு கடுமையான போட்டியை ஸ்வென் செல்வரட்னம் ஆரம்பத்திலிருந்து வழங்கியிருந்தார்.

பின் பெர்னான்டோ கோப்பை முதன் முதலில் ரோயல் கொழும்பு கோல்ஃவ் கழகத்தில் 1979ஆம் ஆண்டில் விளையாடப்பட்டது. முன்னாள் கொல்ஃப் வீரர் மறைந்த பின் பெர்னான்டோவை கௌரவிக்கும் வகையில் இப்போட்டி முன்னெடுக்கப்படுகிறது.

1981 ஆம் ஆண்டு பின் பெர்னான்டோ இவ்வுலகை நீத்தார், ஆனாலும் அவர் மொத்தமாக 52 சம்பியன்சிப்களை வெற்றியீட்டி பதிவு செய்துள்ள சாதனை இன்றும் முறியடிக்கப்படாமல் உள்ளது. 1947 ஆம் ஆண்டு இவர் தனது முதலாவது சிலோன் சம்பியன்சிப் வெற்றியைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து 11 இலங்கை Amateur சம்பியன்சிப்கள், 2 அகில இந்திய Amateur சம்பியன்சிப்கள், 2 திறந்த இலங்கை வெற்றிகள், 1 மேற்கு இந்திய திறந்த வெற்றி,  19 RCGC சம்பியன்சிப் வெற்றிகள், 11 ஹவலொக் கொல்ஃப் கழக சம்பியன்சிப் வெற்றிகள் மற்றும் 7 நுவரெலியா கொல்ஃப் கழக சம்பியன்சிப்கள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

UTE இன் தலைவரும், RCGCஇன் முன்னாள் தலைவரும், பின் பெர்னான்டோவின் ஒரே புதல்வருமான பிரியாத் பெர்னான்டோ, UTEக்கு தொடர்ச்சியாக பின் மற்றும் பெம் பெர்னான்டோ போட்டிகளுக்கு அனுசரணை வழங்க RCGC வாய்ப்புகளை வழங்குகின்றமைக்காக நன்றி தெரிவித்திருந்தார். 

பின் பெர்னான்டோவை திருமணம் செய்த பின்னர் கொல்ஃவ் விளையாட ஆரம்பித்த பெம் பெர்னான்டோ, ஐந்து இலங்கை வெற்றிகளை பதிவு செய்த பெருமையை கொண்டுள்ளார். கின்னஸ் உலக சாதனையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் தேசிய கொல்ஃவ் பட்டத்தை வென்ற வயது கூடிய பெண்மணி எனும் பெருமையையும் இவர் கொண்டுள்ளார்.

இறுதி பெறுபேறுகள்
பின் பெர்னான்டோ கோப்பை 2015
வெற்றியாளர் – அரவிந்த் பெர்னான்டோ 3 மற்றும் 1
இரண்டாமிடம் – ரவீந்திர விஜேகுணரட்ன
பெம் பெர்னான்டோ கோப்பை 2015
வெற்றியாளர் – ரொஷ்னி சங்கானி 20th


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X