2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மிக நம்பகமான வர்த்தகநாமமாக தரப்படுத்தப்பட்டுள்ள DHL நிறுவனம்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி அதிவேக சரக்கியல் சேவை வழங்குநரான DHL Express நிறுவனம் மிகவும் உயரிய நிகழ்வாக கருதப்படும் 2015 Reader’s Digest நம்பகமான விருதுகள் வழங்கும் நிகழ்வில் தொடர்ந்து 7ஆவது ஆண்டாக ஆசியாவின் விமான சரக்கு / கூரியர் சேவை' பிரிவில் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமம் எனும் விருதை வென்றுள்ளது. DHL நிறுவனம் முதல் முறையாக 2014இல் தாய்வான் நகரில் தங்க விருதை வென்றெடுத்ததுடன், குறிப்பாக ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் தாய்வான் போன்ற நகரங்களில் பிளாட்டினம் விருதுகளை வென்று அதன் சந்தை தலைமைத்துவ ஸ்தானத்தை விஸ்தரித்திருந்தது. DHL Express மலேசியா மற்றுமொரு தங்க விருதுடன் அதன் சந்தை தலைமைத்துவத்தை தக்கவைத்துக் கொண்டதுடன், முதல் முறையாக வாசகர்கள் மூலம் வாக்களிப்பட்டு தங்க விருதை DHL Express பிலிப்பைன்ஸ் உம் தனதாக்கிக் கொண்டது.

17ஆவது வருடமாக முன்னெடுக்கப்படும் Reader’s Digest விருதுகள் என்பது சுமார் ஆசியாவைச் சேர்ந்த ஹொங்கொங், இந்தியா, மலேசியா, பிலின்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற ஏழு சந்தைகளிலிருந்து கிடைத்த சுமார் 5000 வாசகர்களை உள்ளடக்கிய ஆய்வுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது. 'விமான சரக்கு/ கூரியர் சேவை' பிரிவில் நம்பகமான வர்த்தகநாம விருதுகளை கொண்ட அனைத்து சந்தைகளிலும் DHL உயர் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

DHL Express ஆசிய பசுபிக் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜெரி சூ கருத்து தெரிவிக்கையில், 'ஒவ்வொரு நிறுவனமும் சிறந்த ஓர் ஆண்டினை பெற முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நிலையான சிறந்த சேவையை வழங்குவதே வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெறுவதற்கான முறையாகும். நம்பிக்கை என்பது எமது வர்த்தகநாமத்தின் இதயமாக அமைந்துள்ளதுடன், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசியாவில் DHL அதன் நம்பிக்கையை கட்டியெழுப்பிக் கொண்டுள்ளது. Reader’s Digest நம்பகமான வர்த்தகநாமம் விருதுகள் போன்ற மரியாதைக்குரிய திட்டங்கள் மிக உயர்ந்த அளவுகோளினை அமைக்க எம்மை ஊக்குவித்துள்ளது. கடந்தாண்டு குறிப்பாக தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் எமது செயற்றிறனை மேம்படுத்தியதையிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன்' என்றார்.

'தற்போது நாம் கரியமில வாயு (CO2emission) வெளியேற்றத்தை இல்லாதொழிக்கும் வகையிலும், செயல்பாட்டு செயற்திறனை மேம்படுத்தும் வகையிலும் புதிய எரிபொருள் திறன் மிக்க வாகனங்கள் மீது முதலீடு செய்து வருகிறோம். எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு எமது சேவை வழங்கலை தொடர்ச்சியாக விஸ்தரித்து வருவதுடன், ஆசிய, அமெரிக்க மற்றும் உள்ளக ஆசியா என்பவற்றுக்;கிடையே திறன் சேர்த்து வருகின்றோம். DHL ஆகிய நாம் வெற்றியை பெறுவதற்கு வாடிக்கையாளர் திருப்தி, புத்துருவாக்க தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த சேவை வழங்கல் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்பதை அறிந்துள்ளோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.

The Reader’s Digest ஆசியாவின் மிக நம்பகமான வர்த்தகநாமமானது நிறுவனங்களின் நம்பகத்தன்மை, தரம், பெறுமதி மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்ளுதல், புத்துருவாக்கம் மற்றும் சமூக பொறுப்பு போன்றவற்றின் அடிப்படையில் சுமார் 5000 வாசகர்களிடமிருந்து பெற்ற புள்ளிகளின் படி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதிகப்படியான புள்ளிகளினால் அதன் மிக நெருங்கிய போட்டி நிறுவனங்களை பின்தள்ளி விட்டு, ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் தாய்வான் போன்ற நாடுகளில் உள்ள DHL நிறுவனம் பிளாட்டினம் விருதை வென்றெடுத்தது. மலேசியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் தங்க தரத்தினை பெறுவதற்கு DHL நிறுவனம் அதன் பிரிவுகளில் தெளிவான சந்தை தலைமையை கொண்டிருத்தல் வேண்டும். மிகவும் பெருமைக்குரிய ஒட்டுமொத்த ஆசியாவின் மிக நம்பகமான வர்த்தகநாம விருதினை பெறுவதற்கு மூன்று சந்தைகளில் முன்னோடியாக இருக்க வேண்டும். 2015ஆம் ஆண்டில் DHL நிறுவனம் அதன் தலைமைத்துவத்தை நான்கிலிருந்து ஐந்து சந்தைகளுக்கு விஸ்தரித்திருந்தது.

DHL நிறுவனமானது இந்த பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் time-sensitive ஏற்றுமதியின் சர்வதேச விநியோகத்தில் தரத்தினை உருவாக்குவதில் புதிய வழிமுறைகள், புத்துருவாக்கங்கள் மற்றும் புதிய சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்குகிறது. கடந்த 2014ஆம் ஆண்டில் DHL ஆனது இலத்திரனியல் மற்றும் பற்றரி செயல்பாடு உள்ளடங்கலாக மிகவும் எரிபொருள் சிக்கனம் மிக்க எஞ்சின்கள் கொண்ட புதிய வாகனங்கள் மீது முதலீடு செய்திருந்தது. செயற்திறன் மிக்க தரை நடவடிக்கைகள், வலு செயற்திறன்மிக்க கட்டிடங்கள், சிறந்த காலநிலை கட்டுப்பாட்டு முகாமைத்துவம் மற்றும் புதிய தகவல் தொழில்நுட்ப உட்கட்டுமானம் போன்றவற்றின் ஊடாக பிராந்தியத்தில் வலுசெயற்றிறன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

DHL Express நிறுவனம் ஆசிய பசுபிக் வலயத்தில் 40 ற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சுமார் 22இ000 ஊழியர்களுடன், 600,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தமது சேவையை வழங்கி வருகிறது. அதன் வலையமைப்பானது சுமார் நான்கு பிரதான பிராந்திய air hubs மூலம் செயல்படுத்தப்படும் 20 விமானங்கள் மற்றும் நாளாந்தம் சுமார் 790 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ஊடாக விரிவான வான்மார்க்க சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014இல், DHL ஆனது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஹொங்கொங் பொருளாதாரத்தை இணைக்கும் புதிய உள்ளக ஆசிய விமான அறிமுகத்தோடு அதன் ஆசிய விமான வலையமைப்பினை மேம்படுத்தியிருந்தது.

கடந்த ஜுன் 18 இல் சிங்கப்பூரிலும், ஜுன் 23 இல் ஹொங்கொங் நகரிலும், ஜுன் 25 இல் தாய்வான் இலும் இடம்பெற்ற Reader’s Digest விருதுகள் விழாவில் DHL விருதுகளை வென்றுள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் மேன்மை மற்றும் நம்பிக்கையை பெற்ற ஆசியாவின் வர்த்தகநாமங்களை அடையாளப்படுத்தும் குறிக்கோளுடன் 1999ஆம் ஆண்டில் வருடாந்த Reader’s Digest Asia’s Trusted Brands விருதுகள் விழா அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உலகில் அதிகம் விற்கப்பட்டு வரும் சஞ்சிகையும், Ipsos மூலம் சுயாதீனமாக ஒழுங்கு செய்யப்படும் இந்த ஆய்வானது வாடிக்கையாளர்களுடன் எழுத்து மூலமான கேள்விகள், தொலைபேசி, ஒன்லைன் அல்லது நேரடியான நேர்காணல்கள் ஊடாக நாடுகளில் 42 இற்கும் மேற்பட்ட பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிராந்தியத்திலுள்ள மிக நம்பகமான வர்த்தகநாமங்கள் தொடர்பில் நம்பகமான தகவல்களை வழங்குகின்ற ஆசியாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் கருத்துக்களை தெரியப்படும் பிரதிநிதியாக திகழ்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X