Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 05 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியாவின் சொத்துகள் தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru, பிராந்தியத்தின் மாபெரும் நன்மதிப்பைப் பெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வை மூன்றாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
PropertyGuru ஆசிய சொத்துகள் விருதுகள் (இலங்கை) மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டின் சிறந்த வடிவமைப்பாளர்கள், சொத்துகள், வடிவமைப்புகள் தொடர்பில் கௌரவிக்கப்படவுள்ளது. ஒன்லைனில் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்களைத் தற்போது இணையத்தளத்தினூடாக மேற்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது. பொது மக்கள் மற்றும் துறையைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
திறந்த சுற்றுகளில் Best Condo, Housing, and Residential Development in Colombo, North East, Central, and Southern Sri Lanka. There are also commercial categories for Best Retail, Office, Mixed Use, Industrial மற்றும் Hotel Development ஆகியன அடங்கியுள்ளன. மேலும், மாலைதீவுகளிலும் சிறந்த வதிவிட அபிவிருத்திக்கான சிறந்த வடிவமைப்பாளருக்குரிய விருதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரிகளுக்கு சில விசேட திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வுத் துறை, நிலைபேறான அபிவிருத்தி, வடிவமைப்பு, நிர்மாணம், நுகர்வோர் பராமரிப்பு, சமூக நிர்மாணத் திட்டம் போன்றவற்றில் சிறப்பாகச் செயலாற்றியவர்களும் கௌரவிக்கப்படுவார்கள். இவற்றுக்கு மேலாக இலங்கையின் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் நபர் விருதும் வழங்கப்படும். 2018ஆம் ஆண்டு இந்த விருது முதல் தடவையாக வழங்கப்பட்டதுடன், இந்த விருதை Indocean Developers (Pvt) Ltd இன் பணிப்பாளரும் Condominium Developers Association of Sri Lanka (CDASL) இன் தலைமை அதிகாரியுமான பிரதீப் மொராயஸ் பெற்றுக் கொண்டார்.
சிறந்த வடிவமைப்பாளர், சிறந்த புட்டிக் வடிவமைப்பாளருக்கான உயர் விருதுகளும் வழங்கப்படும். உள்நாட்டு போட்டியில் சிறப்பாகச் செயலாற்றி வெற்றியீட்டியவர்களுக்கு இவ்வாண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தின், பங்கொக் நடைபெறவுள்ள மாபெரும் பிராந்திய ஆசிய சொத்துகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
நேர்மை, வெளிப்படைத்தன்மை, தங்கியிருக்கும் திறன் போன்றவற்றில் உறுதியான நற்பெயரைக் கொண்டுள்ள 2019 PropertyGuru ஆசியா சொத்துகள் விருதுகள் (இலங்கை) நன்மதிப்பைப் பெற்ற துறைசார் நிபுணர் நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படும்.
28 minute ago
36 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
39 minute ago