2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

24ஆவது வருடமாக ஜொலிக்கும் 'FACETS Sri Lanka 2014'

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் முன்னெடுக்கப்படும் FACETS Sri Lanka இந்த வருடமும் பல உள்நாட்டு வெளிநாட்டு காட்சியாளர்களுடன் தொடர்ச்சியான 24 ஆவது வருடமாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இந்த கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.. 
 
இந்த நிகழ்வை சுற்றாடல் துறை மற்றும் மீள்பயன்பாட்டு வலு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பதில் அமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் மற்றும் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் றிசார்ட் பதியுதீன் ஆகியோர் பிரதம அதிதிகளாக பங்கேற்று அங்குரார்ப்பணம் செய்திருந்தனர். இந்த நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக மாணிக்கக்கல் ஆராய்ச்சிக்கான ஜேர்மனிய மையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. க்ளவுடியோ சி.மிலிசெந்த,  பா ங்கொக், ஜிஐஏ ஆய்வுகூடத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கென்னித் ஸ்கார்ராட் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
 
FACETS Sri Lanka 2014 என்பதில் 150 க்கும் மேற்பட்ட காட்சிகூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. மியன்மார், தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க அதிகார சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் சிறிய மற்றும் மத்தியளவு வியாபார பிரத்தியேக காட்சி கூடங்களை கொண்டமைந்துள்ளது. மேலும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கொள்வனவாளர் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், துபாய், மியன்மார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த காட்சி கூட உரிமையாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிகழ்வு பற்றி FACETS Sri Lanka 2014 இன் தலைவர் ஜுசர் அடமலி கருத்து தெரிவிக்கையில், 'கடந்த 23 வருடங்களில், இந்த கண்காட்சி என்பது படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது உலகப்புகழ் பெற்ற கண்காட்சியாக பிரபல்யமடைந்துள்ள இந்நிகழ்வில் மாணிக்கக்கல் மற்றும் தங்க இறக்குமதியாளர்கள், மொத்த வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வின் போது கொள்வனவாளர்கள் உலகின் மிகவும் சிறந்த மற்றும் உயர்ந்த மாணிக்கக்கற்களையும் தங்கத்தை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய அதிகளவு ஆர்வம் செலுத்துகின்றனர். இந்த வருடம் நாம் பெருமளவான பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம். இந்த துறை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை 2016 ஆம் ஆண்டளவில் எய்த எதிர்பார்த்துள்ள நிலையில், இந்த கண்காட்சி என்பது இந்த இலக்கை எய்த மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்குவதாக அமைந்திருக்கும். அத்துடன் இலங்கையின் தங்கம் மற்றும் மாணிக்கக்கல் துறை பற்றி சர்வதேச ரீதியில் சிறந்த கீர்த்தி நாமத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும்' என்றார்.
 
2003 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில், இலங்கை அரசாங்கம் SLGJA ஐ துறைசார் முன்னோடியாக நியமித்திருந்ததுடன், துறையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், தலைமைத்துவ ரீதியில் கொள்கைகளை வகுக்கவும் எதிர்பார்த்திருந்தது. இதனை தொடர்ந்து, அரசாங்கத்தின் தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் நெருக்கமான முறையில் தனது செயற்பாடுகளை இந்த சம்மேளனம் முன்னெடுத்து வருகிறது. தற்போது SLGJA இல் 350 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் காணப்படுவதுடன், இதில் நாட்டின் 75 வீதத்துக்கும் அதிகமான மாணிக்கக்கல் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்களும் உள்ளடங்கியுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X