Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 10 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டில் 266 நிறுவனங்களுக்கான வருமானம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.7% இனால் சரிவடைந்து 66.6 பில்லியன் ரூபாய்களாக பதிவாகியிருந்தது. சில பிரதான துறைகளில் பதிவாகியிருந்த மந்த கதியிலான செயற்பாடுகள் இதற்கு காரணமாக அமைந்திருந்ததென ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ரிசேர்ச் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு, பானங்கள் மற்றும் புகையிலைத் துறை (-35%), காப்புறுதி (-41%) மற்றும் மூலதனப் பொருட்கள் (-23%) போன்றவற்றில் அதிகளவு வீழ்ச்சி பதிவாகியிருந்தது. எவ்வாறாயினும், வங்கிகள் (+17%), தொலைத்தொடர்பாடல் (+259%), மூலப் பொருட்கள் (+101%) மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிதிகள் (+3%) ஆகியன நேர்த்தியான பெறுபேறுகளை பதிவு செய்திருந்தமை காரணமாக, மேலே குறிப்பிட்ட எதிர்மறையான பெறுமதிகளின் தாக்கம் சீர் செய்யப்பட்டிருந்ததாக ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ரிசேர்ச் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உணவு, பானம் மற்றும் புகையிலை, காப்புறுதி மற்றும் மூலதன பொருட்கள் போன்ற துறைகளில் நுகர்வோர் தமது செலவீனத்தை குறைத்திருந்தமை காரணமாக எதிர்மறையான பெறுபேறுகள் பதிவாகியிருந்தன. சிலோன் டொபாக்கோ கம்பனியை பொறுத்தமட்டில் அதன் வருமானம் பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்தது. உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் நிர்வாக செலவு உயர்வு போன்ற காரணிகளால் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட் லிமிடெட் -195% வருமானத்தை பதிவு செய்திருந்தது. நிதி வருமான வீழ்ச்சி காரணமாக மெல்ஸ்டாகோர்ப் வருமானம் -20% வீழ்ச்சியடைந்திருந்தது. குறைந்த நுகர்வோர் கோரல் மற்றும் விற்பனை செலவு அதிகரிப்பு போன்ற காரணிகளால் நெஸ்லே லங்கா வருமானம் -17% வீழ்ச்சியடைந்திருந்தது.
மேற்படி நிறுவனங்களின் பங்களிப்புடன் உணவு, பானம் மற்றும் புகையிலை துறை முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 35% சரிவை பதிவு செய்திருந்தது. செலிங்கோ இன்சூரன்ஸ், ஜனசக்தி இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் எதிர்மறையான பங்களிப்புடன் காப்புறுதி துறை வருமானம் 41% வருமான சரிவை பதிவு செய்திருந்தது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் காரணமாக பின்னடைவை எதிர்நோக்கியிருந்த விருந்தோம்பல் துறையின் காரணமாகவும், நாணயமாற்று பெறுமதி இழப்பு மற்றும் புதிய முதலீடுகளில் பண முதலீடுகள் போன்றவற்றால் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் வருமானம் -50% ஆக பதிவாகியிருந்தது. இதன் காரணமாக மூலதன பொருட்கள் துறை வருமானம் -23% வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது.
வங்கியியல் துறை இலாபம் 17% இனால் அதிகரித்து 23 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இதில் ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியன பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தன.
தொலைத்தொடர்பாடல் துறை கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் 259% வருமான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. டயலொக் அக்சியாடா பிஎல்சி இதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது.
மூலப்பொருட்கள் துறை 101% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில் டோக்கியோ சீமெந்து கம்பனி 257 மில்லியன் ரூபாய் வருமானத்தை பதிவு செய்திருந்தது. செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் 15% வளர்ச்சியையும் பதிவு செய்திருந்தது.
பன்முகப்படுத்தப்பட்ட நிதித் துறைகளை பொறுத்தமட்டில் LOLC, LB ஃபினான்ஸ் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் கம்பனி ஆகியன முறையே 13%, 27% மற்றும் 6% வளர்ச்சியை பதிவு செய்திருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago