2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

4ஆம் காலாண்டில் 7 சதவீத வருமான அதிகரிப்பை ஈட்டியுள்ள கெய்ன் இந்தியா

A.P.Mathan   / 2014 மே 14 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெய்ன் இந்தியா நிறுவனத்தின் வருமானமானது 3.1 பில்லியன் அமெரிக்க டொலராக அமைந்துள்ளதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடாந்த அதிகரிப்பானது 7 சதவீதமாக அமைந்துள்ளதென கெய்ன் இந்தியா நிறுவனத்தின் 4ஆம் காலாண்டுக்கான நிதியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதொடர்பாக கெய்ன் இந்தியா நிறுவனத்தின் இடைக்கால நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.இளங்கோ தெரிவிக்கையில், கடந்த நிதியாண்டில் எமது செயல் திறனானது எமது துறையில் பெரும் பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதனால் உற்பத்தியில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு அனைத்து பங்குதாரர்களின் இறக்குமதி செலவீனத்தையும் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் 200 மில்லியன் எண்ணெய் பீப்பாய்களையும் மற்றும் நாள் ஒன்றுக்கு 200,000 பீப்பாய்களை பெற்றுக் கொள்வதற்கான மைல் கல்லையும் எமது நிறுவனம் எட்டியுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் மன்னார் கடல்பரப்பிலுள்ள எரிவாயு கண்டுபிடிப்பு தொடர்பாக இலங்கை அரசுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் கெய்ன் இந்தியா நிறுவனம், அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை வர்த்தகமயமாக்கி அதனூடாக பணத்தை முதலீடு செய்வதற்கும் மேலும் வருமானத்தை ஈட்டக்கூடிய தொலைநோக்கு ஆற்றல் கொண்ட ஒரு கண்ணோட்டத்தை செலுத்துமாறும் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள எரிவாயு அகழ்வு நடவடிக்கைகளுக்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கையாக மதிப்பீடுகள் மற்றும் வர்த்தக ஆய்வுகளையும் மேற்கொள்ள கெய்ன் இந்தியா நிறுவனம் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்மானித்தது.

2013 நவம்பர் மாதத்துக்கான ஆண்டறிக்கையின்படி, மன்னார் கடல் பரப்பின் தெற்கிலுள்ள M 5 தொகுதிக்கான ஏலச் சுற்றிலும் நிறுவனம் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X