2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

4700 முன்னாள் போராளிகளுக்கு ரூ.500 மில்லியன் கடனுதவி

A.P.Mathan   / 2013 ஜூலை 05 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

500 மில்லியன் ரூபாவை, 4700 முன்னாள் போராளிகளுக்கு புதிய வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கடனுதவியாக வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த போராளிகளுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததை தொடர்ந்து, இவ்வாறு தமது புதிய வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குரிய கடனுதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
 
மொத்தமாக புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுதாயத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 11,573ஆக அமைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 1,549 பேருக்கு 300 மில்லியன் ரூபா பெறுமதியான ரூபாவை நிதியுதவியாக அரச வங்கிகளினூடாக வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இரண்டாவது கட்டத்துக்கமைய, 500 மில்லியன் ரூபாவை 4724 பேருக்கு கடனுதவியாக தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .