Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 பெப்ரவரி 29 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியானது, அறியப்படாத நாட்பட்ட சிறுநீரக நோயின் (CKDu) பரவலைத் தடுக்க உதவும் முயற்சிக்கு வங்கியின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, கின்னொறுவ, கிரந்துருகோட்டையில் உள்ள 50 குடும்பங்களுக்கு 5,000 லீற்றர் நீர் சேமிப்புத் தொட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
மழைநீரை சேமிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த தொட்டிகள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆறு மாதங்கள் வரை குடிநீர் மற்றும் சமையல் நீர் தேவைகளை வழங்க முடியும் என்றும், அப்பகுதியில் நிலத்தடி நீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் அசுத்தங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடையானது 2016 ஆம் ஆண்டு முதல் கொமர்ஷல் வங்கியால் ஆதரிக்கப்படும் 'மழைத்துளிகள்' திட்டத்தில் சமீபத்திய கட்டமாகும். இது சிறுநீரக நோயால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் தரமற்ற நிலத்தடி நீருக்கு மாற்றாக மழைநீரின் செயல்திறனைப் பற்றிய ஆராய்ச்சியை உள்ளடக்கிய திட்டமாகும்.
திட்டத்தின் முதல் கட்டத்தில், கொமர்ஷல் வங்கியிலிருந்து நீர் சேமிப்புத் தொட்டிகளைப் பெற்ற 25 குடும்பங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக சுத்திகரிக்கப்ட்ட மழைநீரை பயன்படுத்தினர், அதன் பிறகு அவர்கள் CKDu சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 50 குடும்பங்களின் வாழ்க்கை நிலைமைகள், உணவுப் பழக்கங்கள் மற்றும் உணவு முறைகள் போன்ற பிற மாதிரிகள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கிணற்று நீரை பருகிய குழுவைச் சேர்ந்த பலருக்கு நிலை 1 CKDu இருப்பது கண்டறியப்பட்டாலும், மழைநீரை பருகியவர்களில் எவருக்கும் நோயின் அறிகுறிகளை காட்டவில்லை என்றும், மழைநீரைப் பருகிய சில சிறுநீரக நோயாளிகளின் GFR அளவுகள் இருப்பதாகவும் ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது கட்டத்தில், கொமர்ஷல் வங்கி, வயம்ப பல்கலைக்கழகத்தின் போஷாக்குத் துறையால் மழைநீர் குடிப்பதற்கு ஏற்றதா என்பதைப் பற்றிய அறிவியல் பகுப்பாய்வை மேற்கொண்டது, இது நீரின் தரம், pH மதிப்பு, மின் கடத்துத்திறன் மற்றும் பெற்றுக்கொள்ளப்பட்ட மழைநீரின் பிற பண்புகள் குறித்து ஆழமான ஆராய்ச்சியை நடத்தியது.
மழைத்துளிகள் திட்டத்தின் வெற்றியை அவதானித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிறுநீரக நோய்களுக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் (CERTKiD) கின்னொறுவை பிரதேசத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 5000 லீற்றர் சேமிப்புத் தொட்டிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டது. அதன்படி கொமர்ஷல் வங்கி 5,000-லீற்றர் கொள்ளளவு கொண்ட மேலும் 50 தொட்டிகளை நன்கொடையாக வழங்கியது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago