2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

50,000 தொன் அரிசியை பங்களாதேஷிலிருந்து இறக்குமதி செய்ய திட்டம்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருநாட்டு அரசாங்கங்களின் உடன்படிக்கைக்கு அமைவாக முதல் தடவையாக 50,000 தொன் அரிசியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய பங்களாதேஷ் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கமைய ஒரு தொன் அரிசியின் செலவீனம், காப்புறுதி மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் உள்ளடங்கலாக 450 அமெரிக்க டொலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
”எம்மிடம் போதியளவு கையிருப்பு காணப்படுகிறது. எமது உற்பத்தியும் சிறந்த நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த ஏற்றுமதியின் காரணமாக எமக்கு எவ்விதமான இடர்நிலையும் ஏற்படாது” என பங்களாதேஷ் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இலங்கையில் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அரிசியின் விலை 36 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதற்கு நாட்டில் நிலவிய கடும் வரட்சி பங்களிப்பு செலுத்தியிருந்தது. 
 
இந்த உடன்படிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையிலிருந்து பிரதிநிதிகள் குழுவொன்று பங்களாதேஷ் பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X