2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

6ஆது நாளாக தொடர்ந்தும் பங்குச்சந்தை நேர்பெறுமதிகளை பதிவு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 17 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான ஆறாவது நாளாக பங்குச்சந்தை நேர்பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. இதேவேளை, மொத்தப்புரள்வு பெறுமதி தொடர்ச்சியான நான்காவது நாளாக 1 பில்லியன் பெறுமதியை கடந்திருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் ஆகிய பங்குகள் இதில் 45% பங்களிப்பை வழங்கியிருந்தன.

வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. மேலும், உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது அவதானிக்கப்பட்டது. சம்பத் வங்கி பங்குகள் மீது கலந்த ஈடுபாடு காணப்பட்டது. டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் த ஃபினான்ஸ் கம்பனி வாக்குரிமையற்ற பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்தனர்.

வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை சந்தையின் மொத்தப் புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஹற்றன் நஷனல் வங்கி, த ஃபினான்ஸ் கம்பனி வாக்குரிமையற்ற மற்றும் சம்பத் வங்கி பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறைச் சுட்டெண் 0.46 வீதத்தால் அதிகரித்திருந்தது.

ஹற்றன் நஷனல் வங்கிபங்கொன்றின் விலை 2.90 ரூபாவால் (1.88%) அதிகரித்து 157.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 3>181>300 பங்குகளால் அதிகரித்திருந்தது. த ஃபினான்ஸ் கம்பனி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் முறையே 0.40 ரூபா (4.94%) மற்றும் 4.30 ரூபாவால் (2.44%) அதிகரித்து 8.50 ரூபா மற்றும் 180.50 ரூபாவாக நிறைவடைந்திருந்தன.

சந்தையின் மொத்தப் புரள்வு பெறுமதியில் உற்பத்தித் துறை இரண்டாவதாக அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தது. (செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் பங்களிப்புடன்) இந்த துறை சுட்டி 1.13% அதிகரித்திருந்தது. செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் பங்கொன்றின் விலை 8.10 ரூபாவால் (2.94%) அதிகரித்து 284.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .