
முன்னணி பிரத்தியேக மூலிகை பராமரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் சுவதேஷி, கொஹோம்ப ஹேர்பல் சவர்க்கார பாவனையாளர்களை கௌரவிக்கும் வகையில் 'சுவதேஷி கொஹோம்ப தாகி நெவக்' எனும் ஊக்குவிப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக கொஹோம்ப ஹேர்பல் சவர்க்கார பாவனையாளர்களுக்கு வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை வெற்றிகொள்ள முடியும்.
வாராந்தம் வெற்றியாளர்களுக்கு கொஹோம்ப அன்பளிப்பு பொதிகளை பரிசாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் டிவிடி ப்ளேயர்கள் போன்றன மாதாந்த வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. டிசம்பர் மாதம் முற்பகுதியில் இடம்பெறவுள்ள மாபெரும் இறுதி பரிசிழுப்பில் மடிக்கணனி மற்றும் கலெக்சி ஸ்கூட்டர் ஒன்றும் பரிசாக வழங்கப்படவுள்ளன. சுவதேஷி கொஹோம்ப ஹேர்பல் சவர்க்காரத்தின் மேலுறை ஒன்றை அல்லது சுவதேஷி கொஹோம்ப 1 இல் 4 ஹேர்பல் சவர்க்கான சிக்கன பொதியின் மேலுறை ஒன்றை தமது பெயர் மற்றும் முகவரி விபரங்களை உள்ளடக்கி சுவதேஷி கொஹோம்ப தாகி நெவக், தபால் பெட்டி இல. 4, கந்தானை எனும் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் வாராந்தம் இடம்பெறவுள்ள பரிசிழுப்பில் வாடிக்கையாளர்கள் பங்குபற்ற முடியும். மேலுறைகளை அனுப்பி வைப்பதற்கான இறுதி திகதி 2013 நவம்பர் மாதம் 30 ஆம் திகதியாகும்.
வெற்றியாளர்கள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளின் ஊடாக வாரந்தம் அறிவிக்கப்படுவார்கள்.
நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'கொஹோம்ப ஒரிஜினல் ஹேர்பல் சவர்க்காரம் 1943ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது ஹேர்பல் சவர்க்காரம் எனும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது. ஏழு தசாப்த காலமாக மூலிகை துறையில் முன்னணி நாமத்தை கொஹோம்ப கொண்டுள்ளது. இந்த சாதனையை வேறெந்த உள்நாட்டு தயாரிப்பின் மூலமாகவும் முறியடிக்க முடியாது. அனைவரும் ஹேர்பல் சவர்க்காரம் தயாரிக்க முனைகின்றனர். ஆனாலும் சுவதேஷியின் தரத்தை அவர்களால் ஈடு செய்ய முடிவதில்லை. போலிகளை கண்டு ஏமாற வேண்டாம். மூலிகை சவர்க்காரத்தை கொள்வனவு செய்யும் போது, எப்போதும் சுவதேஷி வர்த்தக சின்னத்தை பார்த்து வாங்கவும்' என்றார்.
பல தலைமுறைகளாக நம்பிக்கையை வென்ற தயாரிப்பாக சுவதேஷி கொஹோம்ப அமைந்துள்ளது. சுவதேஷி ஹேர்பல் சவர்க்காரம் இயற்கையான வேம்பு (கொஹோம்ப) எண்ணெய்யை கொண்டுள்ளது. இது மிருதுவானது, ஆழமாக சென்று சுத்தம் செய்யக்கூடியது. சருமத்தின் இயற்கை அழகை மேம்படுத்துவதோடு, இயற்கையான பாதுகாப்பையும், கிருமிகளிலிருந்து பாதுகாப்பையும் வழங்குகிறது. கொஹோம்ப தயாரிப்புகளில் ஹேர்பல் சவர்க்காரம், ஹேர்பல் வெளிப்படை சவர்க்காரம், ஹேர்பல் பேபி தெரிவுகள், ஹேர்பல் சாம்பு, ஹேர்பல் ஃபேசியல் வொஷ் மற்றும் ஹேர்பல் பவுடர் போன்றன உள்ளடங்கியுள்ளன.
1941ஆம் ஆண்டு கந்தானையில் தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேஃப்பிளஸ், கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், அப்சரா வெனிவெல், பர்ல்வயிட், லக்பார் ஆடை சவர்க்காரம், பிளாக் ஈகள் பர்ஃவியும் மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான 'லிட்டில் ப்ரின்சஸ்' ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை சர்வதேச தரச் சான்றிதழான ISO 9001:2008 க்கு அமைவாக மேற்கொள்கின்றமை விசேட அம்சமாகும்.