Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசியப் பங்காண்மை மற்றும் வியாபார அமர்வு (SAPS) விருதுகள் வழங்கலில் பாதுகாப்பு கண்டுபிடிப்புக்கான சிறந்த வேலைத்தள விருதை A&E லங்கா பெற்றுக்கொண்டதுடன், தேசிய தொழில்நிலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார NOSHE விருதுகள் வழங்கலில், வெண்கல விருதையும் தனதாக்கியிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் இம்மாதம் முறையே 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இரு வருடங்களுக்கு ஒரு முறை NOSHE ஏற்பாடு செய்யப்படுவதுடன், தேசிய தொழில்நிலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கல்வியகம் (NIOSH) ஊழியர் விவகாரம் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு மற்றும் ஊழியர் திணைக்களம் ஆகியன இணைந்து, இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றன. இதே போன்று, பிராந்தியத்தில் சிறந்த தர அபிவிருத்திக்கு முக்கியத்துவமளிக்கும் நிறுவனங்களைக் கௌரவிக்கும் நோக்குடன், SAPS விருதுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்த நிகழ்வில் பெருமளவான சிரேஷ்ட வியாபார தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
A&E லங்கா முகாமைத்துவப் பணிப்பாளர் பிரியந்த அளுத்வத்த கருத்துத்தெரிவிக்கையில், “A&E லங்காவின் வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும். ஒரே காலப்பகுதியில் தொழில்நிலை சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளில் இரு பெருமைக்குரிய விருதுகளை வென்றுள்ளமையானது, முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும்.
மனித திறமைகள், தொழில்நுட்பம் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் நாம் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்வதுடன், தொடர்ச்சியாகப் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நிலை சுகாதார மற்றும் பாதுகாப்பு நியமங்களைச் செயற்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
“A&E லங்காவில், பாதுகாப்பு மென்பொருள் ஒன்றை உள்ளகத் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரி ஒருவர் வடிவமைத்துள்ளார். குழுமத்தினால் இந்த முயற்சிக்குப் பெரும் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளைக்கொண்டு ஆபத்துக்களைக் கண்காணிப்பது மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய பல விடங்களைக் கண்காணிப்பது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
தற்போது இந்த மென்பொருள் சர்வதேச A&E பாதுகாப்பு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுவதற்கு மெருகேற்றப்படுகிறது. அதுபோலவே, Safety Observation & Coaching (SOC) என்பது 6 நிமிட நேர செயன்முறையாகும். இது உலகளாவிய ரீதியில் A&E இனால் பயன்படுத்தப்படுகிறது. ஊழியர்களின் செயற்பாடுகளைப் பாதுகாப்பான தொழில் கலாசாரத்துக்கு மாற்றும் வகையில் இந்தச் செயன்முறை அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .