Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 02 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
Selfie Expert மற்றும் Leaderஆன OPPO தனது புதிய F7 அலைபேசியைஅறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய Selfie Expert அலைபேசி,Artificial Intelligence (AI) இனால் வலுவூட்டப்பட்டுள்ளதுடன், ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் வகையில் அமைந்துள்ளது.
F7இல் காணப்படும் மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பத்தின் ஊடாக selfie புகைப்படங்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன்,மேலும் பல AI வலுவூட்டப்பட்ட செயற்பாட்டு அம்சங்கள் காணப்படுகின்றன.
முழுத்திரை அம்சத்துடன், மேம்படுத்தப்பட்ட பல்தரப்பட்ட செயற்பாட்டு மென்பொருள் ஊடாக F7இனால் நுகர்வோருக்குச் சிறந்த பாவனையாளர் அனுபவம் வழங்கப்படுகிறது. 54,990 ரூபாய் எனும் விலையில் காணப்படும் OPPO F7,64GB உடன் 4GB RAM கொண்டுள்ளது. நாடுமுழுவதிலும் ஏப்ரல் 25ஆம் திகதி முதல் விற்பனைக்காக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
Solar Red, Moonlight Silver மற்றும் Diamond Black ஆகிய மூன்று வர்ணங்களில் இவை காணப்படும். OPPO விரைவில் சந்தையில் F7 128GB மற்றும் 6GB அம்சங்களைக் கொண்ட தெரிவை Solar Red மற்றும் Diamond Black ஆகிய வர்ணங்களில் 69,990 எனும் விலையில் அறிமுகம் செய்யும்.
OPPO அறிமுக நிகழ்வில், தனது சர்வதேச விஸ்தரிப்புத் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய சந்தைகளில் பிரவேசிக்க OPPO திட்டமிட்டுள்ளது.
OPPO ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி கருத்துத் தெரிவிக்கையில்,“OPPO F7 மாதிரி selfie புகைப்பட உள்ளம்சங்கள் மற்றும் இதர மேம்படுத்தல்களுடன் Artificial Intelligence தொழில் நுட்பத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் காணப்படும் High Dynamic Range (HDR) உடனான 25 MP கமரா போன்றன, OPPO குடும்பத்தின் சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. இளம் வாடிக்கையாளர்களின் முதல் தெரிவாகவும் அமைந்துள்ளது. உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்தபாவனையாளர் அனுபவம் ஆகியவற்றை நாடுவோருக்கு சிறந்த தீர்வாக அமையும்” என்றார்.
F7 இல் காணப்படும் high-resolution 25MP முன்புற கமரா real-time High Dynamic Range (HDR) உணரியைக் கொண்டுள்ளது. F7 இல் அதிகளவு விவரங்களையும் கொண்டிருக்கும். உயர் மட்ட விவரங்கள், லுமினென்ஸ் மற்றும் வர்ணங்கள் போன்றவற்றை சூரிய ஒளியில் அல்லது நிழலில் படம் எடுக்கும் போது, டிஜிட்டல் கமராக்களில் எடுக்கும் படங்களுக்கு நிகரான, சிறந்த தரம் வாய்ந்த படங்களை வழங்கும்.
எனவே,பாவனையாளருக்கு அதிகளவு கட்டுப்பாடு காணப்படுவதுடன், பிரகாசமான மற்றும் குறைந்த ஒளி காணப்படும் சூழல்களில் படங்கள் எடுக்கும் போது சிறந்த காட்சியை வழங்கும்.
The HDR படங்கள்,AI Beauty 2.0 உடன் காணப்படுவதால்,வயது மற்றும் பால் தோற்றமெருகேற்ற அழகியல் அம்சங்களை வழங்கக்கூடிய திறனை கொண்டிருக்கும். selfie இரசிகர்களுக்கு மேலான அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும்.
OPPO முதலில் AI Beauty Recognition தொழில்நுட்பத்தை F5 இல் அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக, selfiesகள் அதிகளவு அசலானவையாகவும், நடுத்தர அளவானவையாகவும், பிரத்தியேகமானவையாகவும் காணப்படும்.
நவீன F7 இல், இரண்டாம் தலைமுறை AI Beauty 2.0 தொழில்நுட்பம் உள்ளடங்கியுள்ளதுடன், இது selfie புகைப்படங்களின் தரத்தை மேலும் உயர்த்துவதாக அமைந்துள்ளது.புதிய மேம்படுத்தல்களில், மிகவும் துல்லியமான முகக்கண்காணிப்புதிறன் காணப்படுவதுடன், சிறந்த அழகியல்படுத்தல் நுட்பங்கள் பால் மற்றும் வயது, சுய பயிலல் இயலுமைகளுடன் பாவனையாளர் தெரிவு மற்றும் பெறுமதிசேர்க்கப்பட்ட களிப்பூட்டும் அம்சங்களுடன் காணப்படும்.
AI Beauty 2.0 தொழில்நுட்பத்தினூடாக 296 முகபாவனைகள் ஸ்கான் செய்யப்படும். முதலாம் தலைமுறை தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில், இது 20%மேம்பாடு ஆகும். இதனூடாக அதிகளவு ஒப்பீட்டு ரீதியான மற்றும் துல்லியமான முகபாவனை இனங்காணல் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, நபர் ஒருவரின் வயது,பாலினம்,சருமம்,வர்ணம் மற்றும் சருமத்தின் வகைபோன்றன வெவ்வேறு வகைப்படுத்தப்பட்டு இனங்காணப்படுகின்றன. இதில்,நான்கு தனிநபர் தலைப்புகள் - உயர்ந்தமட்டத்தில் பேணப்படுகின்றன.
மேம்படுத்தப்பட்ட 2280 x 1080 காட்சியமைப்பு,6.23-inch FHD+ சுப்பர் முழுத்திரை போன்றவற்றைக் கொண்ட F7, அதிக வர்ணத்தைச் சேர்ப்பதாகவும்,vivid மற்றும் சிறந்தகாட்சி அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. பெரியதிரை உங்கள் உள்ளங்கைக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago