S.Sekar / 2021 மார்ச் 26 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 இற்கான நிறுவனத்தினுடைய மிகச்சிறந்த செயற்திறனாளர்களைப் பாராட்டுவதற்கும் மற்றும் கௌரவிப்பதற்குமாக தனது முதலாவது வருடாந்த டிஜிடல் விற்பனை மாநாட்டை AIA இன்ஷுரன்ஸ் நடாத்தியிருந்தது. 'உங்களுக்குள் இருக்கும் சூப்பர் ஹீரோவினைத் தட்டி எழுப்புங்கள்' எனும் கருப்பொருளில் தங்களது விமர்சையான வெற்றிக் கொண்டாட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 2663 வெல்த் பிளேனர்கள் டிஜிடல் வழியாகத் திரண்டிருந்ததைப் பார்க்கக்கூடியதாகவே இருந்தது. AIA வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்பிற்கு அப்பால் சேவையாற்றும் அதி உயர் அர்ப்பணிப்பு மற்றும் தியாகப் பண்புகளைக் கொண்ட தங்களது துறையில் மிகச்சிறந்தவர்களாக மிளிர்ந்து, வளர்ந்து வரும் வெற்றியாளர்களே இதன்போது கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
'உங்களுக்குள் இருக்கும் சூப்பர் ஹீரோவினைத் தட்டி எழுப்புங்கள்' எனும் கருப்பொருளானது AIA இனுடைய பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவைகளை வழங்கும், மற்றும் தங்களையும், தங்களினது குடும்பத்தினையும் பாதுகாக்கும் இலங்கையர்களுக்கு உதவும் மிகச்சிறந்த செயற்திறனாளர்களின் அர்ப்பணிப்பினை அடையாளப்படுத்தி, கௌரவித்து அவர்களுக்குள் இருக்கும் சூப்பர் ஹீரோவிற்கான தூண்டுதலைப் பாராட்டுவதையே நோக்காகக் கொண்டமைந்திருந்தது.
37 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
51 minute ago