S.Sekar / 2021 மார்ச் 22 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
Yamaha Motor Co. Ltd, Japan (YMC) நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற முகவராகத் திகழும் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (பிரைவட்) லிமிடெட் (AMW), உலகத் தரம் வாய்ந்த இரு சக்கர வண்டி ஒன்றின் உரிமையாளராகும் வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளது. நிபுணத்துவமான பராமரிப்பு மற்றும் செலுத்தும் பணத்துக்கு உயர் பெறுமதியுடன் இந்த வாய்ப்பை வழங்குகின்றது. இந்தத் திட்டத்தினூடாக, எந்தவொரு Yamaha மோட்டார் சைக்கிள் /ஸ்கூட்டர் ஒன்றை நிறுவனம் மீள் கொள்வனவு செய்து, அதனை புத்தம் புதிய நிலைக்கு ரீகண்டிஷன் செய்து, பின்பு ஒப்பற்ற விலையில் சாரதிகளுக்கு அதனை வழங்க முன்வந்துள்ளது.

இந்த புதிய AMW – Yamaha தெரிவுகளினூடாக, மோட்டார்சைக்கிள் செலுத்துநர்களுக்கு சிறந்த சேவையுடன், பெருமளவு பெறுமதி சேர்ப்புகள் போன்றன வழங்கப்படுவதுடன், Yamaha மோட்டார் சைக்கிள் /ஸ்கூட்டர் ஒன்றை செலுத்தும் அனுபவத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.
இந்த புதிய கைகோர்ப்பு தொடர்பில் AMW பயணிகள் வாகனப் பிரிவின் பணிப்பாளர் யொஹான் டி சொய்ஸா கருத்துத் தெரிவிக்கையில், “Yamaha வர்த்தக நாமத்தைச் சூழ உண்மையான சைக்கிள் ஒன்றை செலுத்தும் கலாசாரத்தை உருவாக்குவது என்பது எப்போதும் எமது பணிகளின் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களுக்கு உயர் தர அனுபவத்தை வழங்குவதாக இந்தத் திட்டம் அமைந்திருப்பதுடன், நீண்ட காலத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.' என்றார்.
200 க்கும் அதிகமான அர்ப்பணிப்பான, பயிற்சிகளைப் பெற்ற, நிபுணத்துவமான சேவை நிலையங்களையும், விற்பனையாளர்களையும் நாடு முழுவதிலும் கொண்டுள்ள Yamaha> மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க சேவை, நிபுணத்துவ ஆலோசனை போன்றவற்றை பல வருட கால அனுபவத்துடன் வழங்குகின்றது. மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு உயர் தரம் மற்றும் பராமரிப்பு போன்றன உறுதி செய்யப்படுவதுடன், இவ்வாறான பராமரிப்பை அவர்களால் வேறெங்கும் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கும். அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் போன்றன பராமரிப்பு சேவை மற்றும் பழுதுபார்ப்பின் போது பயன்படுத்தப்படுகின்றன. சகல ரீகண்டிஷன் செய்யப்பட்ட two-wheeler களும் 3 மாதங்கள் அல்லது 3000 கிலோமீற்றர்கள் எனும் உத்தரவாதத்தைக் கொண்டுள்ளன. விலைகளும் வெளிப்படையானதாக அமைந்திருக்கும் என்பதுடன், எவ்விதமான தரகுக் கட்டணங்கள் அல்லது மேலதிகக் கட்டணங்களையும் கொண்டிருக்காது.
38 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
52 minute ago