Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 13 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எயார்டெல் லங்கா, இந்தியாவிற்கு பயணம் செய்யும் உள்ளூர் எயார்டெல் பாவனையாளர்களுக்காக புதிய Roaming Packகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை முழுவதும், தமது வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் கட்டுப்பாடற்ற இணைப்பு அனுபவத்தை பெற்றுக் கொள்வதை உறுதிசெய்ய சிறந்த மதிப்பை வழங்குவதில் எயார்டெல் கவனம் செலுத்துகிறது. இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் செய்யும் தமது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதைக் கவனித்துள்ள நிலையில், எயார்டெல் இந்தியா சர்வதேச Roaming Packகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த மதிப்பை எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளதாக எயார்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதன் விளைவாக, எங்கள் வாடிக்கையாளர்கள் இப்போது தங்களது அன்புக்குரியவர்களுடன் இணைந்திருக்க முடியும் மற்றும் வீட்டில் இருப்பது போன்ற அனுபவத்தை தருவதுடன், அது மேலதிக செலவையும் குறைக்கிறது. சந்தையில் மிகவும் மலிவு விலை சர்வதேச Roaming கட்டணத்தை, இந்தியா முழுவதும் எயார்டெல் உலகத் தரம் வாய்ந்த வலையமைப்புடன் இணைப்பதன் ஊடாக, இந்த புதிய இந்திய சர்வதேச Roaming திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்றுமில்லாத சர்வதேச Roaming அனுபவத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் - இது இரு நாடுகளுக்கும் சிறந்தது.” என எயார்டெல் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷிஷ் சந்திரா தெரிவித்தார்.
எயார்டெல் பாவனையாளர்கள், இந்தியாவிற்கு அடிக்கடி செல்லும் பயணிகள், புனித யாத்திரை குழுக்கள், வர்த்தக மற்றும் ஏற்றுமதி சமூகங்கள் மற்றும் இந்திய சுற்றுலா விடுமுறைகளை ஏற்பாடு செய்யும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட பலர், இப்போது எயார்டெல்லின் மலிவு மற்றும் அணுகக்கூடிய இந்திய சர்வதேச Roaming Packageஐப் பயன்படுத்தலாம். இந்தியாவின் மிகவும் பரந்த மற்றும் சிறந்த வலையமைப்புடன், அவர்கள் 'வீட்டில் இருப்பதைப் போன்ற' அனுபவத்தை பெறலாம்.
Recharging செய்த பின்னர் USSD Activation மூலம் Packageஐ எளிதாக செயல்படுத்த முடிவதுடன், மேலும் எயார்டெல் Online Portal, விற்பனை நிலையங்களில் (Over-the-counter -OTC), Recharge.lk போன்ற மின்னணு பணப்பைகள் மற்றும் My Airtel App ஆகியவற்றின் மூலம் எளிதாக செயல்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளது.
எயார்டெல் லங்கா, இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொழில்நுட்பத்தை மாற்றியமைத்து வருகிறது. இதன் புதிய 4G Freedom Packகளை அறிமுகப்படுத்தி, அனைத்து புதிய 4G வலையமைப்புடன் முழுமையாக பொருந்தி, முற்கட்டணம் செலுத்தும் இணைப்புகளை மேம்படுத்தியுள்ளது.
8 hours ago
8 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Aug 2025