2025 ஜூலை 26, சனிக்கிழமை

Assetminder தீர்வுக்கு சர்வதேச விருது

Gavitha   / 2017 மார்ச் 07 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

Auxenta Inc. (Auxenta) வடிவமைத்துள்ள, புத்தாக்கம் கொண்ட வாகனத் தொகுதி பராமரிப்பு மற்றும் பட்டறை முகாமைத்துவத் தீர்வான Assetminder, அயர்லாந்திலுள்ள டப்ளின் மாநகரில் இடம்பெற்ற அயர்லாந்தின் வாகனத் தொகுதி போக்குவரத்து விருதுகள் 2017 நிகழ்வில் புத்தாக்க விருதை வென்றுள்ளது.  

இவ்விருதானது, தொழிற்றுறையில் ஒரு பொருளோ அல்லது சேவையோ புத்தாக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்து, தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்தும் போது, அதற்கான அங்கிகாரமாக வழங்கப்படுகின்றது. அயர்லாந்திலுள்ள தனது வாடிக்கையாளர் நிறுவனமான Assetminder Inc. இற்கு Auxenta இத்தீர்வை வடிவமைத்து, கட்டமைப்புச் செய்துள்ளது.  

இச்சாதனை தொடர்பில் Auxenta Inc. நிறுவனத்தின் ஸ்தாபகரும், பணிப்பாளர் சபைத் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிரசாத் நாணயக்கார கருத்து வெளியிடுகையில், “வாகனத் தொகுதிகளுக்கான போக்குவரத்து விருதுகள் 2017 நிகழ்வில் புத்தாக்க விருதை Assetminder பெற்றுள்ளமை எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு கௌரவமாகும். இத்தகைய சர்வதேச அளவிலான இனங்காணல் அங்கிகாரங்கள், மென்பொருள் வடிவமைப்பில் எமது தனித்துவமான அணுகுமுறை, பொறியமைப்பு நடைமுறையில் எமது ஆழமான புரிந்துணர்வு மற்றும் தரத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.. இலங்கையில் நாம் கொண்டுள்ள உலகத்தரம் வாய்ந்த திறமைசாலிகளை, வெளியுலகுக்குக் காண்பிக்கவும் அவை உதவுகின்றன” என்று குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X