2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

Asus ROG Masters Sri Lanka 2017 அறிமுகம்

Editorial   / 2017 ஜூன் 16 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

Asus ஸ்ரீ லங்கா, இலங்கையில் Asus ROG Masters Sri Lanka 2017 அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதிகளவு பேசப்படும் மற்றும் நவீன e-விளையாட்டு நிகழ்வுக்கான, தகைமை காண் போட்டியாக இது அமைந்துள்ளது. இதன் மூலமாக, இலங்கையின் கேமர்களுக்கு, தமது
e- விளையாட்டுக் கனவை நனவாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளதுடன், பெருமளவு பரிசுத்தொகையை வெல்லவும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான தகைமையை பெறவும் வாய்ப்பை வழங்குகிறது.  

ஜுன் மாதம் ஆரம்பமாகும் இந்த போட்டியில், நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த அணிகள் பங்கேற்கும். Dota 2 மற்றும் Counter-Strike போன்ற போட்டிகளில், இவர்கள் போட்டியிடுவர். Global Offensive (CS:GO) போட்டித்தொடர்களின் மூலமாக, ஆரம்ப சுற்று மற்றும் இறுதிச்சுற்றுகளிலிருந்து சிறந்த உள்நாட்டு திறமைசாலிகள் தெரிவு செய்யப்படுவர். இதில் வெற்றியீட்டுவோர், பெங்களுரில், பிராந்திய மட்டத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள். 

இந்நிகழ்வில், Asus ஸ்ரீ லங்காவின் இலங்கைக்கான நாளிகை முகாமையாளர் இஷ்கி இர்ஷாட் கருத்துத் தெரிவிக்கையில், “ROG Masters என்பது, உலகின் சிறந்த e-விளையாட்டு போட்டித்தொடராக அமைந்துள்ளது. இலங்கையின் கேமிங் ஆர்வலர்கள் மத்தியில், இந்த போட்டிகளை அறிமுகம் செய்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம். அண்மைக்காலங்களில், இலங்கையின் கேமிங் துறை எவ்வாறு வளர்ச்சி கண்டுள்ளது என்பது, மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இந்த விளையாட்டில், மேலும் பல இளைஞர்கள், தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய வண்ணமுள்ளனர்” என்றார். 

“e-விளையாட்டுகளின் பின்னணியில் இயங்கும் வர்த்தக நாமம் எனும் வகையில், இலங்கையில், கேமிங் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், உள்நாட்டு கேமர்களுக்கு, புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் ஆளுமைகளை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும். எதிர்வரும் வாரங்களில் இந்த போட்டிகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதைக் காண நாம் ஆர்வத்துடன் உள்ளோம், சகல பங்குபற்றுநர்களுக்கும் அவர்களின் சவால்களை எதிர்கொள்ள வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்றார். 

Asus ROG Masters ஸ்ரீ லங்காவினால் மொத்தப்பரிசுத் தொகையாக, 400,000 ரூபாய் வழங்கப்படுவதுடன், இரு வெற்றியீட்டும் அணியினருக்கும் சகல செலவீனங்களுடனும் கூடிய ​ெபங்களுர் சென்று பிராந்திய போட்டியில் பங்கேற்று திரும்பி வருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். போட்டிக்கான பதிவுகள், இன்று ஆரம்பமாகும் என்பதுடன், முதல் சுற்றுகள், ஜூன் மாதம் இறுதிப்பகுதியில் நடைபெறும். இறுதிப்போட்டி கிரெஸ்கட் பொலெவார்ட்டில் ஜூலை 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .