Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 28 , பி.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
BPPL ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம், அந்நிறுவனத்தின் 10% பங்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஆரம்ப பங்கு வழங்கல் (IPO) ஊடாக பங்கொன்று 12 ரூபாய் என்ற ரீதியில் 30,685,000 பங்குகளை வழங்கி 368,220,000 மில்லியன் ரூபாய் நிதியை சேகரித்துக் கொள்ளவுள்ளது. வழங்கல் விலையில் சந்தை மூலதனம் ரூ. 3.7 பில்லியன் ஆகும்.
இந்த பங்கு வழங்கல் மூலமாக, BPPL நிறுவனத்தில் அதன் உரிமைத்துவத்தை 23.4% இலிருந்து 13.4% வீதமாகக் குறைத்துக்கொள்ளும் Hirdaramani இன்வெஸ்ட்மன்ட் ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்நிறுவனத்தில் Infinity கெப்பிட்டல் (பிரைவெட்) லிமிடெட் மற்றும் LOLC இன்வஸ்ட்மன்ட் லிமிடெட் ஆகியன முறையே 50.3% மற்றும் 26.3% பங்குகளைத் தக்க வைத்துக்கொண்டுள்ளன. தற்போதைய பங்கு உரிமைத்தாரர்கள் ஆரம்ப பட்டியலிலிருந்து குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு நிறுவனத்தினுள் நிலைத்திருப்பர்.
இந்த ஆரம்ப பங்கு வழங்கலானது (IPO), கடந்த காலங்களில் பாரிய வளர்ச்சியை எய்திய தனியார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய வர்த்தகத்தின் பரந்த அடிப்படை உரிமம் ஆகும். இந்த வழங்கலானது, 2017 மார்ச் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு முடிவுத்திகதிக்கு முன்னதாக மிகையாக வாங்கப்பட்டால் தவிர, 2017 மார்ச் 24 ஆம் திகதி முடிவடையவுள்ளது.
இந்த பங்கு வழங்கலுக்கான நிதி ஆலோசகர்களாகவும், முகாமையாளர்களாகவும் CT CLSA கெப்பிட்டல் (பிரைவெட்) லிமிடெட் செயற்படவுள்ளது. 2017 பெப்ரவரி 21ஆம் திகதி தொடக்கம் ஆரம்ப பங்கு வழங்கல் ஆவணப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த பங்கு வழங்கல் குறித்து BPPLஇன் பிரதான நிறைவேற்று அதிகாரி முனைவர். அனுஷ் அமரசிங்க கருத்து தெரிவிக்கையில், நாம் “BPPL இற்கான சிறப்பான திட்டத்தைக் கொண்டுள்ளதுடன், அவற்றை எய்துவதற்கான சரியான பாதையில் பயணிக்கின்றோம். எதிர்கால மூலோபாய விரிவாக்கல் செயற்றிட்டங்கள் ஊடாக பாரிய வளர்ச்சியை எய்தக்கூடிய ஸ்தானத்தில் உள்ளமையினால், இந்த ஆரம்ப பங்கு வழங்கலானது பொதுமக்களுக்கும் சிறந்த முதலீட்டு வாய்ப்பாக அமையும். எமது செயற்பாடுகளை மேலும் சிறப்பாகவும், பொறுப்புணர்வுடனும் மேற்கொள்வதற்கான எமது நம்பிக்கையின் உறுதிப்பாட்டாக இதுவமைந்துள்ளது” என தெரிவித்தார்.
“பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் ரீதியில், எமது செயற்பாடுகளை மேலும் சிறப்பாகவும், பொறுப்புடனும் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும், எமது வாடிக்கையாளருக்கு மட்டுமன்றி, இலங்கையின் அறிவுத் தளத்துக்கும் பெறுமதி சேர்ப்பது குறித்து நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறோம். எமது தேசம் சுபீட்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உலகுக்கு எமது திறமையை வெளிக்காட்டி, தலைசிறந்த உள்நாட்டு நிறுவனங்கள் மத்தியில் பெருமையுடன் எம்மை நிலைப்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago